Jaffna News Express

Jaffna News Express தமிழ் செய்திகள் உடனுக்குடன்...

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த 6 வயது சிறுவனின் சடலம், வீ...
13/06/2026

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த 6 வயது சிறுவனின் சடலம், வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (12) இரவு சிறுவன் காணாமல் போனதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததையடுத்து, பொலிஸாரால் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, சிறுவனின் சடலம் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திகதிக்கமையவே நடைபெறும் என்றும், அதனை எக்காரணம் கொண்டும்...
13/06/2026

2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திகதிக்கமையவே நடைபெறும் என்றும், அதனை எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி கிரியெல்ல எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதி அமைச்சர் இதனை நாடாளுமன்றத்துக்குத் தெளிவுபடுத்தினார்.

முல்லைத்தீவு குருந்தூர்மலைப் பகுதியில் வரலாற்று ரீதியாக சைவக் கோயில் இருந்ததற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை என தொல்லியல் ...
13/06/2026

முல்லைத்தீவு குருந்தூர்மலைப் பகுதியில் வரலாற்று ரீதியாக சைவக் கோயில் இருந்ததற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை என தொல்லியல் திணைக்களம், புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

அத்துடன், குறித்த பகுதி வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த மதத் தலத்துக்கான சான்றுகளைக் கொண்ட இடம் என்றும், அங்குள்ள பௌத்த எச்சங்களைச் சேதப்படுத்தி புதிய வழிபாட்டுத் தலங்களை அமைப்பது சட்டரீதியாக தண்டனைக்குரிய குற்றம் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், குருந்தூர்மலை தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு மற்றும் வாழ்விடப் பகுதி என்றும், அங்கிருந்த ஆதி ஐயனார் மற்றும் சிவன் ஆலயங்கள் நீண்டகாலமாக உள்ளூர் மக்களால் வழிபட்டு வந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதன் காரண...
13/06/2026

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் காரணமாக, மருத்துவமனைகளின் கொள்ளளவு எல்லை தாண்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது வரை டெங்கு நோய் காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களுள் ஐவர் பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் தற்காலிக பணிப்பாளர், மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

12/06/2026

பிணையில் விடுதலையாகி வீடு நோக்கி செல்லும் சங்கீத்சன் – ஊடகங்களுக்கு கருத்து வெளியீடு

பாடகர் சங்கீத்சன் வழக்கில் இருந்து ப*யங்கரவாத தடைச்சட்டம் நீக்கம்சங்கீத்சன் மீது சுமத்தப்பட்டிருந்த ப*யங்கரவாத தடைச்சட்ட...
12/06/2026

பாடகர் சங்கீத்சன் வழக்கில் இருந்து ப*யங்கரவாத தடைச்சட்டம் நீக்கம்

சங்கீத்சன் மீது சுமத்தப்பட்டிருந்த ப*யங்கரவாத தடைச்சட்டப் பிரிவுகள் முற்றிலும் நீக்கப்பட்டு, இந்த வழக்கு சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எவ்வாறெனினும், மேலதிக விசாரணைகளுக்காக வரும் ஜூன் 17 ஆம் தேதி வரை அவருடைய விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வெப்பநிலையை அதிகரிக்கவும், கடுமையான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்தவும் காரணமாக இருக்கும் “எல் நினோ” நிலை த...
12/06/2026

உலகம் முழுவதும் வெப்பநிலையை அதிகரிக்கவும், கடுமையான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்தவும் காரணமாக இருக்கும் “எல் நினோ” நிலை தற்போது அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சாதாரணத்தை விட அதிகரித்துள்ளதால், இது எல் நினோ நிலையை உறுதி செய்வதாக NOAA அறிவித்துள்ளது.

விஞ்ஞானிகள் இதை “கடுமையான எல் நினோ” ஆக மாறும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளனர். இதனால் உலகம் முழுவதும் வெப்ப அலைகள், வெள்ளம், வறட்சி மற்றும் கடுமையான காலநிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது.

மேலும், புவி வெப்பமயமாதலுடன் இணைந்து வரும் மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் உலக வெப்பநிலை வரலாற்றில் அதிகரிக்கும் நிலைக்கு செல்லலாம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று (11) முன்னாள் ஜனாதிபதி ரணில் வி...
12/06/2026

ஐக்கிய தேசியக் கட்சியை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று (11) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது.

தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப கட்சியின் பதில் நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து, பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கட்சி அமைப்பை வலுப்படுத்தி மறுசீரமைப்பதற்கான புதிய திட்டங்கள் தொடர்பாக பல முக்கிய யோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொ...
12/06/2026

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL606 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மின்னல் தாக்கத்துக்குள்ளானதால் அவசரமாக மீண்டும் கொழும்பு திரும்பியது.

விமானத்தின் முதல் எஞ்சின் மீது மின்னல் தாக்கியதாக தெரிவிக்கப்படுவதுடன், பயணத்தின் போது பலத்த சத்தம் மற்றும் எஞ்சினிலிருந்து தீப்பிழம்புகள் வெளிப்பட்டதாக பயணிகள் கூறியுள்ளனர்.
எனினும், விமானப் பணியாளர்கள் நிலைமையை திறமையாக கையாண்டதன் மூலம் விமானம் எந்தவித அசம்பாவிதமும் இன்றி பாதுகாப்பாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

சம்பவத்தில் பயணிகள் அல்லது விமானப் பணியாளர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. விமானத்தின் ஒரு எஞ்சினில் சிறியளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், சிட்னி பயணம் இடைநிறுத்தப்பட்டு பயணிகளுக்கான மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பின்படி, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்ற...
12/06/2026

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பின்படி, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பதிவாகும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மலைப்பகுதியின் மேற்கு சரிவுகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40–50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Address

Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna News Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jaffna News Express:

Share