26/11/2025
இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!
நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (26) காலை 8 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், நாளை (27) காலை 8 மணி வரையான அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இது செல்லுபடியாகும்.
அதற்கமைய கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நிலதண்டாஹின்ன மற்றும் மத்துரட ஆகிய பிரதேசங்களுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை செல்லுபடியாகும்.
இதேவேளை, மேலும் 7 மாவட்டங்களுக்கு அவதானத்துடன் இருக்குமாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், 12 மாவட்டங்களுக்கு விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த இடங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
எச்சரிக்கை மட்டம் 2 - அவதானத்துடன் இருக்கவும் (Amber)
பதுளை மாவட்டம்:
ஹல்துமுல்ல பசறை
களுத்துறை மாவட்டம்:
வலல்லாவிட்ட புளத்சிங்கள இங்கிரிய
மாத்தறை மாவட்டம்:
பிட்டபெத்தர கொட்டபொல
நுவரெலியா மாவட்டம்:
நுவரெலியா
கண்டி மாவட்டம்:
யட்டிநுவர பாதஹேவாஹெட்ட கங்கவட்ட கோறளை
கேகாலை மாவட்டம்:
மாவனெல்லை
இரத்தினபுரி மாவட்டம்:
கொலன்ன எலபத்த இரத்தினபுரி அயகம பலாங்கொடை கலவானை இம்புல்பே கஹவத்தை நிவித்திகலை
எச்சரிக்கை மட்டம் 1 - விழிப்புடன் இருக்கவும் (மஞ்சள்)
பதுளை மாவட்டம்:
பண்டாரவளை
ஹப்புத்தளை
எல்லை
ஹாலியெல
லுணுகலை பதுளை
கொழும்பு மாவட்டம்:
பாதுக்கை
காலி மாவட்டம்:
நாகொட
அம்பாந்தோட்டை மாவட்டம்:
கட்டுவன
களுத்துறை மாவட்டம்:
மத்துகம ஹொரணை
கண்டி மாவட்டம்:
உடுநுவர
உடபலாத்த
தும்பனை
கங்கையிஹல கோறளை
பஸ்பாகே கோறளை
பாததும்பர
பன்வில
தொழுவ
மெததும்பர
மினிப்பே
கேகாலை மாவட்டம்:
ரம்புக்கனை
ருவன்வெல்ல
தெரணியகலை
யட்டியாந்தோட்டை
கலிகமுவ
அரநாயக்க
கேகாலை
வரகாபொல
குருநாகல் மாவட்டம்:
ரிதிகம
மாவத்தகம
மல்லவப்பிட்டிய
மாத்தளை மாவட்டம்:
நாவுல
யட்டவத்தை
ரத்தோட்டை
அம்பகங்க கோறளை
உக்குவளை
மாத்தறை மாவட்டம்:
பஸ்கொட
நுவரெலியா மாவட்டம்:
அம்பகமுவ கொத்மலை
இரத்தினபுரி மாவட்டம்:
எம்பிலிப்பிட்டிய
ஓப்பநாயக்க
வெலிகெபொல
கிரியெல்ல