05/09/2025
🫡❤️ நேற்றிரவு 500 அடி பள்ளத்தில்
பஸ் விழுந்த போது தனது உயிரைப் பொருட்படுத்தாமல், கீழே இறங்கி பலரின் உயிரை காப்பாற்றிய #இராணுவ_வீரன்!
நேற்று இராவண எல்ல பகுதியில்
நடந்த பேருந்து விபத்தில் மூன்று
பேரைக் காப்பாற்ற துணிச்சலான முயற்சியில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தின் சிறப்புப் படை வீரர்
ஒருவர் இன்று பேசுபொருளாக மாறியிருக்கிறார்.
இராணுவத்திற்கு கிடைத்த தகவலின்படி, முதல் மீட்புக்குழு வீரர்கள் இரவு 9:20 மணியளவில் ராவண எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் விபத்து நடந்த இடத்திற்கு வந்தனர்.
சம்பவ இடத்தில், ஒரு பெரிய கூட்டம் கூடியிருந்தது, அவர்களில் சிறப்புப் படை டி-சர்ட் அணிந்த ஒரு இளைஞர் இருந்தார், அவர் ஒரு சிறிய குழுவிற்கு தலைமை தாங்கி பாதிக்கப்பட்டவர்களை
மீட்கத் தொடங்கினார்.
பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பேருந்து
நின்ற இடத்திற்கு மேலே இறந்த நான்கு பேரும், காயமடைந்த மூன்று பேரும் சிக்கிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சாதாரண மனிதர்களால் அந்த இடத்தை அடைவது மிகவும் கடினம் என்றாலும்,
அந்த இளைஞன் தனது உயிரைப் பொருட்படுத்தாமல், கீழே இறங்கி இறந்த மற்றும் காயமடைந்த அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றார்.
காயமடைந்தவர்களில் ஒருவருடன் கீழே இறங்கும்போது, அவரின் தலை ஒரு பாறையில் மோதியதால் பலத்த காயம் அடைந்தார். வலியையும் பொருட்படுத்தாது மீட்பு நடவடிக்கையில் அவர் தொடர்ந்து உதவியதாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்புப் பணிக்குப் பிறகு, அவருக்கு ஆரம்ப மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அந்த நபர் இலங்கை இராணுவத்தின் 2வது சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல்
W.M.V.M. பண்டாரா என்பது கண்டறியப்பட்டது.
விடுப்பில் வீட்டில் இருந்த
அதிகாரி, தனது வீட்டிற்கு அருகில்
நடந்த விபத்துக்கு பதிலளித்து, பாதிக்கப்பட்டவர்களை மீட்க உதவினார்.
போர்க்காலத்திலும் சரி, இயற்கை அனர்த்தங்களின் போதும் சரி, வீதி @விபத்துக்களின் போதும் சரி, தீ விபத்துக்களின் போதும் சரி எந்த இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும் நேரம், காலம், இரவு, பகல், மழை,
வெள்ளம், புயல் என எதையும் பொருட்படுத்தாமல் களத்திலிறங்கி
மக்களுக்காக போராடும் எமது நாட்டின்
படை வீரர்கள் எப்போதும் எமது அன்புக்கும் மரியாதைக்குமுரியவர்கள்..
By: Razana Manaf
Respect to all soldiers 🫡💚🇱🇰