SL LATEST NEWS

SL LATEST NEWS 💯நம்பகமான செய்திகளின் அடையாளம்🔥 News

🔴மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் அவசர வான் கதவு திறப்பு!மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில், தொடர்ந்து பெய்துவரும் மழையு...
24/07/2025

🔴மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் அவசர வான் கதவு திறப்பு!

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில், தொடர்ந்து பெய்துவரும் மழையுடனான வானிலையால், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் அவசர வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேல் கொத்மலையில் நீரேந்துப் பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்குமாயின், நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் திறக்கப்படும் சாத்தியம் நிலவுகிறது.

இந்தநிலையில், கொத்மலை ஓயாவின் இருபுறமும் வசிப்பவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.

இதேவேளை, தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையுடனான வானிலை காரணமாக, செயிண்ட் கிளேயர் மற்றும் டெவோன் நீர்வீழ்ச்சிகளில் நீரின் அளவு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர்.

🔴வெள்ளியின் விலை பாரியளவு அதிகரிப்பு!சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை சுமார் 14 ஆண்டுகளின் பின்னர் பாரிய அதிகரிப்பைப் ப...
24/07/2025

🔴வெள்ளியின் விலை பாரியளவு அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை சுமார் 14 ஆண்டுகளின் பின்னர் பாரிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாகச் சந்தைத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க வரிக் கொள்கை, மற்றும் தங்கத்திற்கு மாற்றாக வெள்ளியில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளமை என்பன இதற்கான காரணங்களாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 0.3 வீத அதிகரிப்புடன், 39.40 டொலர்களாக விற்பனை செய்யப்படுகிறது.

இது, 2011 செப்டம்பருக்குப் பின்னர் வெள்ளிக்குக் கிடைத்த அதிகபட்ச விலையாகும்.

இதேவேளை நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த ஆண்டு வெள்ளி விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 42 டொலர்களை எட்டக்கூடும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

🔴தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு!சந்தையில் தக்காளி விலை வேகமாகச் சரிந்து வருவதால் தக்காளி உற்பத்தியாளர்கள்...
24/07/2025

🔴தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு!

சந்தையில் தக்காளி விலை வேகமாகச் சரிந்து வருவதால் தக்காளி உற்பத்தியாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

ஒரு கிலோகிராம் தக்காளியை ரூ.15 முதல் 20 வரை வர்த்தகர்கள் கொள்வனவு செய்வதாக அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

வெலிமடை, எல்ல, அடம்பிட்டி, நெலுவ, ஹாலிஎல, பண்டாரவளை உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது தக்காளி அறுவடை நடைபெற்று வருகிறது.

இருப்பினும், கடந்த காலங்களில் ஒரு கிலோகிராம் தக்காளி ரூ.900 முதல் 1000 வரை விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

🔴ரம்புட்டான் மரங்களுடன் தொடர்புடைய விபத்துக்கள் அதிகரிப்பு!கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் ரம்புட்டான் மரங்...
24/07/2025

🔴ரம்புட்டான் மரங்களுடன் தொடர்புடைய விபத்துக்கள் அதிகரிப்பு!

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் ரம்புட்டான் மரங்களால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

ரம்புட்டான் மரங்களை விலங்குகளிடமிருந்து பாதுகாக்க சிலர் மின்சார கம்பிகள் கொண்டு பாதுகாப்பு வேலிகள் அமைப்பதால், இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் விசேட அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் விராஜ் ரோஹன அபேகோன் தெரிவித்தார்.

அதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் தற்போது பலர் சிகிச்சை பெற்று வருவதாக விசேட அறுவை சிகிச்சை நிபுணர் விராஜ் ரோஹன அபேகோன் குறிப்பிட்டார்.

அதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் தற்போது பலர் சிகிச்சை பெற்று வருவதாக விசேட அறுவை சிகிச்சை நிபுணர் விராஜ் ரோஹன அபேகோன் தெரிவித்தார்.

இதேவேளை, சிறு குழந்தைகளுக்கு பெற்றோர் ரம்புட்டான் கொடுக்கும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்கமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

🔴சிக்குன்குன்யா வைரஸ் குறித்து WHO எச்சரிக்கை!இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் உலகையே புரட்டிப் போட்ட கொசுக்களால் பரவிய ‘ச...
24/07/2025

🔴சிக்குன்குன்யா வைரஸ் குறித்து WHO எச்சரிக்கை!

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் உலகையே புரட்டிப் போட்ட கொசுக்களால் பரவிய ‘சிக்குன்குன்யா’ வைரஸ் மீண்டும் ஒரு தொற்றுநோய் பரவாமல் தடுக்க உலக சுகாதார அமைப்பு (WHO) அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
WHO அதிகாரி டயானா ரோஜாஸ் அல்வாரெஸின் கூற்றுப்படி, 5.6 நாடுகளில் சுமார் 119 பில்லியன் மக்கள் இந்த வைரஸின் அபாயம் உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர்,

இது காய்ச்சல், கடுமையான மூட்டு வலி மற்றும் நீண்டகால இயலாமைக்கு வழிவகுக்கும்.

லா ரீயூனியனில் வசிப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கை இந்த வைரஸ் ஏற்கனவே பாதித்துள்ளதாக அல்வாரெஸ் கூறினார்.

மடகாஸ்கர், சோமாலியா மற்றும் கென்யா போன்ற பிற நாடுகளிலும் பரவல் தொடர்கிறது, அதே நேரத்தில் இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் ஏராளமான பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன என்று அவர் கூறினார்.
சிக்குன்குனியா பரவல் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சிக்குன்குனியா வைரஸ் தொற்று நோய் உலகத்தையே உலுக்கியது. இது இப்போது மீண்டும் பரவும் அபாயம் உள்ளது. இதனால் சிக்குன்குனியா பரவலை தடுக்க தேவையான நடவடிக்கை தேவை. ஏனென்றால் வரலாறு மீண்டும் வருவதை நாங்கள் பார்க்கிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மழைக்காலம் என்பதால் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

சிக்குன்குனியாவுக்கு சில அறிகுறிகள் உள்ளன காய்ச்சல், மூட்டு வலி, மற்றும் தடிப்பு போன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளது. சிக்குன்குனியா உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது எனினும் நோய் பாதிப்பால் சில வாரங்கள் வரை மக்களை முடக்கிப்போடும் சக்தி கொண்டது.

இதனால் யாராவது சிக்குன்குனியா அறிகுறி, சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டால் உடனடியாக வைத்தியரை அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔴இலங்கை - இந்தியா இடையே 17,000 பேர் பயணம்!இலங்கை மற்றும் இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஊடாக இந்த வருடத்தில் இதுவர...
23/07/2025

🔴இலங்கை - இந்தியா இடையே 17,000 பேர் பயணம்!

இலங்கை மற்றும் இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஊடாக இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், 17,000 பேர் இரு நாடுகளுக்கும் இடையில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது 2 கப்பல்கள் சேவையில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இறங்குதுறை தொடர்பான பிரச்சினையுள்ள நிலையில், அதற்கு இந்தியா உதவத் தயாராக இருப்பதாகவும் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

🔴வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் 67,147 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய்!வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம், கடந்த 10 ஆண்டுகளில...
23/07/2025

🔴வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் 67,147 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம், கடந்த 10 ஆண்டுகளில், இலங்கைக்கு 67,147 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக வெளிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியிலேயே, குறித்த தொகை கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில், வாய்மொழி கேள்வி பதிலுக்கான நேரத்தின்போது, இலங்கை மத்திய வங்கியின் பதிவுகளை மேற்கோள் காட்டி பிரதி அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே, 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 25ஆம் திகதி நிலவரப்படி, வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 13 இலட்சத்து 45 ஆயிரத்து 801 எனவும் வெளிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

🔴பலத்த காற்று தொடர்பில் வௌியான எச்சரிக்கை!பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள...
23/07/2025

🔴பலத்த காற்று தொடர்பில் வௌியான எச்சரிக்கை!

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் நிலவும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக, இந்த மாவட்டங்களில் சில நேரங்களில் மணிக்கு 55-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சில நேரங்களில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

🔴வாழைப்பழ விற்பனை வீழ்ச்சி!தம்புத்தேகம பொருளாதார நிலையத்தில் தினமும் 500 கிலோ வாழைப்பழங்கள் அகற்றப்படுவதாக வியாபாரிகள் த...
23/07/2025

🔴வாழைப்பழ விற்பனை வீழ்ச்சி!

தம்புத்தேகம பொருளாதார நிலையத்தில் தினமும் 500 கிலோ வாழைப்பழங்கள் அகற்றப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வாழைப்பழங்கள் அதிகமாக இருப்பதாலும், வாழைப்பழ விற்பனை குறைந்ததாலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

பொருளாதார நிலையத்தில் புளி வாழைப்பழம் 10 ரூபாய்க்குக் கூட விற்கப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் மேலும் தெரிவித்தனர்.

🔴அஸ்வெசும – ஜூலை மாத கொடுப்பனவு நாளை!அஸ்வெசும முதல் கட்ட நிவாரணத்திற்குத் தகுதி பெற்ற பயனாளிகளின், ஜூலை மாதத்துக்கான உதவ...
23/07/2025

🔴அஸ்வெசும – ஜூலை மாத கொடுப்பனவு நாளை!

அஸ்வெசும முதல் கட்ட நிவாரணத்திற்குத் தகுதி பெற்ற பயனாளிகளின், ஜூலை மாதத்துக்கான உதவித்தொகை நாளை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, அஸ்வெசும முதல் கட்ட பயனாளிகளில் 1,424,548 பயனாளி குடும்பங்களுக்கு 11,296,461,250 ரூபாய் உதவித் தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பயனாளிகள் ஜூலை 24 முதல் அவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியுமென, நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

🔴மலேசியாவிடமிருந்து இலங்கைக்கு விசேட விமான சேவை!மலேசியா எயார்லைன்ஸ், அதன் பிராந்திய வலையமைப்பில் அதிகரித்து வரும் பயணிகள...
22/07/2025

🔴மலேசியாவிடமிருந்து இலங்கைக்கு விசேட விமான சேவை!

மலேசியா எயார்லைன்ஸ், அதன் பிராந்திய வலையமைப்பில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவைக்கு பதிலளிக்கும் விதமாக, ஆகஸ்ட் 22 முதல் கொழும்புக்கு மூன்று வாராந்திர அகல-உடல் விமானங்களைச் சேர்ப்பதாக அறிவித்துள்ளது.

இந்த விமான நிறுவனமானது ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொழும்பு-கோலாலம்பூர் வழித்தடத்தில் எயார்பஸ் A330 விமானங்களை நிறுத்தும்.

ஒவ்வொரு A330 விமானமும் 27 வர்த்தக சொகுசு இருக்கைகளையும் (Business Class seats) 261 பொருளாதார வகுப்பு இருக்கை (Economy Class seats) களையும் கொண்டுள்ளது.

தெற்காசியாவில் மலேசியா எயார்லைன்ஸின் இருப்பை வலுப்படுத்துவதையும், இலங்கை - மலேசியாவிற்கிடையிலான பயணம் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

🔴இலங்கையர்களுக்கு கொரியாவில் 8 மாத வேலைவாய்ப்பு!கொரிய குடியரசின் E-08 வீசா வகையின் கீழ் இலங்கை தொழிலாளர்களை பருவகால வேளா...
22/07/2025

🔴இலங்கையர்களுக்கு கொரியாவில் 8 மாத வேலைவாய்ப்பு!

கொரிய குடியரசின் E-08 வீசா வகையின் கீழ் இலங்கை தொழிலாளர்களை பருவகால வேளாண் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கொரிய குடியரசின் E-08 வீசா வகை (பருவகால தொழிலாளர்கள்) கீழ் இலங்கை தொழிலாளர்களை இணைத்துக் கொள்வதற்கு வசதியளிக்கும் வகையில் முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அதில் ஆர்வம் காட்டுகின்ற கொரியாவின் உள்ளுராட்சி நிறுவனத்துடன் கலந்துரையாடுவதற்கும் 2025.02.19 ஆம் திகதி மற்றும் 2025.07.01 ஆம் திகதிகளில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொரியாவின் போசோங்க் உள்ளுராட்சி நிறுவனத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பெறுபேறாக இலங்கையில் பருவகால தொழிலாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் மற்றும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இலங்கையின் பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழ் குறுகியகாலம் (உயர்ந்தபட்சம் 08 மாதங்கள் வரை) போசோங்க் பிராந்தியத்தில் விவசாயக் கிராமங்களில் பணியாற்றி வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்காகவும், எமது நாட்டுக்கு வெளிநாட்டு செலாவணியை ஈட்டுவதற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
அதற்கமைய, உத்தேச புரிந்துணர்வு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் போசோங்க் உள்ளுராட்சி5 நிறுவனத்துடன் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Address

Kandy

Alerts

Be the first to know and let us send you an email when SL LATEST NEWS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SL LATEST NEWS:

Share