Mass Entry Queen

Mass Entry Queen Welcome to My World 🤪
Post Creative Administrator: Farweeth__🕺🏻
Post Publisher: Hazni__💃🏻

இந்த விவரம் சின்னதா இருந்தாலும் அட....!! ச்ச...!! இத்தனை வருஷம் தவறா புரிஞ்சிருக்கோமேனு தோணுச்சு.தீரன் அதிகாரம் ஒன்று இந...
21/08/2026

இந்த விவரம் சின்னதா இருந்தாலும் அட....!! ச்ச...!! இத்தனை வருஷம் தவறா புரிஞ்சிருக்கோமேனு தோணுச்சு.

தீரன் அதிகாரம் ஒன்று இந்த படத்துல வர ஒவ்வொரு சின்ன சின்ன விவரங்களும் டீடைல்ட்டா இயக்குனர் H வினோத் சொல்லிருப்பார்.
பல காட்சிகள் கவரும்படியாக இருந்தது.
அதுல இரண்டு காட்சிகள் மட்டும் சொல்றேன்.

இந்த படம் வரவரைக்கும், நான் உட்பட பல பேர் நினைச்சுட்டு இருந்த ஒரு விஷயம்,

கொ..../லை....யாளி விட்டுட்டுப்போன கத்திய கைக்குட்டை வச்சு தான் எடுக்கணும் இல்லனா எடுக்குறப்போ கொ....//லை....யாளி கை ரேகை அழிஞ்சிடும், நம்ப கை ரேகை பட்டுடும்,.

இதையே நம்ப சினிமா பாத்து தான் தெரிஞ்சிக்கிட்டு இருப்போம்

ஆனா இது முற்றிலும் தவறுனு காமிக்கிற மாதிரி இந்த படத்துல ஒரு காட்சி வரும்.

பயிற்சியின் போது,போலீஸ் உயர் அதிகாரி, பயிற்சி பெரும் காவலர்களிடம் ஒரு கேள்வி கேட்பார்.

"இது கிரைம் ஸ்பாட்ல குற்றவாளி யூஸ் பண்ண கத்தி ? இத எப்படி எடுப்பீங்க ?? "

முதலில் வந்த காவலர் ஒருவர் தன்னிடம் இருந்த கைக்குட்டையை கத்தியின் மேல் போட்டு கத்தியை எடுப்பார்.

கடுப்பான உயர் அதிகாரி ," எப்படி கத்துக்கிட்டிங்க ?? சினிமா பாத்தா " என்று கேட்டவுடன் அவரும் ஆமாம் என்ற சொல்ல மேலும் கடுப்பான அதிகாரி நெக்ஸ்ட் என்றவுடன்,

தீரன் வருவார்.

கத்தியை சற்று நேரம் நோக்கிவிட்டு ,மேலே படத்தில் உள்ளது போல் கத்தியை எடுப்பார்.

ஏன் அப்படி எடுத்தீங்க என்று உயர் அதிகாரி கேட்க.

" கைரேகை என்பது வியர்வை மாதிரி Body fluidல பதியறது தான் சார்.கர்ச்சீப் போட்டு எடுத்தாலும் அழிஞ்சிடும்.கிரிமினல் எந்த பக்கம் பிடிச்சிருப்பானு விஷுவல் பண்ணி பார்த்துட்டு அதுக்கு ஆப்போசிட் சைடுல மினிமம் handlingல எடுக்கணும்"னு விளக்கம் கொடுப்பார்.

அடுத்தது, எவிடென்ஸ் கண்டுபிடிக்க லைன் மெதட் உபயோகப்படுத்தி எவிடென்ஸ கண்டுபுடிக்கிற காட்சியும் தெளிவா புரியும்படி சிறப்பா இருக்கும்.

இதே மாதிரி இந்த படத்துல நிறைய காட்சிகள், அதுவரைக்கும் நமக்கு தெரியாத பல புதிய விவரங்களோடு கவரும்படியா இருக்கும்.

படம் காதலிக்க நேரமில்லை. ஓஹோ இந்த பொன்னான கைகள் புண்ணாகலாமா... என்ற பாடலில் ஒரு வரி வரும் - சேலாட்டம் கண்ணும் நூலாட்டம் ...
21/08/2026

படம் காதலிக்க நேரமில்லை. ஓஹோ இந்த பொன்னான கைகள் புண்ணாகலாமா... என்ற பாடலில் ஒரு வரி வரும் - சேலாட்டம் கண்ணும் நூலாட்டம் இடையும் ….

கண்ணதாசனின் அற்புத வரி.
சேலாட்டம் - சேல் என்றால் மீன் - மீன் போன்ற கண்ணும் என்னும் பொருள் பட எழுதி இருப்பார்.

சேல் என்பதை சேலை என நினைத்து அபிநயம் சேலைக்கு செய்து இருப்பார் நடன ஆசிரியர்.
இது எல்லோரின் கவனத்தையும் தப்பி படத்தில் இடம் பெற்று விட்டது....

சரி இதுக்கு என்ன சொல்ல போறிங்க ரசிகர்கள் என சொல்லும் கூட்டம் என அடி...../முட்.....//டா.....!ளா?சூர்யா நடித்த ஆதவன் படத்த...
20/08/2026

சரி இதுக்கு என்ன சொல்ல போறிங்க
ரசிகர்கள் என சொல்லும் கூட்டம் என அடி...../முட்.....//டா.....!ளா?
சூர்யா நடித்த ஆதவன் படத்துல

சின்ன வயசு சூர்யா முகம், பெரிய ஆள் சூர்யா முகம், ரெண்டும் ஒரே மாதிரிதான் இருக்கு, ஆனால் வீட்ல யாருக்கும் அடையாளம் தெரியல, அதுகூட பரவாயில்லை அவங்க அப்பாவுக்கு கூட அடையாளம் தெரியல.

இதுல அவரு கோர்ட் ஜட்ஜ், இதுவே கண்டுபுடிக்க முடியல, அங்க மட்டும் என்னத்த விசா.../ரிச்சு கி..//ழி...க்.க போராரோ.

இயக்குனர் பண்ண பெரிய தப்பு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ல சூர்யா முகத்தை அப்படியே யூஸ் பண்ணது, வேற யாரயாச்சும் நடிக்க வெச்சிருக்கலாம். இத சொன்னா சூர்யா ரசிகர்கள் திட்டுவாங்க.

கமர்சியல் படமெடுத்தாலும் கொஞ்சம் லாஜிக் இருக்கனும் அல்லவா...!!!

தல வெத்தளயல மை போட்டு கண்டுபிடிச்சிருப்பார் போல, இத சொன்ன அஜித் ரசிகர்கள் திட்டுவாங்கவேதாளம் இந்தப்படத்தில் வில்லன்கள் ப...
20/08/2026

தல வெத்தளயல மை போட்டு கண்டுபிடிச்சிருப்பார் போல, இத சொன்ன அஜித் ரசிகர்கள் திட்டுவாங்க

வேதாளம் இந்தப்படத்தில் வில்லன்கள் பெண்களை கடத்தி செல்லும் போது லக்‌ஷ்மி மேனன் பார்த்து மொபைலில் படம்பிடித்து விடுவார்.
பின்னர் லக்‌ஷ்மி மேனனை வில்லன் தாக்கிவிட்டு மொபைலையும் எடுத்து சென்றுவிடுவார்.

இதனால் லக்‌ஷ்மி மேனனுக்கு ஞாபக மறதி வந்துவிடும்.
பின்னர் எப்படி அஜித் வில்லன்களை கண்டுபிடித்தார்.

ஐ விட்னஸ் க்கு மெமரி லாஸ், மொபைலும் லாஸ், பின்னர் எப்படி அவர்களை கண்டுபிடிக்க முடியும்? ஒருவேளை CCTV ஏதும் இருந்திருக்குமோ.....

பிரபுதேவா இயக்கிய விஜய் படம், இந்தப்படத்தில் விஜய் இரண்டு கதாபத்திரத்தில் நடித்திருப்பார், பிளாஸ்பேக்கில் மூன்று வில்லன்...
20/08/2026

பிரபுதேவா இயக்கிய விஜய் படம், இந்தப்படத்தில் விஜய் இரண்டு கதாபத்திரத்தில் நடித்திருப்பார், பிளாஸ்பேக்கில் மூன்று வில்லன்கள் சேர்த்து அப்பா விஜயை கொ..../ன்று...../ விடுவார்கள்.
இவர்களை மகன் விஜய் ப..../ழி....வாங்குவார் அதுதான் கதை.

கதையெல்லாம் சரி, அது எப்படி மூன்று வில்லன்களில் ஒருவருக்கு கூட மகன் விஜய் அடையாமல் தெரியாமல் போனது. ஓ கெட்டப் சேன்ஜ். மீசை வச்சா அப்பா விஜய், ட்ரிம் பண்ணா மகன் விஜய்....

வழக்கமாக நாம ஒருவனை கொ....//லை செய்த பின்னர் அதே சாயலில் வேறு யாரையாச்சும் பார்த்தா, அவர மாதிரியே இவன் இருக்கானே!! என தோன்றுமல்லவா!! அது ஏன் இவர்களுக்கு தோன்றவில்லை.

இதுல ஒரு வில்லனோட மகன் என பொய் சொல்வார் விஜய், அட கடவுளே!!! அட கடவுளே!!! நீங்கள் அந்த இடத்துல இருந்த உங்க மனைவி கிட்ட என்ன கேள்வி கேட்பீங்க?

இவன் நான் கொ....\\லை செய்தவன் மாதிரி இருக்கான், அப்ப அவனுக்கும் உனக்கும் என்ன லிங்க்? என்றுதானே கேட்கனும். இத சொன்னா விஜய் ரசிகர்கள் திட்டுவாங்க.

விவேக் சொல்ற மாதிரி மச்சம், மீசை வச்ச மாறுவேடமா? மாறுவேடத்துக்கு மீதான மரியாதை போச்சுடா!!

ஏதோ ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரஜினிபேசும்போது, "நாங்கள் எல்லாம் வெயில்,மழை பாராமல் கஷ்டப்பட்டு நடித்து பெயரும்,புக...
20/08/2026

ஏதோ ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரஜினிபேசும்போது, "நாங்கள் எல்லாம் வெயில்,மழை பாராமல் கஷ்டப்பட்டு நடித்து பெயரும்,புகழும் வாங்க வேண்டியுள்ளது. இளையராஜாவோ, ஏசி அறையில், ஜாலியாக இசையமைத்தே பெயரும்புகழும் பெற்றுவிடுகிறார்" என்று கூற, பதிலளித்துப் பேசிய இளையராஜா "இசையமைப்பதென்றால் சாதாரண விஷயமா? நான் வேண்டுமானால் நடிக்கிறேன்; ரஜினிகாந்த் வேண்டுமானால் இசையமைத்துப் பார்க்கட்டும்" என்று கூறிவிட்டார். ஒரு பிரமுகர், இருவரையும் சமரசமாக்கும் முயற்சியாக "இளையராஜா நடித்த படத்தை யார் பார்ப்பார்கள்? ரஜினிகாந்த் இசையை யார் கேட்பார்கள். அவரவர், தங்களுக்குத் தெரிந்த வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் நல்லது" என்று பேசிவிட்டார். இதனால் ரஜினிகாந்த்−இளையராஜா இடையே மனஸ்தாபம் மூண்டு, பிரிந்ததாகப் படித்துள்ளேன் (அநேகமாக "வீரா" பட வெற்றி விழாவாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.

இதை வேறொரு கண்ணோட்டத்திலும் அணுகலாம். ஒரு பெரிய கதாநாயகன், தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட இசையமைப்பாளர் இசையமைக்கும் படங்களிலேயே நடித்தால், பாடல்களில் ஒருவித தொய்வுத்தன்மை ஏற்படும். ஆகவே, சிலபடங்களில் குறிப்பிட்ட இசையமைப்பாளர் இசையில் நடித்துவிட்டு, நடுவில் வேறு சில இசையமைப்பாளர்களைத் தன்படங்களுக்கு இசையமைக்கச் செய்து அந்த படங்களிலும் நடிப்பது வழக்கம். மீண்டும், குறிப்பிட்ட இசையமைப்பாளரை, தனது படங்களுக்கு இசையமைக்க வைப்பார். இதனால் பாடல்களில், ஒரே மாதிரி பாணியிலான இசைத்தொய்வு நேராது; இசைரசிகர்களுக்கும் வித்யாசமான இசை விருந்து கிடைக்கும்.

உதாரணமாக, "ஆயிரத்தில் ஒருவன்" படத்திலிருந்து, எம்.எஸ்.விஸ்வநாதன், எம்.ஜி.ஆர் படங்களின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறினார். ஆனால் அவரையே தொடர்ந்து, தனது படங்களுக்கு இசையமைக்க விடாமல், நடுநடுவே, கே.வி.மஹாதேவன், சங்கர் கணேஷ், குன்னக்குடி வைத்தியநாதன் ஆகியோரையும் தான் நடித்த படங்களுக்கு இசையமைக்கச் செய்தார் எம்.ஜி.ஆர். பிறகு மீண்டும் தன்படங்களுக்கு எம்.எஸ்.விஸ்வநாதனை இசையமைக்கவும் வைத்தார். இளையராஜா இசையிலும் "இதுதான் என் பதில்" படத்தில், எம்.ஜி.ஆர் நடிப்பதாக இருந்து, ஓரிரு பாடல்களும் பதிவுசெய்யப்பட்ட நிலையில், படம் கைவிடப்பட்டது.

இதே பாணியில்தான் ரஜினியும் செயல்பட நினைத்தார். ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, அநிருத், வித்யாசாகர், சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இசையமைத்த படங்களில் நடித்தார். மீண்டும் இளையராஜா இசையில் நடிக்கலாமென்று அவர் நினைத்திருந்தாலும், இளையராஜா இசையமைத்த இதர படங்களின் பாடல்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெறத் தவறியது, மாறிப்போன இசை ரசனைஅலையை மீறி, இளையராஜா இசை ஜொலிக்க இயலாமை (விதிவிலக்குகள் தவிர), தயாரிப்பாளர்கள், இயக்குநர்களின் இளையராஜா இசைஒதுக்கம் குறித்த நிர்ப்பந்தம், தனது படப்பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியிலுள்ள வரவேற்பை, இளையராஜா வின் தற்போதைய பாடல்கள் தகர்த்துவிட்டால் என்னாவது? என்ற குழப்பம் உள்ளிட்ட பல காரணங்களால் ரஜினிகாந்த் இளையராஜாவைத் தான் நடிக்கும் படங்களுக்கு இசையமைக்கச் செய்வதில்லை என்றும் கருதலாம்.

இளையராஜாவைப் பாராட்டும் நிகழ்ச்சிகளில், ரஜினிகாந்த் பங்கேற்காவிட்டாலும், இளையராஜா இசையமைத்த திருவாசக இசை வெளியீட்டு விழா, கமலஹாசன்60 பாராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, இளையராஜாவைப் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்யராஜும் , R. சுந்தர்ராஜனும் ஒண்ணாப் படிச்சவங்க. பாக்யராஜ் சென்னை வந்து assistant director ஆகவும் ஆகிவிடுரார்.சுந்தர்...
20/08/2026

பாக்யராஜும் , R. சுந்தர்ராஜனும் ஒண்ணாப் படிச்சவங்க. பாக்யராஜ் சென்னை வந்து assistant director ஆகவும் ஆகிவிடுரார்.

சுந்தர்ராஜன் வீட்டுல 'உங்க friend எல்லாம் சினிமால இருக்காங்க நீங்களும் இருக்கீங்களேன்'னு உசுப்பி விடறாங்க.

உடனடியா பாக்யராஜைப் பாக்க வரார். பாக்யராஜும் சரி நம்மகூட‌ படிச்சவன், ஒண்ணுமுண்ணா திரிஞ்ச பையன் நாம ஏதாவது செய்யனுமேன்னு அவரைக் கூட சேத்துக்கறார்.

இப்படி இருக்கப்போ ஒருநாள் பாக்யராஜ் சுந்தர்ராஜன்கிட்ட, 'டைரக்டர் இப்ப வருவாரு வந்தா வணக்கம் வச்சுட்டு இருக்க சொல்லு,வேற எதுவும் பேசீராத , குளிச்சுட்டு வந்தர்ரேன்'னு சொல்லீட்டு போவார்.

குளிச்சு முடிச்சு வந்தா ரூம்ல friend மட்டும் இருக்கார். டைரக்டர் இன்னும் வரலைன்னு நெனச்சுட்டு வெளிய வந்தா அங்க பாரதிராஜா நின்னுட்டிருப்பார்.

'சார் என்ன சார் நீங்க வெளிய நின்னுட்டு எப்ப சார் வந்தீங்க'ன்னு கேப்பார்.

பாரதிராஜா 'யோவ் எவன்யா அவன் உள்ள.. நான் யார்னு தெரியுமா அவனுக்கு.. எனக்கு சீன் சொல்றான்யா அவன்'னு சொல்லுவார்.

அப்றம்தான் அவர் வெளிய நின்ன காரணம் பாக்யராஜுக்கு புரிஞ்சது.

பாரதிராஜா உள்ள போனதும் சுந்தர்ராஜன் வணக்கம் சொல்லி வரவேற்றுட்டு சும்மா இல்லாம 'சார் நீங்க அந்தப் படத்துல இந்த சீன் இப்படி வச்சிருக்கலாம்'னு ஆரம்பிச்சிருக்கார். எவன்னே தெரியாதவன் எனக்கு சீன் சொல்றானான்னு கோவமா கெளம்பி வெளிய போயிருக்கார்.

இப்படி ஆரம்பமே ரணகளமா இருந்தாலும் பாக்யராஜ் அவரை சமாதானப்படுத்தி 'இல்ல சார் எங்க ஊரு பையன், நல்ல திறமையான ஆளு, நம்மகிட்ட assistant இல்லேயே அதான் சேத்துக்கலாம்னு வரச்சொன்னேன்'னு சொல்லுவார். உடனே பாரதிராஜா, 'யோவ்.. அவன் பேசறதே சரியில்ல.. அவன எனக்கே assistant ஆ போடச்சொல்றயான்'னு கேப்பார்.

பாக்யராஜ் எப்படியோ அவருக்கே assistantஆ சேர்த்தும் விட்டிருக்கார்.

அந்த R.சுந்தர்ராஜனும் assistant ஆகி சினிமா கத்துக்கிட்டு வைதேகி காத்திருந்தாள் , மெல்லத் திறந்தது கதவு , ராஜாதி ராஜா , அம்மன் கோவில் கிழக்காலே , காலமெல்லாம் காத்திருப்பேன் , சுயம்வரம்

இப்படி பல ஹிட் படங்களைக் கொடுத்து ஜெயிக்கவும் செஞ்சுட்டார்.

தன் நண்பனைப் பாத்து அதே மாரி ஆகனும்னு ஒருத்தன் ஆசைப்படறதும் , அவன் மேல பொறாமைப்படாம நண்பன்னு அவனைக் கூடவே தங்கவச்சு முன்னேறட்டும்னு வாய்ப்பு வாங்கிக்குடுக்கறதும் , அப்படி assistant ஆனவங்க எல்லாம் ஜெயிக்கறதில்லையே , அப்படிக் கிடைச்ச வாய்ப்புல பாக்யராஜ் சொன்னமாரி திறமையான ஆளுன்னு காட்டி ஜெயிக்கறதும் இது எல்லாமே சினிமாக் கதைகள்ல மட்டும்தான் நடக்கற விசயங்கள். சினிமாக் காரங்களே அதை செஞ்சிருக்காங்க. இதுல பாக்யராஜ் , சுந்தர்ராஜன் , பாரதிராஜா யாரைப் புகழ்றதுன்னே தெரியல...!!

ரஜினியின் சமீபத்திய திரைப்படங்களில் காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளதா என்று என் நண்பன் கேட்டான் நல்லா கேக்குறாங்கய்...
20/08/2026

ரஜினியின் சமீபத்திய திரைப்படங்களில் காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளதா என்று என் நண்பன் கேட்டான்

நல்லா கேக்குறாங்கய்யா கேள்வி.. இன்னா வயசு நம்ப சூப்பர்ஸ்டாருக்கு.. இப்படி ஒரு கேள்விய கேட்டுப் போட்டீங்களே..

சமீபத்திய திரைப்படம் என்றாலே யோசிக்க வேண்டியிருக்கிறது… வருஷத்துக்கு ஒரு படம் அவரது படம் வந்தால் பெரிது எனும்போது சமீபம் எங்கே அந்த காலம் எங்கே..

இது ஒருவகைப் பார்வை என்றால் ரஜினி அவர்கள் நடித்த பல படங்களுமே சமீபத்தியவை போலத்தான் இருக்கிறது என்று அவரை ரொம்ப பிடித்தவர்கள் சொல்வார்கள்.

அவரது காதல் காட்சிகள் பார்க்க விரும்புவோர் புதுக்கவிதை படம் பார்க்கலாம், குறிப்பாக கடைசி அரைமணி நேரம்.. ஜானி பார்க்கலாம்.. ஸ்ரீ தேவி ப்ரொபோஸ் பண்ணும் சீன், ராஜாதிராஜா ராதாவோடு பார்க்கலாம், நான் சிகப்பு மனிதன் பெண்மானே அம்பிகா வோடு, அன்னை ஓர் ஆலயம் ஸ்ரீப்ரியா வோடு பார்க்கலாம், நல்லவனுக்கு நல்லவன் ராதிகாவோடு பார்க்கலாம், மூன்று முகம் (அலெக்ஸ் பாண்டியன்..ஷீலா உள்ளே போ ) ராஜலக்ஷ்மி யுடன் பார்க்கலாம்..

அவரது கண்கள் ஒரு ஈர்ப்பு சக்திகொண்டவை. (மின்சாரக்கண்ணா.. ) விரசம் இல்லாமல் காதல் செய்பவர். படையப்பா அண்ணாமலை போன்றவற்றில் நெருங்கும்போது காமெடியாக மாற்றி ரசிகர்களைக் கொள்ளை கொள்ளுவார்…

இத்தனை வயதில் சிவாஜி படத்தில் ஸ்டைல் பாட்டுக்கு படாத பாடு பட்டிருப்பார்.. சஹானா சாரல் பாட்டு ஒன்றும் வித்தியாசம் ரொம்ப தெரியாது. ரோபோவுக்குப்பின் சற்று வயது தெரிகிறது. காலா தர்பார் எல்லாம் விட்டுவிட்டாலும் கபாலியில் அவ்வளவு மோசமில்லை, பேட்ட யில் சிம் வீடு முன் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும்போது கியூட் ஆகத்தான் தெரிந்தது.

முந்தைய காலங்களில் எனக்கு ரஜினி அவர்கள் படங்கள் என்றால் அறவே பிடிக்காது.. 16 வயதினிலே பாதிப்பு அப்படி. படிக்காதவன் ரஜினி அம்பிகா மாப்பிள்ளை ரஜினி அமலா படத்துக்குப்பின் காமெடி சேர்ந்தபின் ரசிக்கும்படி நிறைய செய்ததால் ஓகே. குடும்பத்துடன் நெளியாமல் காதல் காட்சிகள் பார்க்க முடிவது சூப்பர் ஸ்டார் படங்களில் தான். கச்சா முச்சா என்றிராது.

நடிகர் திலகம் எனக்கு மிகவும் பிடிக்கும் தான். ஆனால் பெரிய தொப்பையோடு திரிசூலம், பட்டாக்கத்தி பைரவன் போன்றவற்றைப் பார்த்தால் அவ்வளவு சிறப்பாக இராது.

யார் என்ன பாத்திரம் நடிக்க வேண்டும் என்று பார்த்தா ரோல் கொடுக்கிறார்கள்.. இது ஒரு வியாபார சந்தை… இங்கே எதை விற்று பணம் தேற்றலாம் என்றே வருவார்கள். நம்மைப்போன்றவர்கள் தேவையானதை எடுத்துக்கொண்டு மற்றதை விட்டுவிடலாமே…

வயதை மனதில் கொண்டு நெருக்கமான காட்சிகளை அவரும் மிகவும் சாமர்த்தியமாக தவிர்த்துத் தான் விடுகிறார் என்று தோன்றுகிறது. சோஷியல் டிஸ்டன்ஸிங் வருமுன்னாடியே தள்ளிநின்றுவிட்டார்… இனிவரும் காதல் காட்சிகள் மாஸ்க் போட்டு நடிப்பார்களோ தெரியவில்லையே…

சூர்யா அண்ணன் எப்படியோ யோசிச்சு, "நாம பண்ற சண்டையெல்லாம் பார்த்துட்டு பப்ளிக் நம்மளை ரொம்பவே ஓட்டிட்டாங்க, இனிமே சென்டிம...
20/08/2026

சூர்யா அண்ணன் எப்படியோ யோசிச்சு, "நாம பண்ற சண்டையெல்லாம் பார்த்துட்டு பப்ளிக் நம்மளை ரொம்பவே ஓட்டிட்டாங்க, இனிமே சென்டிமென்ட்ல இறங்குவோம்"னு இறங்கி பண்ணி வச்சிருக்கற மாஸ்டர் பீஸ்தான் இந்த 'விஸ்வநாதன் & சன்ஸ்'!

​படத்தில் சூர்யா ஒரு கோடீஸ்வரத் தொழிலதிபர், கூடவே ஒலிம்பிக் கோல்டு மெடல் வாங்கிய சூட்டர் வேற! (நம்ம ஆளுக்கு பில்டப் கொடுத்தாதான் தியேட்டர்ல விசில் பறக்கும்ல?).

வாடகைத் தாய் வயது வித்தியாசமான காதல் மற்றும் குடும்ப உறவுகள் பற்றிய ஒரு வித்யாசமான கோணத்தை இப்படம் பேசுகிறது.

​சரி, வாரிசுக்காக வாடகைத் தாய் கான்செப்ட்டை கையில் எடுக்கிறார். அங்கே என்ட்ரி கொடுக்குறாங்க நம்ம ஹீரோயின் மாமிதா பைஜு!

படத்தில் இவர்தான் அந்த வைப்ரேஷன். சூர்யா கூடவே சுத்திக்கிட்டு "லவ் பண்றேன்"னு கலாய்க்கிற சீன்ஸ் தியேட்டரில் சின்ன சிரிப்பை வரவழைக்கும்.

​இங்கதான் லாஜிக் கொடைக்கானல் குளுமைக்குப் போகுது:

42 வயசுக்காரருக்கும், 22 வயசுப் பொண்ணுக்கும் (அதாவது காலேஜ்ல இப்பதான் பெஞ்ச் மாத்தி உட்கார ஆரம்பிக்கிற வயசு) நடுவுல ஒரு லவ் டிராக் ஓடுது பாருங்க... அதைத் திரையில் பார்க்கும்போது நமக்குத்தான் "ஐயோ பாவம்"னு இருக்கும்.

ஆனா டைரக்டர் வெங்கீ அட்லூரி இதெல்லாம் ரொம்பச் சாதாரணமா நடக்குற மாதிரி ஸ்கிரீன் பிளே பண்ணி நம்மைச் சோதிச்சிருப்பார் பாருங்க, அதுதான் அல்டிமேட் காமெடி!

​குடும்ப சென்டிமென்ட் என்ற பெயரில்...வீட்டில் ராதிகா சரத்குமார் இருக்காங்க. அவங்களுக்கு ஒரே டென்ஷன் – "என் மகனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும், பேரன் பேத்தியைப் பார்க்கணும்!"

​பையனோ, "நான் கல்யாங்கமே பண்ண மாட்டேன், பிரம்மச்சாரி"னு "பீஷ்ம பிரம்மச்சாரி பிரதிஞை" பண்ணிட்டுத் திரிவான்.

கடைசியில் இந்த ஜெனரேஷன் கேப் காதலை நியாயப்படுத்த படக்குழு படும் பாடு இருக்கே... சாமி, சாமி!

தியேட்டருக்குக் குழந்தைகளைக் கூட்டிக்கிட்டு வர்ற அப்பா-அம்மாக்களுக்கு, அந்தப் படத்தில் வர்ற சில 'விஷயங்களை' (அதாவது அந்த மந்த்-எண்ட் ட்ரிப்ஸ் & கன்டெண்ட் சீன்ஸ்) எப்படிப் புள்ளைங்களுக்கு எக்ஸ்பிளைன் பண்றதுன்னு தெரியாம முழிப்பாங்க பாருங்க, அதுதான் இந்தத் படத்தின் உண்மையான ஹைலைட்டே!

​இசை: ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை படத்திற்குப் பலம் சேர்த்துள்ளது.

​ஃபர்ஸ்ட் ஹாப் ஜாலி,

செகண்ட் ஹாப் காலி!

​முதல் பாதி: மாமிதா பைஜுவின் ஓவர் க்யூட் (Loosu Ponnu hangover) சேட்டைகள், சூர்யாவை வச்சு செய்றதுனு தியேட்டரில் சும்மா கலகலன்னு ஓடும்.

​இரண்டாம் பாதி: திடீர்னு எல்லாரும் எமோஷனல் ஆகி, அழுது, அழுது நம்மைச் சோக கடலில் தள்ளிவிட்டுருவாங்க.

எங்கு பார்த்தாலும் "குடும்பம் தான் முக்கியம் பிகளு"னு ஒரே அட்வைஸ் மழை பொழிவாங்க.

இந்த வார இறுதியில் சூர்யாவின் இந்த 'சாக்லேட் பாய் டூ சீனியர் சிட்டிசன் லவ்வர்' பரிணாமத்தைப் பார்த்து ரசிக்க உங்களது மூளையை கழட்டி வீட்டுல வச்சிட்டுப் போனா... படம் செம ஜாலியாக இருக்கும் .

பிரபலமான நடிகர் இல்லைஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் இல்லைஇசைப்புயல் சூறாவளி சுனாமி எல்லாம் இசை அமைக்கவில்லைமும்பையில் இர...
20/08/2026

பிரபலமான நடிகர் இல்லை

ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் இல்லை

இசைப்புயல் சூறாவளி சுனாமி எல்லாம் இசை அமைக்கவில்லை

மும்பையில் இருந்தோ கேரளத்தில் இருந்தோ இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளைத்தோல் கதாநாயகி இல்லை

சநதானமோ சூரியோ யோகி பாபுவோ ஏன்உதயநிதி ஸ்டாலின் போன்ற காமெடி நடிகர்களும் நடிக்கவில்லை..

நடித்த இரு பிரபலங்கள் அதுவும் முகமறிந்த பிரபலங்கள் அஜீத் மச்சான் ரிச்சர்ட்டும் கருணாஸூம்தான்..

ஆனால் டிரெயிலர் நிஜமாகவே தெறிக்க விட்டு இருக்கிறது…

அஜித் விஜய் சூர்யா சிவகார்த்திகேயன் படங்களுக்கு நிகரான எதிர்ப்பார்ப்பையும் ரஜினி படங்களை விடவும் பெரிய பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ள படம்தான் திரௌபதி.

பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தின் மூலம் அறிமுக இயக்குநராக கால. பதித்த மோகன் ஜி அவர்களின் படைப்பு.

2013 ல் தமிழகத்தில்வடமாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் இது.

அதாவது கல்லூரி செல்லும் வசதியான. வீட்டுப் பெண்களை குறிவைத்து காதல் வலையில் வீழ்த்தி கல்யாணம் என்ற பெயரில் வீட்டை விட்டு வெளியே வரவைத்து உல்லாசம் அனுபவித்து அதை வீடியோவாக எடுத்து அதை வைத்து ்்

அந்த பெண்ணின் தகப்பனிடம் லட்சக்கணக்கில் பேரம் பேசி பணம் பறிப்பதுதான் நாடக காதல் என்ற பெயரில் புதிய தொழிலாக நடந்து வருகிறது.

இதற்காகவே சில பையன்களை தேர்வு செய்து அவன்களுக்கு பைக் பாக்கெட் மணி எல்லாம் தந்து அவனுக்கு தக்க சட்ட பாதுகாப்பு வரை ஏற்படு செய்து தருவது வரை ஒரு பெரிய கும்பல் பக்கா பிளான்களுடன் இயங்கி வருகிறது.

அந்த அப்பாவி பையன்களிடம் சாதியை ஒழிக்கிறோம் என உசுப்பேற்றி பணக்கார பெண்களை காதலிக்க. வைத்து பிறகு அந்த பெண்ணை கழற்றி விட ஒரு குறிப்பிட்ட தொகையும் தருகிறார்கள..கிட்டத்தட்ட மாச சம்பளம் மாதிரி வாங்கிக் கொண்டு காதல் வேட்டை நடத்துகிறனர்.

மறுபுறமோ இவனுக பேசும் டயலாக்கை நம்பி உருகி உருகி காதலித்து உயிர் கொடுத்த பெற்றோரையும் உதறித்தள்ளி உயிரினும் மேலான மானத்தை காதல் என்ற பெயரில் தொலைத்து பின்பு கயவர் கும்பலால் சீரழிக்கப்பட்டு உருக்குலைந.து நடைபிணமாக வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் நிலைதான் அப்பாவி பெண்களின் கதி. இதில் மீண்டு வருவது என்பது கிட்டத்தட்ட மறுபிறவி மாதிரிதான்.

மறுபுறம் பெண்பிள்ளையை பாராட்டி சீராட்டி வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கி ஒரு நல்ல பையனிடம் ஒப்படைக்கலாம் என கனவு கண்ட பெற்றோருக்கும் சரி சகோதரனுக்கும் சரி ஒரு இரவில் போன் கால் அதில் பேசுகிறவன் உங்க பெண் அவளோட காதலனுடன் எங்கள் பாதுகாப்பில் உள்ளாள். போலீசுக்கு போகும் முன் இந்த படங்களை பாருங்கள் என வீடியோவை அனுப்பி விட்டு கேட்கிற பணத்தை கொடுத்து பிள்ளையை காப்பாத்துற வழியை பாருங்கள் என சொன்னால் எப்படி இருக்கும்???

இதுதான் பெண் பிள்ளைகளை பெற்றவர்களின் இன்றைய கதி..

இந்த படத்தில் இரண்டு வசனங்கள் வரும் அடங்குனா அடங்க கூடாது என எங்கண்ணன் சொல்லி இருக்காரு பெரிய வீட்டு பெண்களை காதலிக்குறதுதான் கெத்து என ஒரு பையன் பேசுவான்.

இது மாதிர செய்யவில்லை என்றால் என்னை கொன்று தண்டவாளத்தில் எறிந்து விட்டு பழியை பெண்ணை பெற்றவர் மீதே போட்டுவிடுவோம் என அந்த பையன் கதறுவான். இதுதான் பல மர்ம மரணங்களுக்கு காரணம்.

இந்த நாடக காதல கும்பலின் தலைவன் சொல்வான் இவனுக ஊருக்குள்ள நுழையணும் என்றால் முதலில் அவனுக வீட்டு பெண்கள மீது கையை வைக்க வேண்டும் என்று..

இது எல்லாம் ஒரு சாதி கட்சி தலைவன் மேடை போட்டு சரக்கு இல்லை மிடுக்கு இல்லை பொம்பள சமாச்சாரம் என பேசியதுதான்.

இந்த டிரெயிலருக்கு பொங்குமவர்கள் அந்த சாதி கட்சி தலைவன் அசிங்கமாக பேசும்போது வாய் மூடி இருந்த மர்ம்ம் என்ன???

ஆக அந்த நாடக கும்பலை தவிர்த்த ஒட்டு மொத்த சாதிகளை சேர்ந்த மக்களும் இந்த படத்தை கொண்டாடி தீர்க்கிறனர்.

இந்த படத்தின் இயக்குநர் கூறியது இது அம்மா மகன் பார்க்க வேண்டிய படம் இல்லை அப்பா மகள் பார்க்க வேண்டிய படம். தியேட்டரில் பார்க்க விட்டாலும் கூட பரவாயில்லை டவுன்லோடு செய்தாவது பாருங்கள் என்று. எவ்வளவு பெரிய பரந்த மனது!!!

நிச்சயம் எல்லோரும் சொல்வது போல கைக்காசு போட்டு குறைந்தபட்சம் நூறு பேரையாவது தியேட்டருக்கு அழைத்து செல்வோம் என உறுதியாக கூறுகிறேன்.

Address

Kalmunai
32300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mass Entry Queen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share