25/09/2025
உயர் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (2025.09.23 - செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர மாணவர்களின் 100% பெறுபேற்றுச் சாதனையை கெளரவிக்கும் வகையில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் வாழ்த்தி நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது மாத்திரமல்லாமல், 2024 ஆம் ஆண்டு O/L பெறுபேறுகளின் படி மாவட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றமை, புலமைப் பரிசில் பெறுபேறுகளின் படி பொலன்னறுவை வலய தமிழ் மொழி மூல பாடசாலைகளுள் முதலாமிடம் பெற்றமைக்காக பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினால் பாடசாலைக்கும் அதிபர் S.Faseel அவர்களுக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் ஆசிரிய ஆலோசகர்களான ALA. Gafoor T. Nisham Muhammed மற்றும் M.C.T. Mohideen ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டதுடன் பாடசாலை இணைப்பாளர்களாக சேவையாற்றியமையை நினைவு கூர்ந்து பாடசாலை சமூகத்தினால் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
#தகவல்: ( #கணித_ஆசான்)