A Thavatheesan

A Thavatheesan வாழு வாழ விடு அவ்ளோ தான் தத்துவம்

FINAL CALL! Applications close TODAY.📅 15 July 2026🕔 5:00 PM📍 Cinnamon Grand, ColomboLimited seats • Shortlisted partici...
13/07/2026

FINAL CALL! Applications close TODAY.

📅 15 July 2026
🕔 5:00 PM
📍 Cinnamon Grand, Colombo

Limited seats • Shortlisted participants only

🌐 Apply now: www.smartunp.com

பெண்களும் இனிமேல் சம்பாதிக்கலாம்! நியாயமான முறையில் Uber சாரதியாக விபரங்கள் அறிய 0707555755 அழையுங்கள்
10/07/2026

பெண்களும் இனிமேல் சம்பாதிக்கலாம்! நியாயமான முறையில் Uber சாரதியாக

விபரங்கள் அறிய 0707555755 அழையுங்கள்

10/07/2026

துரோகிகள் வெளியில் இருப்பது இல்லை எம்முடந்தான் இருக்கிறார்கள் கண்டறிந்தால் நாம் வெற்றியடையலாம்

09/07/2026

யாழில் எனக்கு நடந்தது துரோகம் ஆனால் மக்கள் ஆதரவு நான் கொண்டுவந்துள்ள Uber சேவைக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி…. இனிமேல் எல்லாரும் Uber மட்டும் பாவியுங்கள்

இன்றைய நாளில் அன்று 2004...!!!!!!! 07.07.2004,ல்அமைச்சர்  #டக்ளஸ் தேவானந்தாவை  #படுகொலை செய்யும் நோக்கில் 2004,ம் ஆண்டு ...
07/07/2026

இன்றைய நாளில் அன்று 2004...!!!!!!!

07.07.2004,ல்

அமைச்சர் #டக்ளஸ் தேவானந்தாவை #படுகொலை செய்யும் நோக்கில் 2004,ம் ஆண்டு ஜுலை மாதம் 07,ம் திகதி கொழும்பு #கொள்ளுப்பிட்டியில் அவரது அலுவலகத்திற்குள் #தற்கொலைக் குண்டுத் தாக்குதல் புலிகளால் நடாத்தப்பட்டது.

குறித்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 02,பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உட்பட 04,பேர் உயிரிழந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 'பெட்ரோல் ஆக்டேன் 92' (Petrol Octane 92) மற்றும் 'ஆட்டோ டீசல்' (Auto ...
29/06/2026

இன்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 'பெட்ரோல் ஆக்டேன் 92' (Petrol Octane 92) மற்றும் 'ஆட்டோ டீசல்' (Auto Diesel) ஆகியவற்றின் விலைகளைக் குறைப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.

இதன்படி, ஒரு லிட்டர் 'பெட்ரோல் ஆக்டேன் 92'-இன் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 414 ரூபாவாகவும், 'ஆட்டோ டீசல்'-இன் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டு 382 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட இந்த விலைகள் ஜூன் 29 நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றன.

06.06.2026 #பாடலை பாடியதற்காக  #பயங்கரவாத  #தடைச் சட்டத்தில்  #கைது செய்ய  #முடியாது – அரச தரப்பு  ்கள் தலையீடு செய்து வ...
07/06/2026

06.06.2026

#பாடலை பாடியதற்காக #பயங்கரவாத #தடைச் சட்டத்தில் #கைது செய்ய #முடியாது – அரச தரப்பு ்கள் தலையீடு செய்து விடுவிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் #டக்ளஸ் வலியுறுத்து!

தவறான அல்லது சுயலாப அரசியல் வழிநடத்தல்களுக்கு எமது சமூதாயத்தின் ஒரு பகுதியினர் எடுபட்டு உணர்வு பூர்வமாக சிலவற்றை தவறாக புரிந்து கொண்டு சொல்லவோ எழுதவோ அல்லது பாடவோ முற்படுவதை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் உள்ளாக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புலிகளுடன் தொடர்புடைய பாடலை பாடியதற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள #சங்கீத்சனை யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தலைமையிடம் எடுத்துச் சொல்லி விடுவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இவ் விடையம் குறித்து அவர் மேலும் கூறுகையில் -

நான் ஆட்சியில் இருந்த காலத்தில் பிரபாகரனின் படத்தின் மீது இருந்து ஈர்ப்பின் காரணமாக ஒரு நிகழ்வொன்றில் ஓர் #இளைஞன் #பிரபாகரனது படம் பொறிக்கப்பட்ட #ரீசேட் ஒன்றை அணிந்து நடனமாடியிருருந்திருக்கின்றார்.
இந்த விடையத்தை அறிந்த பொலிசார் அவரை கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முற்பட்டனர்.

இந்த விடையம் தொடர்பாக அந்த இளைஞனின் தாயார் என்னிடம் வந்து நிலைமையை கூறி தனது கவலையை வெளிப்படுத்தியிருந்த நிலையில் நான் பொலிசாரிடம் தொடர்பு கொண்டு தயவுசெய்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவ்விடையத்தை கொண்டு செல்லாது சாதாரண சட்டங்களின் கீழ் அவ்விடயத்தை பார்க்க வேண்டும் என்று எடுத்துரைத்ததுடன் அந்த இளைஞன் தவறான வழிநடத்தலால் தான் அவ்வாறு மேற்கொண்டுவிட்டார் என்பதையும் சுட்டிக்காட்டி அவருக்கு பொது #மன்னிப்பு கொடுத்து விடுவிக்குமாக கோரியிருந்தேன்.

எனது கருத்தை ஏற்று குறித்த இளைஞரை பொலிசார் விடுவித்திருந்தனர்.

அதேபோன்று தற்போது யாழ்ப்பாணத்தில் மத்தியில் இருக்கும் ஆட்சியைச் சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.

இதேவேளை இன்றைய ஆட்சியாளர்கள் கூட வடக்கில் தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காக தமது தேர்தல் மேடைகளில் இவ்வாறான பாடல்களை ஒலிபரப்பிய அல்லது பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னெடுத்ததாக பல பதிவுகள் இருக்கின்றன.

இதேநேரம் குறித்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பொலிசாருடன் கதைத்து விடுவிக்கக் கூடிய ஆற்றல் இருக்கின்றதோ அல்லது எமது மக்கள் மீதான அவர்களுக்கு உணர்வு இருக்கின்றதோ தெரியாது.

இருந்தாலும் எமது மக்கள் அளித்த வாக்கின் பிரகாரம் நாடாளுமன்றில் இருப்பதால் இவ்விடையத்தை தமது தலைமையிடம் எடுத்துச் சொல்லி குறித்த இளைஞனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொண்டு செல்லாது விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

05/06/2026
பழங்கள் வாங்கும் போது எது இயற்க்கை எது இரசாயன பொருள் அடித்து என்று பார்த்துவாங்க ஒரு முறை
02/06/2026

பழங்கள் வாங்கும் போது எது இயற்க்கை எது இரசாயன பொருள் அடித்து என்று பார்த்துவாங்க ஒரு முறை

எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்…!இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு...
30/05/2026

எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்…!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒட்டோ டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 407 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், லங்கா சுப்பர் டீசல் 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 478 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேநேரம், ஒக்டேன் 92 ரக பெட்ரோல், 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 434 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 495 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

மண்ணெண்ணெய் 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 285 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது

#தீசன்

Address

Jaffna

Telephone

+94774737737

Website

Alerts

Be the first to know and let us send you an email when A Thavatheesan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share