05/12/2023
இன்றைய தினத்தில் மற்றுமொரு அகவையில் தடம் பதிக்கும் நாம் கண்ட புதுமைப்பெண்...!!
"மக்களுக்கு பயனளிக்கும் சேவைகளை உளத்தூய்மையுடன் செய்யும் போது நல்ல மனசும், துணிவும் இருந்தால் போதும். அந்த ரப்பின் (இறைவனின்) துணையுடன் எதையும் செய்து முடித்துவிடலாம்..!! " எனும் குரல் தான் இவரிடம் இருந்து ஓயாமல் ஒலித்துக் கொண்டு இருக்கும் .
நல்ல நோக்கத்திற்கான ஒரு பயணத்தில் ஆயிரம் தடைகள் தோன்றலாம். ஒன்றையும் பொருட்படுத்தாது , மனவுறுதியுடன் எமது குறிக்கோளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தால் , நாம் ஆரம்பித்த அந்த பயணத்தில் வெற்றி காணலாம்" என்பதற்கு இவரை விட சிறந்த எடுத்துக்காட்டு வேறில்லை என்பேன்.
"புலிக்குப் பிறந்தது பூனையாகுமா!" என்பதைப்போல் அவுஸ்திரேலியா நாட்டில் முழுநேர சட்டத்தரணியாகவும், அவுஸ்திரேலிய முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவராகவும், கலை கலாச்சாரம் மற்றும் பல பெண்கள் உரிமை சார்ந்த பல சர்வதேச தொண்டு நிறுவனங்களில் மிக முக்கிய பங்குவகித்திருந்தும், இவையனைத்தும் அப்பால் எம்மில்
வேலை, குடும்பம் என இறுக்கமான இயல்பு வாழ்க்கையில் புதையுண்டவர்களின் மத்தியில் தனது நேரத்தினை சமூகத்தின் நலனிற்காக ஒதிக்கி,பல பொறுப்புக்கள் நிறைந்த பெண்ணாக வலம் வந்து ,
இவ்வுன்னத பணியினை வெற்றிகரமாக முன்னெடுத்து, தன்னை முனைப்போடு அர்ப்பணிக்கும் இவரை பல தடவைகள் வியந்து பார்த்ததுண்டு.!
தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் அன்னாரின் நிழல் என்றும் எம் சமூகத்தின் மீது தொடர "விட்ட இடத்திலிருந்து தொடங்குவோம்" எனும் நோக்குடன் எமது சமூதாய முதல் நிலைக்காக வழிகாட்டி, ஒளி ஊட்டும்
தூய எண்ணத்தில் A.R . MUNSOOR FOUNDATIONயினை பல அற்பணிப்புக்களுக்கு மத்தியில் ஏகனின் துணையுடன்
ஸ்தாபித்து, சர்வதேச ரீதியிலும் இவ் உன்னத சேவைகளை பல சவால்களையும் பல கசப்பான அனுபவங்களையும் கடந்து இறைவனின் உதவியால் 5ஆண்டுகளுக்கு மேல் நீதமாக தலைமைதாங்கி நடாத்திக் கொண்டு வரும் நாம் கண்ட புதுமைப் பெண் சகோ.மர்யம் மன்சூர் நளிமுடீன் அவர்கள் இன்றைய தினத்தில் வாழ்த்தப்பட வேண்டிய ஓர் புரட்சிப்பெண்...!!
இவருக்கு இந்நாளில் மட்டுமல்லாது; எந்நாளும் இறைவன் அருள்பாளிக்க இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம்.