The Jaffna University Voice

The Jaffna University Voice This is a facebook fan page of University of Jaffna to connect our students all over the world!! All are warmly welcome to this page!!!

இம்முகநூல் பக்கமானது யாழ்பல்கலைக்கழகத்தினை பிரதிநிதித்துவம் செய்வதற்காகவும் உலகெங்கிலும் பரந்துவாழும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை ஒன்றுசேர்ப்பதற்குமாக உருவாக்கப்பட்டுள்ளது.

22/06/2025

An analysis of a 700-year-old ring reveals a unique reddish-purple sapphire set in 18-karat gold with a lion decoration.

Army Officer Somaratne Rajapakse’s statement at court as follows Mr. Yogeswaran, an innocent civilian, was returning hom...
08/06/2025

Army Officer Somaratne Rajapakse’s statement at court as follows

Mr. Yogeswaran, an innocent civilian, was returning home after completing his duties when he was arrested by army personnel stationed at the Daya building camp.

The following day, he was taken to the “C” torture camp.

This camp was located in houses near the Kottukkinaru Pillaiyar Temple.

I brought an order from higher authorities to the camp instructing them to release Mr. Yogeswaran.

When I arrived, I saw him hanging upside down.

He was being cut and injured with a bayonet.

Sri Lankan army officers Captain Sri Jayawardena, Lieutenant Thudugala, and Udaya Maara were torturing him.

At that same camp, they had beaten another unidentified man to death with a pole and buried him in front of one of the houses.

Around that same time, during a late-night raid, Captain Lalith Hovage and Abdul Nassar Hameed arrested a young married couple.

They were first taken to the “C” torture camp.

Later, they were taken to the Uppala area in Chemmani.

While they were being taken there, Captain Lalith Hovage asked me and A.S. Perera to bring a spade.

So, the two of us took the spade along with our fi****ms.

When I arrived, I saw Captain Hovage alone with the woman.

She was completely naked.

Later, she was taken to where her husband was being held.

Captain Hovage took the spade from me and struck both of them on the head.

Abdul Nassar, Hameed, and Samarasinghe beat them with poles.

They collapsed to the ground.

We were then ordered to bury the bodies, and the officers left.

In another incident, Mr. Selvaratnam, who worked at the Jaffna Education Department, was arrested by Captain Lalith, Captain Sri Jayawardena, and Lieutenant Thudugala, and detained at the “C” section camp.

His wife and children pleaded with me to help release him.

Responding to their request, I asked Captain Lalith and Captain Jayawardena to release him.

They told me they would release him, but that very night, they killed him.

The next day when I went there, I saw more than 10 dead bodies.

In another case, two youths from Ariyalai, named Parthipan and Sudhakaran, asked me for a pass to do business in Kaithady.

I spoke to Captain Jayawardena, who told me to have them come to the camp where the pass would be issued.

I passed this information to the youths, and they went to the camp.

The next day, their relatives told me the youths had not returned home.

I later saw Captain Jayawardena and Lieutenant Thudugala had tied them up upside down and were torturing them.

The next day, both had died.

Even before I began my duties in that area, I had learned that around 50 people had already gone missing.

It was common for senior officers to torture and kill civilians and then order me to bury the bodies.

I can identify 10 mass grave sites in Chemmani and surrounding areas.

A.M. Perera can identify five more sites.

In one of those, 25 to 30 bodies were buried together in a single grave.

All of these horrific tortures and killings that happened in Chemmani were described in a lengthy confession given in court by Army Officer Somaratne Rajapakse, who was convicted in the Krishanthi Kumaraswamy r**e and murder case.

source Lukshayan Muthukumarasamy



திரு யோகேஸ்வரன் எனும் அப்பாவி பொதுமகன் தனது கடமை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சமயம் தயா கட்டடத்தில் உள்ள முகாம் படையினர் அவரைக் கைதுசெய்தனர்.

அடுத்தநாள் “சி” வதைமுகாமுக்கு கொண்டு சென்றனர்.

இந்த முகாம் கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் உள்ள வீடுகளில் இருந்தது.

திரு யோகேஸ்வரன் அவர்களை விடுவிக்குமாறு மேலிடத்தில் இருந்து கிடைத்த உத்தரவை அந்த முகாமுக்கு எடுத்துச் சென்றேன்.

அங்கு அவர் தலைகீழாகக் கட்டப்பட்டிருந்தார்.

பிளேட்டினால் அவரது உடலில் வெட்டிக் காயப்படுத்திக் கொண்டிருந்தனர்.

இலங்கை இராணுவ அதிகாரிகளான கப்டன் ஸ்ரீ ஜெயவர்தனா, லெப்டினன்ட் துடுகல்ல, உதயமார ஆகியேரே இந்தச் சித்திரவதையை செய்துகொண்டிருந்தனர்.

அந்த முகாமில் தடுப்பில் இருந்த பெயர் தெரியாத நபர் ஒருவரை கூட பொல்லால் தாக்கி கொலை செய்து அங்குள்ள வீடு ஒன்றில் முன்னால் புதைத்தார்கள்.

அதே காலத்தில் ஒரு முன்னிரவு காலத்தில் கப்டன் லலித் ஹோவகேயும், அப்துல் நஷார் ஹமீத்தும் இளம் தம்பதியினரைக் கைது செய்தனர். அவர்களை முதலில் “சி” சித்திரவதை முகாமுக்குக் கொண்டு சென்றனர்.

பின்னர் இருவரையும் செம்மணியில் உப்பளப் பகுதிக்குக் கொண்டு சென்றனர்.

அவ்வாறு அவர்களைக் கூட்டிச் செல்லும்போது மண்வெட்டியை எடுத்துவரும்படி என்னிடமும், ஏ.எஸ் பெரேராவிடமும் கப்டன் லலித் ஹேவகே தெரிவித்தார்.

அதன்படி நாம் இருவரும் துப்பாக்கியுடன் மண்வெட்டியையும் கொண்டு சென்றோம். நான் செல்லும்போது கப்டன் ஹேவகே அந்தப் பெண்ணுடன் தனிமையில் நிற்பதைக் கண்டேன்.

அச்சமயம் அந்தப் பெண்ணின் உடலில் ஆடைகள் எதுவும் இருக்கவில்லை.

பின்னர் அந்தப் பெண்ணின் கணவன் இருக்கும் இடத்துக்குப் பெண்ணை அழைத்துவந்தனர். என்னிடம் இருக்கின்ற மண்வெட்டியை வாங்கிய கப்டன் ஹேவகே இருவரின் தலையிலும் அடித்தார்.

அவருடன் இருந்த அப்துல் நஸார், ஹமீத், சமரசிங்க ஆகியோர் பொல்லுகளால் அவர்களைத் தாக்கினர்.

இருவரும் கீழே விழுந்துவிட்டனர். இருவரின் சடலங்களையும் எம்மை புதைக்கும்படி கூறிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர்.

மற்றுமொரு சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணம் கல்வித் திணைக்களத்தில் கடமையாற்றும் திரு செல்வரத்தினம் என்பவரைக் கப்டன் லலித், கப்டன் ஸ்ரீ ஜெயவர்தன, லெப்டினன்ட், துடுகல்ல ஆகிய மூவரும் சேர்ந்து கைது செய்து “சி” பிரிவு முகாமில் தடுத்து வைத்திருந்தனர்.

அவரை விடுவிக்குமாறு அவரது மனைவி, பிள்ளைகள், என்னிடம் கேட்டனர். அவர்களின் கோரிக்கையின் பேரில் திரு செல்வரத்தினம் அவர்களை விடுவிக்குமாறு கப்டன் லலித், கப்டன் ஸ்ரீ ஜெயவர்தனா ஆகியோரிடம் கோரினேன்.

அவரை விடுவிப்பதாக சொன்ன அவர்கள் அன்று இரவே அவரைக் கொலை செய்து விட்டார்கள்.

மறுநாள் நான் போனபோது அங்கு 10 இற்கு மேற்பட்ட சடலங்கள் கிடந்தன.

இன்னுமொரு சந்தர்ப்பத்தில் அரியாலையைச் சேர்ந்த பார்த்தீபன், சுதாகரன் என்ற இரு இளைஞர்கள் கைதடி சென்று வியாபாரம் செய்ய பாஸ் பெற்றுத் தருமாறு என்னிடம் கேட்டார்கள்.

இது குறித்து கப்டன் ஸ்ரீ ஜெயவர்தனாவிடம் கேட்டேன். அவர்களை முகாமுக்கு வருமாறும், அங்கு வைத்து பாஸ் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தத் தகவலை அந்த இளைஞர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் முகாமுக்கு சென்றனர்.

மறுநாள் அந்த இளைஞர்களின் உறவினர்கள், அந்த இளைஞர்கள் இருவரும் இன்னும் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை என்று என்னிடம் தெரிவித்தனர்

அந்த இளைஞருக்கு. கைதடியில் வியாபாரஞ் செய்ய அனுமதிக் கடிதம் வழங்குவதாகத் தெரிவித்த கப்டன் ஸ்ரீ ஜெயவர்தனா, லெட்டினன்ட் துடுகல்ல ஆகியோர் அந்த இளைஞர்கள் இருவரையும் தலைகீழாகக் கட்டித் தூக்கிவிட்டுத் தாக்கியதைக் கண்டேன்.

மறுநாள் இரு இளைஞர்களும் இறந்துவிட்டனர்.

நான் கடமைக்கு வர முன்பே அந்த பகுதியில் அங்கு 50 பேர் காணாமல் போயிருந்தனர் என்று அறிந்தேன்.

வழமையாக உயர் அதிகாரிகள் பொதுமக்களைக் சித்தரவதை செய்து கொலை செய்துவிட்டு சடலத்தைப் புதைக்கும்படி என்னிடம் தருவார்கள்.

செம்மணி மற்றும் பகுதிகளில் உள்ள 10 மனிதப் புதைகுழி இடங்களை நான் அடையாளம் காட்டுவேன்.

ஏ.எம். பெரேரா ஐந்து இடங்களைக் காட்ட இருக்கின்றார்.

அதில் ஒன்றில் மட்டும் 25 முதல் 30 வரையான சடலங்கள் ஒன்றாகப் போடப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு செம்மணியில் நடைபெற்ற பல கொடூர சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள் தொடர்பான நீண்ட ஒப்புதல் வாக்குமூலத்தை மாணவி கிரிசாந்தி படுகொலை குற்றாவளியான சோமரத்ன ராஜபக்ச எனும் இராணுவ அதிகாரி நீதிமன்றில் தெரிவித்து இருந்தார்

மேற்படி வாக்குமூலம் வழங்கப்பட்டு இருபது ஆண்டுகள் கடந்து விட்டது .

ஆனால் பாதிக்கப்பட்ட எவருக்கும் என்ன நடந்தது என்பதை இன்றுவரை அறியமுடியவில்லை.

நல்லாட்சி ஆட்சி காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன

ஆனால் மேற்படி வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆஜராகி இராணுவ அதிகாரிகளை நியாயம் செய்தார்கள்

நீதிமன்ற வளாகத்தில் வைத்தே முறைப்பாட்டாளர்கள் , சட்டத்தரணிகள் இராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள்

மேற்படி வழக்குகளை முன்னின்று நடத்திய கலாநிதி குருபரன் குமரவடிவேல் இராணுவ அழுத்தத்தின் பேரில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் இருந்தே பதவி விலகி இருந்தார்

சுதந்திர இலங்கையில் ஏறத்தாழ 70 ஆண்டுகாலம் தமிழ் சமூகம் படுகொலைகள், சித்திரவதைகள் , மனித புதைகுழிகள் என கொடூரங்களை தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்றது

அதில் செம்மணி சித்தரவதைகளும் படுகொலையும் ஒரு மறக்க முடியாத அத்தியாயம்

Remembering the 1958 pogromPhotograph: A Sinhalese mob beats a Tamil passenger after pulling him out of his car. 1958. (...
23/05/2025

Remembering the 1958 pogrom

Photograph: A Sinhalese mob beats a Tamil passenger after pulling him out of his car. 1958. (Courtesy Victor Ivan)

On this day 67 years ago, Sinhala mobs began attacking, ra**ng and murdering Tamils across the island. The violence was to become another in a series of deadly anti-Tamil pogroms.

Estimates range from between 300 and 1,500 Tamils murdered in the days of violence, which began on 22 May 1958, and resulted in many more injured and the arson, looting and destruction of Tamil homes and businesses. On 27 May 1958, the Sri Lankan state declared a state of emergency.

The pogrom took place just two years after the island’s first ethnic based pogrom against Tamils in 1956. The violence reportedly started in Polonnaruwa on 22 May 1958, as Sinhala mobs looked to attack Tamils who were on their way to the Federal Party convention in Vavuniya.

Violence then spread across the whole island. A Hindu priest was burnt alive in Colombo, whilst mobs roamed the streets of Colombo checking whether passers-by could read Sinhala newspapers. Those who could not were beaten or killed. The government waited five days before declaring an emergency.

Source: Tamil Guardian

Address

Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Jaffna University Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category