18/07/2021
🛑 தெளிவிற்காக:
ரிசாட் பதியூதினில் இல்லத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் சில விடயங்கள் ஊடகங்களில் உண்மைக்கு புறம்பாக பேசப்படுகின்றது!
பொலிஸார் கூறிய தகவல்கள் கூட திரிவுபடுத்தப்பட்டு சில இணைய ஊடகங்கள், சிங்கள சில ஊடகங்கள் எழுதி acmc தலைவர் ரிஷாத் பதியுதீனின் மீதான காழ்ப்புணர்ச்சியின் உச்சத்தில் சிலரின் ஊக்குவிப்பு மூலம் பூதாகரமாக்கப்படுகின்றது என்பது தெளிவான உண்மை!
சில ஏஜெண்டுகள் மைக்குக்கு முன் வீரவசனம் பேச ஆரம்பித்துள்ளார். அது வழக்கமானது- பதியுதீன் என்ற நாமம் இல்லாவிடின்- அரசியல் இல்லை.
1- மரணித்த இஷாலினி என்ற பெண் தொடர்பில்:
குறித்த பெண் தலைவர் ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் மிக வறுமையான நிலையில் வேலைக்காக சேர்ந்தார். அவர் வேலைக்கு இணையும் போது 16 வயது பூர்த்தி என சொல்லப்படுகின்றது. அத்துடன் 16 வயது என்பதால் அது சட்டரீதியாக பிரச்சினை இல்லை. என்பதாக அறிகின்றேன்.
மரணத்தினால் எந்த வித பாதிப்பும் இல்லை ( வீட்டாருக்கு) நேரத்தோடு வீட்டில் வேளை செய்தவளது தந்தை மூலமாக வந்துள்ளாள் இதுவரை சுமார் 3 1/2 இலட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளது.
ஆக, குறித்த பிள்ளையின் வறுமை நிலையை கவனத்திற்கொண்டே அவருக்கான, அந்த பெண்ணின் குடும்பத்திற்கு உதவும்
நோக்கில் அவர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
2- தற்கொலை:
குறித்த பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவே சந்தேகிக்கப்படுகின்றது.
கொழும்பு விசேட சட்டவைத்திய நிபுணர் எம்.என். ரூஹுல் ஹக் இந்த பிரேத குறித்த மரணம் தொடர்பிலான பரிசோதனைகளை முன்னெடுத்த நிலையில், வெளிப்புற தீக்காயங்கள் , கிருமி தொற்றினால் ஏற்பட்ட அதிர்ச்சி மரணத்துக்கான காரணமாக அதில் கண்டறியப்பட்டுள்ளது. அது நீதிமன்ற்றிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
3- வன்கொடுமை:
இஷாலினி என்ற அந்த பெண்ணுக்கு எந்தவிதமான சித்திரவதைகள், கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டதற்கான சான்றுகள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இஷாலினி தரம் 7 வரையே கல்வி பயின்றுள்ளதாக விசாரணைகளில் வெளிப்பட்டுள்ள நிலையில், அவரது 12 ஆவது வயதில் பதிவான சில சம்பவங்கள் மற்றும் டயகம பகுதியில் இஷாலினியின் வாழ்வில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் கடந்த கால விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று டயகம நோக்கி சென்றுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆனால், இந்த விவகாரம் தொடர்பில் போலியான செய்திகள் எழுதி, தலைவர் ரிஷாத் பதியுதீன் மீது இட்டுக்கட்டுப்பட்டு எழுதப்படுகின்றது. மிக கவலையானது!!
4- அன்று நடந்தது என்ன .?
கடந்த 3 ஆம் திகதி, காலை 6.50 மணியளவில், கீழ் மாடியில் இஷாலினியின் சப்தம் கேட்டு அங்கு சென்று பார்த்த போது, உடலில் தீ பரவிய நிலையில் அலறுவதை அவதானித்ததாகவும், பின்னர் கால் துடைப்பான் ஒன்றின் துணையுடன் தீயை அனைத்து சிறுமியை அருகில் இருந்த நீர் தொட்டியில் இறக்கியுள்ளார் ரிஷாத் பதியுதீனின் மாமனார்,
அதன் பின்னர் இஷாலினியை 1990 அம்பியூலன்ஸ் வண்டி ஊடாக வைத்தியசாலைக்கு அழைத்து சென்றதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் ஸ்தல பரிசோதனைகளை பொலிஸ் ஸ்தல பரிசோதனை அதிகாரிகள் முன்னெடுத்ததாகவும், குறித்த இடத்தின் சிசிரிவி பதிவுகளையும் ஆராய்ந்ததாக பொலிஸார் நீதிமன்றுக்கு எற்கனவே அறிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே இஷாலினி தனக்கு தானே மண்ணெண்ணை ஊற்றி தீ மூட்டிக்கொண்டதாக, தீவிர சிகிச்சைகளினிடையே வைத்தியர்களிடம் கூறியதாக அறிய முடிகிறது.
5- mp ரிஷாத் பதியுதீனுக்கும், இந்த சம்பவத்திற்குமான தொடர்பு.?
தலைவர் ரிஷாத் பதியுதீன் ஏலவே 3 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு இந்த சம்பவத்த்திற்கும் தொடர்புகளில்லை.
இந்த விசாரணைகளில், அவசியம் ஏற்படுமிடத்து, தற்போது சி.ஐ.டி. பொறுப்பில் உள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படும் என விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
6- வீட்டில் உள்ளோர்:
ரிசாட்டின் இல்லத்தில்: அவரின், மனைவின் குடும்பம் வாழ்கின்றது. எங்கு உள்ளவர்கள் அனைவரும் ஈமானிய சொந்தங்களே, துன்புறுத்தல் சித்திரவை என்ற பேச்சுக்கே இடமில்லை. மிக அன்பாக பழககூடியவர்கள், என்பதை மிக தெளிவான கூறுகின்றோம்.