31/03/2023
கல்வி ஒன்றே எம் இனத்தின் எதிர்காலம்..
வளைகுடா வானம்பாடிகள்
#சமூகநல #மேம்பாட்டு #அமைப்பின்
உயரிய பணியாகக் கிழக்கு மாகாணத் தமிழர் தேசம் எங்கும் தேவையுடைய மாணவர்களின் கல்வித் தேவைகளை மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் எம் உறவுகளால் முடிந்தவரை எம்மூடாக மிகச் சிறப்பாகச் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
இது மண்முனை மேற்குக் கல்வி வலயத்திற்குட்பட்ட கற்சேனை எனும் அழகிய கிராமத்தின் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோரின் வேண்டுகோளின் பெயரில் (26.03.2023 ஞாயிறு) அவர்களுக்கான அறநெறிப் பாடசாலையினைப் பொறுப்பேற்றதோடு வாரம் தோறும் மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தையும் ஆரம்பித்து #வீரத் #திருமகள் #உலகநாச்சியாரின் பெயரும் சூட்டி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் வழங்கிவைத்தோம்.
விஷேடமாக இந்தப் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் பணியாளர்களது அர்ப்பணிப்பும் அந்த மாணவர்களின் கல்வித் தரம் நல்லொழுக்கம் என்பனவும் விஷேடமாகப் பெற்றோரின் ஊக்கமும் ஒத்துழைப்பும் இந்தப் பாடசாலையின் வெற்றிக்குக் காரணம்.
பெற்றோரின் கிராமத்து உபசரிப்பையும் கொளுக்கட்டையும் பசுப்பாலும் மீண்டும் ஓரு தடவை மறக்க முடியாத தருணமாகியது.