07/12/2024
அடுத்தவர்களிடம் கையேந்தற வலி பெரிய வலி.
இயலாமை எல்லோருக்கும் வரும்.
ஏறி இறங்கறது தான் வாழ்க்கை.
ஆனா சிலருக்கு இறங்கிட்டே இருக்கும்.
பட்ட கால்லயே படும் சொல்வாங்க அது போல.
அப்படி ஒரு இல்லாமை காலத்துல அவனுக்கு ஒரு கடினமான நேரம் வரும்போது சுத்தி இருக்கிறவங்க கிட்ட தான் போயி நிற்பான்.
அறிவுரைகள் ஆலோசனைகள் கிடைப்பது போல உதவிகள் அவ்வளவு சீக்கிரம் கிடைப்பதில்லை.
ஒவ்வொருவரிடமும் நின்று நின்று நின்று இல்லை என்று கூட சொல்லாமல் உதாசீனமும் புறக்கணிப்பும் நடந்துக்கொண்டே இருக்கும்.
குனிய குனிய குட்டுவார்கள்.
வேண்டுமே என்பதற்காக எல்லாத்தையும் பொறுத்து பொறுத்து சென்றால் கடைசி வரை அந்த அவமானங்கள் மட்டுமே மிஞ்சும்.
உதவி வரவே வராது.
அவனுக்கு அவன் தான் குரு.
அவனுக்கு அவன் அனுபவம் தான் டீச்சர்.
அது சொல்லி தர பாடத்தை எவனும் தரமுடியாது.
கத்துக்கங்க.
நிறைய கத்துக்கங்க.
நீங்க வேண்டாம் னு சொன்னாலும் காலம் தலையில் அடிச்சு சொல்லித்தரும்.
அதிலிருந்து நிறைய கத்துக்கோங்க.
இப்படியே போயிடாது எதுவும்.
இப்படியே போனா வாழ்க்கை இல்ல.
மேலே வருவோம்.
அடிப்பட்டு அடிப்பட்டு மிதிப்பட்டு மிதிப்பட்டு மேலே வர வாழ்க்கையில் தான் நிலைக்கும்.
அப்படி ஒரு நாள் வரும்.
அந்த ஒரு நாள் எல்லோர் வாசலிலும் வரும்.
கையேந்தற நிலைமை ஒரு நாள் கைகொடுக்க காத்திருக்கும்.
கண்டிப்பா எல்லா மாறித் தொலையும்.
காத்திருங்க!