
14/07/2025
*14 வருடங்கள் நிறைவு காணும் மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலையின் சிறுவர் பூங்கா……*
மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலைக்கு முன்னால் கம்பீரமான தோற்றத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாங்கள் மாலைப்பொழுதை கழிக்க ,ஓய்வெடுக்க வருகின்ற வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட சிறுவர் பூங்கா இன்று அதன் 14 ஆம் ஆண்டு பூர்த்தியை காண்கின்றது.
மள்வானையில் இவ்வாறானதொரு சிறுவர் பூங்காவின் முக்கியத்துவத்தை உணர்ந்த அப்போதைய இளைஞர்கள் தாங்கள் ஒன்று சேர்ந்து தாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நன்நோக்குடன் குறித்த வேலைத்திட்டத்தை தமது குழு மள்வானை அபிவிருத்தி குழு (MDA) என்ற நாமத்துடன் கடந்த 2009 ஆம் ஆண்டளவில் ஆரம்பித்து சுமார் இரண்டு வருட காலங்கள் அதன் அமைப்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு அப்போதைய காலத்தில் அதிநவீன சிறுவர் பூங்கா உபகரணங்கள் பல மில்லியன் செலவில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு சர்வதேச தரத்திலான ஒரு சிறுவர் பூங்காவை அமைத்து முடித்தனர்.
குறித்த வேலைத்திட்டத்தில் மள்வானை அபிவிருத்தி குழுவினருடன் இதற்கு தனிப்பட்ட முறையிலும் உதவி செய்த நல்லுள்ளம் படைத்த நமது தனவந்தர்களும் நினைவு படுத்தப்படவேண்டும் குறித்த வேலைத்திட்டத்தில் பங்கு கொண்ட பலர் இன்று நம் மத்தியில் இல்லாவிட்டாலும் இப்படியானதொரு தூர சிந்தனையில் உருவாக்கப்பட்ட
இச்சிறுவர் பூங்கா இன்று சூழவுள்ள அயல் மாற்றுமத சகோதர இன நல்லுரவுப்பாலமாகவும் செயற்பட்டு வருகின்றதோடு வளரும் மாற்று மத சிறு பிஞ்சு உள்ளங்களில் எமது நல்ல விடயங்களை பதிக்கின்ற ஒரு தளமாகவும் இது இருந்துவருகின்றது
அது தவிர நாட்டின் தேசிய தினத்தில் கொடி ஏற்றப்பட்டு ஒரு விழாவாக ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இச்சிறுவர் பூங்காவை மையப்படுத்தியதொரு சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றமை வரலாற்றில் பதியப்படவேண்டிய ஒரு விடயமே ,மேலும் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அன்றைய தினம் பல மேலதிகமான சிறுவர் கொண்டாட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகின்றமையும் இங்கு குறிப்பிட்டுக்கூறப்பட வேண்டிய விடயமே
இத்தனைக்கும் மத்தியில் சில தீய சக்திகளின் எதிர்ப்புக்கும் இவர்கள் முகம் கொடுக்காமல் இல்லை சமூகத்தில் எந்த நல்ல விடயம் என்றாலும் ஒரு சில தீய சக்கிகள் அதனை தடுக்க முற்படுவது புதிய விடயமல்ல அவற்றை வெற்றி கொண்டு அல்லாஹ்வுக்கான தமது சமூகப்பணியை இன்றும் தொடந்து வருகின்ற குறித்த மள்வானை அபிவிருத்தி குழு (MDA) இன்றும் பல இலட்சங்கள் செலவில் சிறுவர் பூங்காவின் திருத்தப்பணிகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது
இன்றைய இளைஞர்களுக்கு அப்போதைய மள்வானை அபிவிருத்தி குழு (MDA) ஒரு தூர சிந்தனை செயற்பாட்டின் உருவாக்கமான இச்சிறுவர் பூங்க நல்லதொரு எடுத்துக்காட்டு என்பதை யாரும் மறுக்கமட்டர்கள் தமது பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள குறித்த மள்வானை அபிவிருத்தி குழு (MDA) அதன் இணை தலைவர்களான அல்-ஹாஜ் கமால் ஹுஸைன்
அல்-ஹாஜ் முஹம்மத் மஸாஹிம்
அல்-ஹாஜ் முஹம்மத் பஸ்லி உற்பட அதன் ஏனைய உறுப்பினர்களுக்கும் குறிப்பாக சகல விடயங்களின் போதும் தான் வெளிநாட்டில் இருந்தாலும் என்னை தொடர்பு கொண்டு ஞாபகப்படுத்தும் சகோதரர் இனாமுல் அல்வான் அவர்களையும் இங்கு நினைவு கூர்ந்து அல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் ,தொழில் பரகத்தும் செய்து தமது சமூகப்பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க நாமும் பிரார்த்திக்கின்றோம்
ஆமீன்
ஏ.எச்.எம்.பௌஸான்