Kalmunai ToDay

Kalmunai  ToDay yes

இந்த  #பணத்தை  கையில பிடிச்சி, கொஞ்சம் தள்ளி வெச்சி யோசிச்சு பாத்தா.அடேங்கப்பா இந்த பணத்துக்கு எவ்வளவு  #பெயர்கள்..?கோயி...
20/03/2022

இந்த #பணத்தை கையில பிடிச்சி, கொஞ்சம் தள்ளி வெச்சி யோசிச்சு பாத்தா.

அடேங்கப்பா இந்த பணத்துக்கு எவ்வளவு #பெயர்கள்..?

கோயில் உண்டியலில் செலுத்தினால் #காணிக்கை என்றும்...

யாசிப்பவருக்குக் கொடுத்தால் #பிச்சை என்றும்...

அர்ச்சகருக்குக் கொடுத்தால் #தட்சணை என்றும்...

கல்விக் கூடங்களில் #கட்டணம் என்றும்...

திருமணத்தில் #வரதட்சணை என்றும்...

திருமண விலக்கில் #ஜீவனாம்சம் என்றும்...

விபத்துகளில் இறந்தால் #நஷ்டஈடு என்றும்...

ஏழைகள் கேட்டுக் கொடுத்தால்
#தர்மம் என்றும்...

நாமாக விரும்பி ஏழைகளுக்குக் கொடுத்தால் #தானம் என்றும்...

திருமண வீடுகளில் பரிசாக #மொய் என்றும்...

திருப்பித் தர வேண்டும் என யாருக்காவது கொடுத்தால் அது #கடன் என்றும்...

திருப்பித் தர வேண்டாம் என இலவசமாகக் கொடுத்தால் அது #அன்பளிப்பு என்றும்...

விரும்பிக் கொடுத்தால் #நன்கொடை என்றும்...

நீதிமன்றத்தில் செலுத்தினால் #அபராதம் என்றும்...

அரசுக்குச் செலுத்தினால் #வரி என்றும்...

அரசுப் பொது தர்ம ஸ்பானங்களுக்கு கொடுத்தால் அது #நிதி என்றும்...

செய்த வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது #சம்பளம் என்றும்...

தினமும் கிடைப்பது #கூலி என்றும்...

பணி ஓய்வுப் பெற்றால் கிடைப்பது #ஓய்வூதியம் என்றும்...

சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும் #லஞ்சம் என்றும்...

கடன் வாங்கினால் அத்தொகைக்கு
#அசல் என்றும்...

வாங்கியக் கடனுக்குக் கொடுக்கும் போது #வட்டி என்றும்...

தொழில் தொடங்கும் போது போடும் அதற்கு #முதலீடு என்றும்...

தொழிலில் கிடைக்கும் வருமானத்துக்கு #இலாபம் என்றும்...

குருவிற்குக் கொடுக்கும் போது #குருதட்சணை என்றும்...

ஹோட்டலில் நல்குவது #டிப்ஸ் என்றும்...

இவ்வாறு பல பெயர்களில் கைமாறும் இந்தப் #பணத்திற்கு மாற்றாக வேறொன்றும் இப்புவியில் இல்லை...

இந்தப் பணம் என்ற காகிதத்தைப் பெற...

சிலர் அன்பை இழக்கின்றனர்...

சிலர் பண்பை இழக்கின்றனர்...

சிலர் நட்புகளை இழக்கின்றனர்...

சிலர் உறவுகளை இழக்கின்றனர்...

சிலர் கற்பை இழக்கின்றனர்...

சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்...

சிலர் மார்க்கத்தை இழக்கின்றனர்...

சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்...

சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்...

சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்...

16/03/2022

Scholarship Exam தரம் 5 வெட்டுப்புள்ளி..

23/09/2021

https://www.facebook.com/Kalmunai-ToDay-100638545323002/

Like Pages

கல்முனையில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி (இளைஞர்களுக்கிடையிலான வாய்தர்க்கத்தின் பிரதிபலிப்பு)

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை
மதரஸா வீதியில் இடம்பெற்ற சரமாரியான வாள்வெட்டில் காயமடைந்த கல்முனை இளைஞர் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

புதன்கிழமை (22) காலை பயணத்தடை அமுலில் உள்ள காலப்பகுதியில் தன்னுடைய வீட்டுக்கு முன்னால் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர்களை நிறுத்தி வேகமாக வாகனத்தை ஓட்டவேண்டாம் என்று கூறியவர்களுடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பின்னர் களைந்து சென்று கூறிய இரு வாள்களுடன் வந்து சரமாரியாக தாக்கியதில் காயமடைந்த 19 வயதான முஹம்மத் ஸபான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காயமடைந்த ஸபானின் தந்தை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனை அதிகரித்து காணப்படும் கல்முனை பிராந்தியத்தில் இப்படியான சம்பவங்கள் அதிகரித்து வருவதாவது ஆபத்தை உண்டாக்கும். வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த எனது தம்பி சத்தம் கேட்டு வெளியே வந்தபோது மிக நீளமான வாள்களால் தாக்கப்பட்டார். இது தொடர்பில் கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம். எனது தம்பியை தாக்கியவர்களை எங்களுக்கு நன்றாக தெரியும். எங்களின் பிரதேசத்தில் யாரிடம் விசாரித்தாலும் அவர்களின் கொடுமைகளை விளக்குவார்கள் என தாக்கப்பட்ட ஸபானின் சகோதரி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

வீட்டு வாயில் கதவு, கதவு போன்றவற்றில் வெட்டுத்தடயங்கள் உள்ளதையும், இரத்த தடயங்கள் உள்ளதையும் அவதானிக்க முடிவதுடன் காணொளியில் மிக கோபத்துடன் குறித்த இரு இளைஞர்களும் தாக்குதல் நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பிலான மேலதிக விசாரணையை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

22/09/2021
05/09/2021

யோசிக்க வேண்டிய விஷயம்... ✋🏼😌
இது உங்களுக்கு பொருந்துமா என்று பாருங்கள்..!

உங்கள் சம்பளம் 35000 ஆக இருந்தால் 50000 போன் வாங்காதீர்கள் ஏனென்றால் அது உங்கள் வருட சம்பளத்தில் 11%

(1) உன்னிடம் இருக்கும் பணத்திற்காக வாழ பழகி கொள்.

(2) மற்றவர்கள் செய்யும் செயலை நீங்கள் செய்ய வேண்டும் என்று எந்த உத்தரவும் இல்லை.

(3) ஒரு ஐந்து ஆண்டு திட்டத்தை உருவாக்குங்கள்.

(4) அனுபவத்தை உங்கள் முக்கிய செல்வமாக ஆக்குங்கள்.

(5) தேவையில்லாத பயணம் செய்யாதீர்கள்.

(6) ஒரு நாளைக்கு 1440 நிமிடம் இருந்ததா 960 தான் இருக்கு....

(7) மீதமுள்ள 480 நிமிடங்களை நீங்கள் தூங்க வேண்டும்.....

(8) உங்கள் கனவு லம்போர்கினியாக இருந்தால், இப்போது நீங்கள் கொண்டிருக்கும் வாகனத்தை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்..

(9) எப்போதும் உங்கள் கனவுக்காக ஒரு மணி நேரம் தியாகம் செய்யுங்கள்.

(10) உங்கள் குறைபாடுகளை எப்படி நீக்குவது என்று திட்டமிடுங்கள்.

(11) கழுகுடன் பறக்க வேண்டுமென்றால் நெல்லிக்கட்டுடன் நடப்பதை நிறுத்துங்கள்.

(12) நேர்மறை எண்ணங்கள் கொண்ட நபர்களுடன் இணையுங்கள்.

(13) மாதத்திற்கு கிடைக்கும் தொகை எவ்வளவு?
அதுமட்டுமல்ல, ஐந்து வருஷத்துல என் அக்கவுண்ட்ல எவ்வளவு இருக்குன்னு நினைச்சுக்கோங்க. அதற்கான திட்டம்.

(14) ஒரே இலக்கில் தொங்கவும், என்னால் முடியும் என்று சொல்லும் அதே வழியில் இரு..

இந்த விளையாட்டின் கடினமான பகுதி நீங்கள் இங்கே 15 செய்ய இருக்கும்போது வருகிறது.. உங்கள் மனதை அங்கே ஒரே இடத்தில் வையுங்கள்.

(16) நீ என்ன தவறு செய்கிறாய் என்று மற்றவர்கள் சொன்னால், அவர்கள் சொல்வதை கேட்டு விளையாட்டை விட்டு வெளியேறுகிறாயா இல்லையா என்று புரிந்துகொள்ளுங்கள்.

(17) மற்றவர்களை பற்றி உங்களிடம் அவதூறு கூறுபவரை நம்பாதீர்கள், ஏனெனில் அவர் உங்களைப்பற்றி மற்றவர்களிடம் கூறுவார்.
(வாழ்க்கை அனுபவம்)

(18) TikTok, Instagram, Facebook, YouTube போன்றவற்றை உங்கள் இலக்கை அடைய பயன்படுத்தி கொள்ளுங்கள்...

(19) உன் எதிரி நீ நீயாக இருக்கிறான் என்று நினைத்து நாளை உன்னை பலசாலியாக்கு.

(20) கடைசியாக ஒருவர் பற்றி உங்களோடு வாதிட்டால் அல்லது எதையாவது பற்றி சகோதரா நீங்கள் சொல்வது தவறு. நான் அங்கேயே பேசுவதை நிறுத்துங்கள்.

நகலெடுக்கப்பட்டது
ஆசிரியர்: தெரியாதவர்

அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இளைஞன் ஒருவன் மரத்தின் மேல் ஏறி விபரீத முயற்சி !அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இளைஞன் ஒருவன...
04/09/2021

அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இளைஞன் ஒருவன் மரத்தின் மேல் ஏறி விபரீத முயற்சி !

அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இளைஞன் ஒருவன் மரத்தின் மேல் ஏறி விபரீத முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை கேள்வியுற்ற பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து, அக்கரைபற்று மாநகர தீயனைப்பு படையினரின் உதவியுடன் இளைஞனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை காணலாம்

நன்றி: ஹமீட்

கொழும்பில் தங்குவதற்கான அறைகள் உண்டு. 30 வருட காலமாக கொழும்பில்  #இஸ்மாயில்_பில்டிங்_லொட்ஜ் எனும் நாமத்தில்  தங்குமிட வச...
04/09/2021

கொழும்பில் தங்குவதற்கான அறைகள் உண்டு.

30 வருட காலமாக கொழும்பில் #இஸ்மாயில்_பில்டிங்_லொட்ஜ் எனும் நாமத்தில் தங்குமிட வசதிகளை வழங்கிக் கொண்டிருந்த நாம் தற்பொழுது என பெயர் மாற்றம் செய்யப்பட்டு சுகாதார பரிசோதகர்களின் அனுமதியுடன் கொரோனா பயணத்தடை காலத்திலும் எமது சேவையினை வழங்குவதற்காக 24 மணி நேரமும் திறந்துள்ளோம்.

தமது அத்தியாவசிய வேலைகளை முடித்துக்கொள்ள இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து கொழும்பிற்கு வரும் பயணிகள் நியாயமான கட்டணத்தில், அமைதியான, பாதுகாப்பான சூழலில் நிம்மதியாக உறங்குவதற்கான தங்குமிட வசதிகளை KLI கெஸ்ட் ஹவுஸ் இல் பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் தேவைக்கு ஏற்றதுபோன்று

Single room
Double Room
Tripple room
Family room

என எல்லா வகையான அறைகளும்

With and without washroom உடனும்

Ac / Non Ac உடனும்

மிகவும் நியாயமான கட்டணத்தில் நாம் வழங்கிக்கொண்டிருக்கின்றோம்

மேலும்

*வெளிநாடு செல்லவிருப்பவர்களுக்கான PCR பரிசோதனை ஏற்பாடுகள்
* 24 மணித்தியால சேவை
* துணிகளை இலவசமாக Iron செய்யக்கூடிய வசதி
* வாகன தரிப்பிட வசதி
*கொழும்பில் எவ்வேலையையும் முடித்துக்கொள்வதற்கான வழிகாட்டலும் ஆலோசனையும்
*போக்குவரத்திற்கான வாகன வசதி

போன்ற சேவைகளையும் வழங்குகின்றோம்.

உங்கள் தங்குமிட தேவைகளுக்கான அறைகளை முற்கூட்டியே பதிவுசெய்துகொள்வதற்கும் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளவதற்கும் அழையுங்கள்

0112685788
0759933384

KLI Guest House
137, Devanampiyatissa Mawatha (Forbes Road)
Maradana
Colombo - 10

Location :-
https://maps.app.goo.gl/CMZ7UyPKJaMfY4ME6

31/08/2021

இதே நிலமை நாளை நமக்கும் ஏற்படலாம்.
சிந்தித்து செயல்படுவோம்.
Like the Pages

எங்கோ யாரோ இருவருக்கு மகளாக பிறந்தாள் எனக்கு மனைவியாக வந்த பின்புஅவளுக்கென்று இருந்த ஆசைகளை கனவுகளைமறந்து விட்டாள்இப்போத...
31/08/2021

எங்கோ யாரோ இருவருக்கு
மகளாக பிறந்தாள்
எனக்கு
மனைவியாக வந்த பின்பு
அவளுக்கென்று இருந்த
ஆசைகளை கனவுகளை
மறந்து விட்டாள்

இப்போது
நான் அழுதால் அழுகிறாள்
நான் சிரித்தால் சிரிக்கிறாள்
நான் துடித்தால் துடிக்கிறாள்
எனக்காகவே வாழ்கிறாள்


ருசியாக உணவு சமைத்து தருகிறாள்
ரகசியமாக காதல் செய்கிறாள்

காலையில்
நான் எழும்புவதற்கு முன்பு
அவள் எழுந்து விடுகிறாள்

இரவில்
வீடு வருவதற்க்கு தாமதம் ஆனால்
நான் வரும் வரை
தூங்காமல் விழித்திருக்கிறாள்

மாதவிடாய்
வலி அவளை கொல்லும் போதும்
சிரித்துக் கொண்டே
என் ஆடைகள் துவைக்கிறாள்
வீட்டை சுத்தம் செய்கிறாள்
அன்பாக பேசுகிறாள்
அனைத்து வேலைகளையும்
சளைக்காமல் செய்கிறாள்

சில இரவுகளில்
கட்டிலில் கலந்து
இனிப்பான இன்பம் தருகிறாள்

ஓர் நாள்
கர்ப்பம் ஆகி விட்டேன் என
காதுக்குள் சொல்லி
மார்பில் சாய்ந்தால்

பக்குவமாக
குழந்தை போல் பார்த்துக் கொண்டேன்

அவசரமாக
வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன்

ஒரு தாதிப் பெண்
என்னையும் உள்ளே
வர சென்னாள்

இப்போது
அவள் அருகில் நான்

கத்தினால்
கதறினால்
ஏதேதோ செய்தால்

வலியால்
அவள் துடிப்பதை பார்த்து

என்னால்
தாங்க முடியவில்லை

அழ வேண்டும் என்றும்
நான் நினைக்க நினைக்கவில்லை

ஆனால்
என்னை அறியாமல்
கண்ணீர் வருகிறது
இந்த அன்புக்கு என்ன பெயர் என்று
எனக்கு தெரியவில்லை

சதை கிழிந்து
குழந்தை வெளியில் வரும் போது

அவள்
அடைந்த வலியை
கடவுள் கூட கவிதையில்
சொல்லிவிட முடியாது

பாதி குழந்தை
வெளியில் வந்திருகையில்

வலி தாங்க முடியாமல்
கைகள் இரண்டையும் எடுத்து
கும்பிட்டு அழுதால்

எவ்வளவு
வலி இருந்தால்
அவள் கும்பிட்டு அழுதிருப்பால்
என்று நினைக்கும் போது

நான் துடிதுடித்து
அவளை இருக அணைத்து கொண்டேன்

ஒரு பெரிய
சத்தமிட்டு மயங்கி சாய்ந்தால்

ஒரு சில
நிமிடங்களில்

குழந்தையை கையில்
கொடுத்தார்கள்

நான்
அவள் நெற்றியில் முத்தம் வைத்து
இருக அணைத்து கொண்டேன்

அவள்
அனுபவித்த வலி என்பது
நிச்சயமாக மரணத்தின் ஒத்திகை
என்று உணர்ந்தேன்

மரியாதை
செய்யுங்கள்
எம் இறைவிகளுக்கு
நான் நேசிக்கும் மனைவிக்காகவும்
நான் நேசிக்கும் அம்மாவுக்காகவும்
இந்த உலகிழ் வாழும் பெண்களுக்காகவும்

இந்த
வரிகளை
சமர்ப்பிக்கிறேன்.

நன்றிகள் கோடி
பெண்களே...💓

(படித்ததில் வலித்தது)

Pages Like Pannunga

https://www.facebook.com/Kalmunai-ToDay-100638545323002/

08/07/2021

அவசரத்துக்கு உதவிய காட்டு யானை

ஹபரனை பிரதான வீதியில் வாகனம் ஒன்றின் இயந்திரம் சடுதியாக இயங்காத நிலையில், அவ்வழியாக சென்ற காட்டு யானை குறித்த வாகனத்தை தள்ளி இயங்க செய்யும் அபூர்வ காட்சி சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.

  BREAKING NEWS - ஒன்றுகூடல்களுக்கு மறு அறிவித்தல் வரை தடை!ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்கள் என்பவற்றை நடத்துவதற்கு ...
06/07/2021



BREAKING NEWS - ஒன்றுகூடல்களுக்கு மறு அறிவித்தல் வரை தடை!

ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்கள் என்பவற்றை நடத்துவதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய ,நாட்டின் தற்போதைய கொவிட் பரவல் நிலைமையின் காரணமாக, பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் நடவடிக்கையாக மேற்படி விடயங்களுக்காக மறு அறிவித்தல் வரை அனுமதியை வழங்க வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், காவல்துறை மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

மேலும் எனவே, இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

*டேஸ்ட்டியா மிக்ஸ் ஃப்ரூட் புட்டிங் செய்வது எப்படி?*தேவையான பொருட்கள்:சைனா க்ராஸ் – 10 கிராம்சர்க்கரை (Sugar) – 2 கப்ஆப்...
05/07/2021

*டேஸ்ட்டியா மிக்ஸ் ஃப்ரூட் புட்டிங் செய்வது எப்படி?*

தேவையான பொருட்கள்:

சைனா க்ராஸ் – 10 கிராம்

சர்க்கரை (Sugar) – 2 கப்

ஆப்பிள் – 1

பதப்படுத்தப்பட்ட அன்னாசிப்பழத் துண்டுகள் (Preserved Pineapple) – 1 டின்

சாத்துக்குடி சுளைகள் – 10

பேரீச்சம்பழம் (Seedless) – 6

கன்டென்ஸ்ட் மில்க் (Condensed Milk) – 3 டின்

பால் – 1 கப்

செய்முறை:

1 கப் தண்ணீரில் சைனா க்ராஸ்ஸை ஊற வைத்துக் கொள்ளவும்.

ஆப்பிளை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

1 கப் சர்க்கரையை தண்ணீர் சேர்த்து சூடாக்கி இளம்பாகு காய்ச்சிக் கொள்ளவும்.

மீதமுள்ள சர்க்கரையை தூளாக்கிக் கொள்ளவும்.

பேரீச்சம்பழத்தை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

சர்க்கரை பாகுடன் ஆப்பிள் துண்டுகள், மற்றும் சாத்துக்குடி சுளைகளைப் போட்டு, பழங்கள் வெந்ததும் பேரீச்சம் பழத்தைப் போடவும்.

அதன்பின் ஒரு பாத்திரத்தில் அன்னாசிப்பழத் துண்டுகளை பரவலாக போட்டு வைத்துக் கொள்ளவும்.

கன்டென்ஸ்ட் மில்க்குடன் தூளாக்கியுள்ள சர்க்கரை போட்டு கலந்து, 1 மணி நேரம் தனியே வைக்கவும்.

அதன்பிறகு, கன்டென்ஸ்ட் மில்க் கலவையுடன் பால் சேர்த்து, மிதமான தீயில் வைத்து கிளறி விடவும். (கொதிக்க விடக் கூடாது.) அதன்பின் இறக்கி வைக்கவும்.

வேறொரு பாத்திரத்தில் (Pan) சைனா க்ராஸ் கலவையை லேஸாக சூடேற்றி, கட்டி இல்லாமல் மிக கவனமாகவும், மெதுவாகவும் கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.

கன்டென்ஸ்ட் மில்க் கலவை ஓரளவு ஆறியதும் சைனா க்ராஸ்ஸை மில்க் கலவை மீது ஊற்றவும்.

20 நிமிடங்கள் ஆனபின் அன்னாசிப்பழத் துண்டுகள் பரவலாக போட்டு வைத்துள்ள பாத்திரத்தில் சர்க்கரைப்பாகு - பழக்கலவையை ஊற்றி சிறிது நேரம் கழித்து ஃப்ரிட்ஜ்-ல் குளிர வைத்து, பரிமாறவும்.

Like Pages & Share
https://www.facebook.com/Kalmunai-ToDay-100638545323002/

சம்புநகர் பகுதியில் அமைந்துள்ளது காணி நிலம் விற்பனைக்கு🔷 1 ஏக்கர் நிலம் 🔷 💯 உறுதி காணி நியாயமான விலையில் விற்பனை செய்யப்...
05/07/2021

சம்புநகர் பகுதியில் அமைந்துள்ளது காணி நிலம் விற்பனைக்கு
🔷 1 ஏக்கர் நிலம்
🔷 💯 உறுதி காணி
நியாயமான விலையில் விற்பனை செய்யப்படும்
தொடர்புகொள்ள
0765323897

லன்டன் நகர வீதியொன்றில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா....லன்டன் நகர வீதியொன்றில் சுதந்திரமாக, தன்னந்தனியாக  நடம...
24/06/2021

லன்டன் நகர வீதியொன்றில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா....
லன்டன் நகர வீதியொன்றில் சுதந்திரமாக, தன்னந்தனியாக நடமாடும் இலங்கை குடியரசின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

பிரசவ விடுமுறை நாட்களில் மாற்றம்...பயிற்சி அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 42 நாட்கள் பிரசவ விடுமுறையை 84 நாட்களாக...
24/06/2021

பிரசவ விடுமுறை நாட்களில் மாற்றம்...

பயிற்சி அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 42 நாட்கள் பிரசவ விடுமுறையை 84 நாட்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கோரியுள்ளார்.

இதன்படி ,“2020ஆம் ஆண்டு இணைத்துக்கொள்ளப்பட்ட பயிற்சி பட்டதாரிகளுக்கு பிரசவ விடுமுறை 42 நாட்களாக வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது விடுமுறையை ஏனைய அரச பணியாளர்களுக்குப் போன்று 84 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், இரண்டாவது மொழிப் பரீட்சை காரணமாக அனைத்து அரச அதிகாரிகளும் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாவதால் குறித்த பரிட்சைக்காக இரண்டாம் மொழி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதாகவும் தமிழ் மொழி பரீட்சைக்குத் தோற்றுவதற்கு பதிலாக பாடத்திட்டத்தில் நிபுணத்துவத்தைப் பெற முடியும் என்றார்.

Address

Kalmunai
Kalmunai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalmunai ToDay posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share