Jaffna Vikatan

Jaffna Vikatan தமிழே ❤️

11/11/2024

யாழ் பிரபல தொழிலதிபர் விண்ணன் அவர்களின் ஊடக சந்திப்பு.

08/10/2024

முன்னால் வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தனால் மேற்கொள்ளப் பட்ட மண் அகழ்வு ஊழல் மோசடி!

07/10/2024

யோவ் எடிட்டர் 🤜🔥🤛

மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பத்தை விளைவித்த மருத்துவர் அர்சுனா கைது செய்யப்பட்டு நீதி மன்றில் முற்...
03/08/2024

மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பத்தை விளைவித்த மருத்துவர் அர்சுனா கைது செய்யப்பட்டு நீதி மன்றில் முற்படுத்தப்பட்டு ஓகஸ்ட் 7 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

அளவெட்டியில் விபத்து ஒருவர் பலி!மோட்டார் சைக்கிள்  விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்தில் பலி ; அளவெட்டியில் ...
20/05/2024

அளவெட்டியில் விபத்து
ஒருவர் பலி!

மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்தில் பலி ; அளவெட்டியில் சற்றுமுன் துயரம் !

மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளம் குடும்பஸ்தர் மின் கம்பத்துடன் மோதிய விபத்தில்
சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார்

இச் சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை 4:00மணியளவில் அளவெட்டிப் பகுதியில் இடம் பெற்றுள்ளது .

இச் சம்பவத்தில் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த தியாகராஜா தயா வயது 36 என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

உடலம் உடற்கூற்று சோதனைக்காக தெல்லிப்பழைஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

28/03/2024

ஜெர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் வருடாந்த மஹோற்சவம் 2024.

வரலாற்று சிறப்புமிக்க கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்.
26/03/2024

வரலாற்று சிறப்புமிக்க கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்.

👉 அதிகம் பகிருங்கள் 🔴மூளைச்சாவு அடைந்த இரண்டு நோயாளிகளிடமிருந்து இரண்டு பி பாசிட்டிவ் மற்றும் ஓ பாசிட்டிவ் சிறுநீரக ஜோடி...
23/03/2024

👉 அதிகம் பகிருங்கள் 🔴

மூளைச்சாவு அடைந்த இரண்டு நோயாளிகளிடமிருந்து இரண்டு பி பாசிட்டிவ் மற்றும் ஓ பாசிட்டிவ் சிறுநீரக ஜோடிகள் தானம் செய்ய தயாராக உள்ளனர். எனவே, இவ்வகை சிறுநீரகம் தேவைப்படுபவர்கள் யாரேனும் இருந்தால், உடனடியாக அவர்களைத் தொடர்பு கொண்டு உதவவும். முடிந்தவரை பலருக்கு செய்தியை அனுப்பவும். 077 5480062 என்ற இலக்கத்திற்கு அழைக்கவும்.
நன்றி.

யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளி  பரிதாபமாக உயிரிழந்த சோகம் !யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவ...
23/03/2024

யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளி பரிதாபமாக உயிரிழந்த சோகம் !

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர் தீடிரென வெளியேறிய ,முயன்ற நிலையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் – தலையாழி பகுதியைச் சேர்ந்த 44 வயதான பஞ்சலிங்கம் தினேஷ் என்பவரே உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வேறொரு விடுதிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்ட தீர்மானித்துள்ளனர்.

இதன்போதே, நேற்றைய தினம் (22-03-2024) மாலை வைத்தியசாலையின் பின்பக்க நுழைவாயில் ஊடாக தீடிரென வெளியேறி சிறிது நேரத்தில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

நுரையீரல் பாதிக்கப்பட்ட குறித்த நபரின் உடலில் ஏற்றப்பட்ட கனூலா கழற்றப்பட்ட நிலையில் இரத்த கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

22/03/2024

மிருசுவில் ஏ-9 வீதியில் விபத்து!!🔴

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளானதில் எரிபொருள் வீதி முழுவதும் ஓடியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்து.

இதன் காரணமாக வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது .விபத்தில் மோதுண்ட இரு வாகனங்களும் தடம்புரண்டு சரிந்து விழுந்துள்ளன.

விபத்து காரணமாக எரிபொருள் தாங்கியில் இருந்த எரிபொருள் வீதி முழுவதும் கசிந்து காணப்படுகின்றது. மேலும் விபத்து சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

12/03/2024

கீரிமலை சிவன் ஆலயத்தில் எல்லோரும் சேர்ந்து பஞ்சபுராணம் பாடும் அருமையான காட்சி. ❤️🙏❤️

பெரும்பாலான ஆலயங்களில் ஒருவரே பஞ்சபுராணம் பாடும் நிலையில் குருக்களின் வழிநடத்தலில் எல்லோரும் அவருடன் சேர்ந்து பஞ்சபுராணம் பாடிய காட்சி சிவராத்திரி தினத்தில் கீரிமலை சிவன் ஆலயத்தில் இடம்பெற்றது.
சிவ சிவாய ❤️🔱

நல்லூரில் விபத்து.பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நகர் நோக்கி பயணித்த சீமெந்து ஏற்றும் லொறி நல்லூர் ஆலயத்துக்கு முன்...
07/03/2024

நல்லூரில் விபத்து.

பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நகர் நோக்கி பயணித்த சீமெந்து ஏற்றும் லொறி நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வளைவில் திரும்பும் போது அங்கிருந்த கடை கட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் லொறியின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்ததுடன் கடையும் சேதமடைந்துள்ளது.

லொறியின் சாரதி காயங்களுக்கும் உள்ளாகியுள்ளார். இச்சம்பவம் இன்று (7) 10.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna Vikatan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category