
26/04/2024
அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டும். ஆகஸ்ட் மாதத்திற்குள் பூர்த்தி செய்யப்படும் - போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன
மோட்டார் வாகனத் திணைக்களத்தில் குவிந்துள்ள அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அரச நிறுவனங்களுக்கு பெரும் பணத்தை மீதப்படுத்துகிறது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைப் பதிவுசெய்தல் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதே இந்த நிறுவனத்தின் பிரதான வருமான ஆதாரமாகும். இதற்கு சுங்க மற்றும் கலால் துறையினரும் பெரும் பங்காற்றி வருகின்றனர்.
ஒருமுறை மோட்டார் வாகனத் திணைக்களம் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் உரிமையை இராணுவத்துக்கு வழங்கியது. இவ்வாறு பல அனுகுமுறைகளை கையாண்டது. இந்த நிறுவனங்கள் வருமானம் ஈட்டும் பிரதான நிறுவனங்கள்.
எதிர்காலத்தில் மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது இலக்கத்தகடு வழங்கும் முறையும் மாற்றப்படும் என்றார். நமது நாட்டில் அரச வருமானம் குறித்து பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.