23/05/2025
கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளியில் திருட்டுச் சம்பவம்! CCTV காட்சிகள்...
அன்பான பொதுமக்களுக்கு கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் விடுக்கும் அவசரமான அறிவித்தல்📍
எமது கல்முனை ஹுதா ஜூம்ஆ பள்ளிவாசலில் கடந்த 13.05.2025, செவ்வாய்க்கிழமை,
பிற்பகல் 02.00 மணியளவில் சூட்சுமமான முறையில் திருட்டு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இங்கு பதிவிடப்படும் காணொளி மற்றும் புகைப்படத்தில் காணப்படுகின்ற நபர் பள்ளிவாசலினுள் நுழைந்து எமது ஜும்ஆ பள்ளிவாசலின் முஅத்தினாருடன் சகஜமாக பேசி குளிர்பானம் ஒன்றை அவருக்கு வழங்கி மயக்கமுறச் செய்து மேற்குறித்த கேவலமான திருட்டுச் சம்பவத்தை எமது பள்ளிவாசலில் அரங்கேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பள்ளிவாசலின் பராமரிப்புக்காக சேகரிக்கப்பட்ட இம்மாதத்துக்குரிய (மே) சந்தா பணத்தின் பெரும் பகுதி திருடப்பட்டுள்ளது என்பதுடன் வயது போன பள்ளிவாசல் முஅத்தினை சுய நினைவு இழக்க செய்து அவரை மரணத்திற்கு இட்டுச் செல்லும் கொலை முயற்சியாகவே இந்த திருட்டு சம்பவம் உற்று நோக்கப்படுகின்றது.
இவ்வாறான கொடிய கயவனை அடையாளம் காண்பது எம் சமூகத்தின் தலையாய கடமைகளில் ஒன்றாகும்.
எனவே இங்கு தரப்படுகின்ற காணொளி மற்றும் புகைப்படத்தில் உள்ள நபரை தனிப்பட்டரீதியில் அறிந்தவர்கள் அல்லது ஏதாவது சந்தர்ப்பங்களில் கண்டவர்கள் உடன் கீழே குறிப்பிடப்படுகின்ற தொடர்பு இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு பணிவுடன் வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் மென்மேலும் அருள் புரிவான்.
நன்றி
இவ்வண்ணம்
செயலாளர்
ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் கல்முனை
077 911 4499
0773453922
0773452532