25/03/2025
மனோஜ் பாரதிராஜா திடீர் மறைவு - அதிர்ச்சியில் திரையுலகு!
------------------------
இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, தனது 48ஆவது வயதில் காலமானார்.
அண்மையில், இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட நிலையில், வீட்டில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு, இன்று (25.03.2025) மாலை அவரது உயிர் பிரிந்துள்ளது.
தமிழ் திரைத்துறையில் கடந்த 1999 ஆம் ஆண்டு “தாஜ் மஹால்“ என்ற திரைப்படத்தின் மூலம் மனோஜ், கதாநாயகனாக அறிமுகமானார்.
அதை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் போன்ற வெற்றித் திரைப்படங்களில் நடித்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மார்கழி திங்கள்“ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இவற்றைவிட, ஈஸ்வரன், மாநாடு மற்றும் விருமன் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்கயில் மனோஜ் நடித்தார்.
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படத்தில் நடித்துள்ள அவர், கடைசியாக சினேக்ஸ் அன்ட் லட்டர்ஸ் (Snakes and Ladders) என்ற இணையத் தொடரில் நடித்திருந்தார்.
இந்நிலையில், மனோஜ் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மறைவுக்கு, திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், இரசிகர்கள் இரங்கத் தெரிவித்தும், நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.
4 #மனோஜ்