
20/04/2025
#ஒருவர் தனது நீரிழிவு மட்டத்தினை அறிந்து கொள்ளும் STRIPS மருந்ததங்களில் கிடைப்பது உண்மை,ஆனால் அந்த STRIPS. ஒரு கொள்கலனில் 25என்ற ரீதியில் அடைக்கப்பட்டு கிட்டத்தட்ட 3000ரூபாய் இலங்கையைப்பொறுத்தவரை விற்பனையாகிறது, இதனை சாதாரணமாக கையாண்டால் அது செயலிழக்கப்படும் என்ற உண்மையை வடமராட்சியின் பல மருந்தகங்கள் கூறி முழுமையான தொகுதியை வழங்குகின்றன,பாவம் நம்மைப்போன்ற சாதாரணமானவர்கள் மருத்துவரிடம் செல்லாமல் இவ்வாறு திருப்தியடையும் போது அதற்கான கூலி கூட மருத்துவரை அணுகுவதை விட கூடிய செலவாகி வருகிறது,அத்துடன் மனரீதியாக முழுமையான கொள்கலனை வழங்கும் போது மன எண்ணம் அதனை தினமும் பரிசோதிப்பதற்கு பழக்கப்படுகிறது,இங்குதான் மருத்துவ தந்திரம் விளையாடுகிறது,இவ்வாறு தற்போதைய கால கட்டத்தில் மக்களின் பழக்கவழக்கங்கள் உணவுமுறைகள் மாறியதால் இதன் தந்திரத்திட்டம் மேலைத்தேய நிறுவனங்களிற்கு பெருமளவு ஆதாயத்தை வழங்கி வருவது உண்மை,பெருமளவு நீரிழிவுப்பரிசோதனைகளுக்கான தேவை யாவரும் அறிந்ததே...மேலைத்தேய மருந்துகளால் தான் இன்சுலின் சமநிலை மாறியுள்ளது என்ற உண்மையும் நிரூபிக்கப்படா உண்மை # தி.ரவிமயூரன்