Theervu TV Sri Lanka

Theervu TV Sri Lanka News And Live broadcasting Company

வீடு வாடகைக்கு:சாய்ந்தமருது பிரதான வீதிக்கு அருகில் சகல வசதிகளுடனும்  வீடு வாடகைக்கு உண்டு.தொடர்புகளுக்கு:072 916 8163
13/05/2025

வீடு வாடகைக்கு:

சாய்ந்தமருது பிரதான வீதிக்கு அருகில் சகல வசதிகளுடனும் வீடு வாடகைக்கு உண்டு.

தொடர்புகளுக்கு:
072 916 8163

🚨Job Vacancyசாய்ந்தமருதில் இயங்கும் பிரபல ரெஸ்டுரண்ட் ஒன்றுக்கு வெய்ட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை 👨🏻‍🍳Waiter Wanted சம்பளம்...
13/05/2025

🚨Job Vacancy
சாய்ந்தமருதில் இயங்கும் பிரபல ரெஸ்டுரண்ட் ஒன்றுக்கு வெய்ட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை

👨🏻‍🍳Waiter Wanted

சம்பளம் மற்றும் ஏனைய விபரங்கள் பேசி தீர்மானிக்கப்படும்.

தொடர்புகளுக்கு..
077 209 7766

✍️இலங்கையில் இருந்து இன்று (11) ஜித்தாவில் உள்ள கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையத்தில் 46 இலங்கை ஹஜ் யாத்ரீகர்களைக...
12/05/2025

✍️இலங்கையில் இருந்து இன்று (11) ஜித்தாவில் உள்ள கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையத்தில் 46 இலங்கை ஹஜ் யாத்ரீகர்களைக் கொண்ட முதல் தொகுதியை ஜம் ஜம் புனித நீர் மற்றும் அஜ்வா பேரீச்சம்பழம் வழங்கி சவூதிக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத் வரவேற்றுள்ளார்.

சாய்ந்தமருது முல்தஸம் ட்ரவல்ஸின் ஏற்பாட்டில் “ஹஜ் வழிகாட்டல் கருத்தரங்கு” நிகழ்வு நேற்று 2025.05.04 இடம்பற்றது. இவ்வருடம...
06/05/2025

சாய்ந்தமருது முல்தஸம் ட்ரவல்ஸின் ஏற்பாட்டில் “ஹஜ் வழிகாட்டல் கருத்தரங்கு” நிகழ்வு நேற்று 2025.05.04 இடம்பற்றது.

இவ்வருடம் தனது 61வது வருட ஹஜ் பயணத்தை முல்தஸம் ஹஜ் குழு மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

வைர விழா கண்ட சாய்ந்தமருது முல்தஸம் ஹஜ் ட்ரவல்ஸ் நிறுவனமானது, இம்முறையும் கலாச்சார அமைச்சு மற்றும் சவுதி அரேபிய தூதரகத்தின் உபசரணையுடன் பயணிக்கும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் முதலாவது ஹஜ் முகவர் நிறுவனமாக அமையப் பெற்றதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.
1966ம் ஆண்டு (ஹிஜ்ரி -1385) நிறுவப்பட்டு, இன்று ஆறு தசாப்த அனுபவத்துடன் சிறப்பாக வழி நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிறுவனமானது, இலங்கை கலாச்சார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் முதலாம் தர ஹஜ் முகவர் நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டு அதிகப்படியான ஹாஜிகளை அழைத்துச் செல்லும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.

இம்முறை, 32 தினங்களாக அமையப் பெறவுள்ள ஹஜ் பயணக் காலத்தில், மக்கா மதினா ஆகிய நகரங்களில் அதி சொகுசு நட்சத்திர விடுதிகளில் தங்குமிட வசதிகளுடன், (மக்கா புல்மன் ஸம்ஸம் 5 நட்சத்திர ஹோட்டலில் 12 தினங்கள்), இலங்கை முறைப்படி உணவுகள் மற்றும் அதி சொகுசு போக்குவரத்து வசதிகளையும் நியாய கட்டணத்துடன் ஏற்பாடு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வைர விழாக் கண்ட சாய்ந்தமருது முல்தஸம் ஹஜ் ட்ரவல்ஸின் 61 வது ஹாஜிகள் குழு இம்முறையும் கலாச்சார அமைச்சு மற்றும் சவுதி அரேப...
02/05/2025

வைர விழாக் கண்ட சாய்ந்தமருது முல்தஸம் ஹஜ் ட்ரவல்ஸின் 61 வது ஹாஜிகள் குழு இம்முறையும் கலாச்சார அமைச்சு மற்றும் சவுதி அரேபிய தூதரகத்தின் உபசாரத்துடன் பயணிக்கும் இலங்கையின் முதலாவது ஹஜ் முகவர் நிறுவனமாக அமையப்பெற்றதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறது அல்ஹம்துலில்லாஹ்.

மர்ஹூம் அல்-ஹாஜ். ஏ.எஸ்.எம். ஷம்சுத்தீன் (பஹ்ஜி, மதனி, SLEAS-I, ஓய்வு பெற்ற பிரதிக் கல்வி பணிப்பாளர்) அவர்களால், 1966ம் ஆண்டு (ஹிஜ்ரி -1385) நிறுவப்பட்டு, இன்று ஆறு தசாப்தம் கடந்த அனுபவத்துடன் அன்னாரது புதல்வர்களால் சிறப்பாக வழி நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிறுவனமானது, இலங்கை கலாச்சார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் முதல் தர ஹஜ் முகவர் நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டு அதிகப்படியான ஹாஜிகளை அழைத்துச் செல்லும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.

இம்முறை, 32 தினங்களாக அமையப் பெறவுள்ள ஹஜ் பயணக் காலத்தில், மக்கா மதினா ஆகிய நகரங்களில் அதி சொகுசு நட்சத்திர விடுதிகளில் தங்குமிட வசதிகளுடன், (மக்கா புல்மன் ஸம்ஸம் 5 நட்சத்திர ஹோட்டலில் 12 தினங்கள்), இலங்கை முறைப்படி உணவுகள் மற்றும் அதி சொகுசு போக்குவரத்து வசதிகளையும் நியாய கட்டணத்துடன் ஏற்பாடு செய்துள்ளது.

இம்முறை ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவுள்ள ஹாஜிகளின் பயணம் சிறப்பாக அமைய பிரார்த்திப்பதோடு, வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது

முல்தஸம் ஹஜ் ட்ரவல்ஸ்
(60 ஆண்டு கடந்த அனுபவத்துடன், நேர்த்தியான சேவை)

MULTHAZAM ENTERPRISES & TRAVELS (PVT) LTD
tradition of over 60 years, touch of perfection
0772906633
0777140916

ஜனாஸா அறிவித்தல் 21/02/2025 Friday கல்முனைக்குடியினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கல்முனை சந்தையில் பிரபல தேங்க...
21/02/2025

ஜனாஸா அறிவித்தல்

21/02/2025 Friday

கல்முனைக்குடியினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கல்முனை சந்தையில் பிரபல தேங்காய் வியாபாரி அமீர் இன்று காலை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் .அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இஷா தொழுகையின் பின்னர் நடைபெறும்.

எனவே அன்னாரின் மறுமை ஈடேற்றத்திற்காகவும் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைத்திட எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக ஆமீன்.

14/01/2025

கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பஸ் வண்டி வந்தாரமுள்ளைப் பிரதேசத்தில் வைத்து முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது,அதன் சிசிடீவி இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கான Chess வகுப்புக்கள் நிந்தவூரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஒரு வகுப்பில் 20 மாணவர்களே சேர்த்துக்கொள்ளப்படுவர்....
14/12/2024

சிறுவர்களுக்கான Chess வகுப்புக்கள் நிந்தவூரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு வகுப்பில் 20 மாணவர்களே சேர்த்துக்கொள்ளப்படுவர்.

பதிவுகள் தற்போது இடம்பெறுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு 0776665191 ஐ அழைக்கவும்.

*வகுப்பு நடைபெறும் நேரம்*
சனி :10.30 AM to 12.30 PM
சனி :05.30 PM to 07.30 PM
ஞாயிறு : 10.30 AM to 12.30 PM

*இதில் ஏதாவது ஒரு வகுப்பில் இணைந்து கொள்ள முடியும்.*

https://chat.whatsapp.com/IAwBfAlhCCu6jiushVJyfN

அரச இளங்கலைஞர் விருது பெரும் நிந்தவூர் இளைஞன் சாஜித்..!கலை இலக்கியத்துறைக்கு அர்ப்பணிப்புமிகு சேவையாற்றிக் கொண்டிருக்கும...
19/11/2024

அரச இளங்கலைஞர் விருது பெரும் நிந்தவூர் இளைஞன் சாஜித்..!

கலை இலக்கியத்துறைக்கு அர்ப்பணிப்புமிகு சேவையாற்றிக் கொண்டிருக்கும் வளர்ந்துவரும் இளந்தலைமுறை கலைஞர்களை ஊக்குவிப்பதற்கும், அவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் துறைசார் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் ஆற்றுவதற்கான ஊக்கத்தை வழங்கும் வகையிலும் கிழக்கு மாகாண சபையினால் இவ் "இளங்கலைஞர் விருது" வழங்கி கௌரவிப்பட உள்ளது.

குறும் திரைப்பட இயக்கத்துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வரும் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் யூ.எல்.எம்.சாஜித் அவர்களும் இவ் விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்

2024.11.21ஆம் திகதி வியாழக்கிழமை காலை திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியில் நடைபெறும் கிழக்கு மாகாண இலக்கிய விழாவில், கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் இவ் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

*சதுரங்க சுற்றுப்போட்டியில் தேசிய ரீதியில் சாதனை..!*கொழும்பு ஸ்ரீ ராகுல பாலிகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற தேசிய ரீதியான ...
16/10/2024

*சதுரங்க சுற்றுப்போட்டியில் தேசிய ரீதியில் சாதனை..!*

கொழும்பு ஸ்ரீ ராகுல பாலிகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற தேசிய ரீதியான சதுரங்க போட்டியில் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதை சேர்ந்த புரோ நைட்ஸ் அகாடமி வீரர் முஜுவாத் வெற்றி பெற்றுள்ளார்.

தேசிய ரீதியிலான பாடசாலை மட்ட சுற்றுப் போட்டியில் 17 வயது ஆண்கள் பிரிவில் பங்கு பற்றி அதில் தனி நபருக்கு வழங்கப்படும் 1st board இல் விளையாடி ஆறு போட்டிகளில் ஐந்து வெற்றிகள், ஒரு சமநிலை எனும் அடிப்படையில் மொத்தமாக 5.5 புள்ளிகளைப் பெற்று சாம்பியனா தெரிவு செய்யப்பட்டார். இவருக்கு சதுரங்க பயிற்சியினை வழங்கிய விளையாட்டு பயிற்சியாளர் எஸ்.எல்.எம்.சுகுதான் ஆசிரியருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்களை கொள்கின்றோம். மேலும் இவர் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரதமரை சந்தித்த காத்தான்குடி மாணவி!காத்தான்குடியிலிருந்து சைக்கிளில்  கொழும்பிற்கு வந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி பாத்தி...
14/10/2024

பிரதமரை சந்தித்த காத்தான்குடி மாணவி!

காத்தான்குடியிலிருந்து சைக்கிளில் கொழும்பிற்கு வந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி பாத்திமா நதா இன்று (14) காலை பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பாதித்துள்ள போதைப்பொருள் நெருக்கடிக்கு எதிராகவும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இந்த மகஜர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

----------

Fatima Nada, a 14-year-old student cycled to Colombo from Kattankudy, handed over a message to me at the Prime Minister's Office this morning (14).

She has handed over this message requesting to take immediate action against the drug menace that has afflicted children and youth and to prevent child abuse.

11/10/2024

ஜனாதிபதி மாளிகையை சென்றடைந்தார் காத்தான்குடி மாணவி!

Address

Sainthamaruthu
Kalmunai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Theervu TV Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Theervu TV Sri Lanka:

Share