
24/07/2025
🔴மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் அவசர வான் கதவு திறப்பு!
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில், தொடர்ந்து பெய்துவரும் மழையுடனான வானிலையால், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் அவசர வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேல் கொத்மலையில் நீரேந்துப் பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்குமாயின், நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் திறக்கப்படும் சாத்தியம் நிலவுகிறது.
இந்தநிலையில், கொத்மலை ஓயாவின் இருபுறமும் வசிப்பவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.
இதேவேளை, தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையுடனான வானிலை காரணமாக, செயிண்ட் கிளேயர் மற்றும் டெவோன் நீர்வீழ்ச்சிகளில் நீரின் அளவு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர்.