Kuru TK

Kuru TK Director
Editor | Graphic Designer | Animator | Colorist

மீண்டும்...யாழில் வெந்து தணிந்தது காடு26-02-2023
22/02/2023

மீண்டும்...
யாழில்
வெந்து தணிந்தது காடு
26-02-2023

01/01/2023
 வெந்து தணிந்தது காடுஎமது திரைப்படம் பெப்ரவரி 5 முதல் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.....டிக்கட்டுக்களை பெற்றுக்கொள்ள...
29/12/2022


வெந்து தணிந்தது காடு

எமது திரைப்படம் பெப்ரவரி 5 முதல் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.....

டிக்கட்டுக்களை பெற்றுக்கொள்ளுங்கள்...

நான் உதவி இயக்குனராக பணியாற்றிய “ வெந்து தணிந்தது காடு “ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி பத்தாயிரம் பார்வையாளர்களை க...
01/12/2022

நான் உதவி இயக்குனராக பணியாற்றிய
“ வெந்து தணிந்தது காடு “ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி பத்தாயிரம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

எமக்கான ஒரு சினிமா கனவை நோக்கி ஓடும் பலரில் நானும் ஒருவனாக என் பங்களிப்பை கடந்த 5 வருடங்களாக செய்து கொண்டு வருகின்றேன்.

அந்த வகையில் ஒரு படைப்பு உருவாக்கம் சம்பந்தமாக அதிகளவான கள அனுபவமும் இல்லாத நேரத்திலேயே இத்திரைப்படத்தில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.
இவ்வாறான ஒரு கதையினை செய்யப்போவதாக ஒரு திரையிடலின் போது சந்தித்த வேளை மதிசுதா அண்ணா கூறினார். அப்போதிலிருந்தே அவரிடம் அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தேன் எந்த அளவில் வேலைப்பாடுகள் இருக்கின்றன எப்போது படப்பிடிப்பு ஆரம்பம் என்று அந்த நேரத்தில் நான் படித்துக்கொண்டிருந்தமையால் மனதில் ஒரு ஐயப்பாடும் இருந்தது ஏன் என்றால்

மதி அண்ணா எப்போதுமே யார் சினிமா என வந்தாலும்
“ நீங்கள் சினிமாவில் நீண்டகாலம் பயணிக்க வேண்டும் எனில் வருமானத்திற்கும் ஏதும் வழி செய்ய வேண்டும் என்பதையும் கல்வியை இதற்காக விடக்கூடாது “ என்பதையும் ஆணித்தரமாக எப்போதுமே கூறிவார் என் முதல் சந்திப்பிலும் இதைதான் முதலில் கூறினார்.

பின்னர் படப்பிடிப்பு ஆரம்பிக்கவும் எனது கற்கை நெறி முடியவும் சரியாக அமைய அன்றிலிருந்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நானும் இனணந்து கொண்டேன்

எந்த ஒரு துறைக்கும் கள அனுபவம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று. அது எனக்கு தாராளமாகவே அங்க கிடைத்தது. அது மட்டுமல்லாமல் சினிமாவை நேசிக்கும் பலரது நட்பு வட்டங்களும் அவர்களுடைய அனுபவங்களையும் சேர்த்து பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது.

போர்க்கால நேரடியான அனுபவங்கள் எனக்கு கிடையாது ஆனால் அது என்ன என்பதை இதில் பணியாற்றிய போது புரிந்து கொள்ள முடிந்தது.

வெந்து தணிந்தது காடு பலரின் யுத்தகால நினைவுகளை தாங்கி எனக்கு பலவகையான அனுபவங்களையும் மனிதர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தை திரையில் காணும் பலருக்கும் நினைவுகளை மீட்டுவதாகவும் அறியத்தருவதாகவும் அமையும்

இதில் என்னை நம்பி இனணத்துக்கொண்ட மதி அண்ணாவுக்கும் பணியாற்றிய சக கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி ❤️❤️❤️

https://youtu.be/D19RNnMwByk

நுழைவுச்சீட்டுக்களைப் பெற
https://www.enkada.events.vtk

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kuru TK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share