26/11/2025
அற்ப காரணங்களுக்காக நீங்கள் விவாகரத்து கேட்கும் பெண்களா?
கொஞ்சம் நில்லுங்கள். போகப் போக உங்களுக்கு என்ன நடக்கும் என்பதை சொல்லித் தருகிறேன்.
🔺️ உங்கள் குடும்பம்:
👉🏼 உங்கள் விவாகரத்தின் முதல் மாதத்தில், உங்கள் சகோதரர்கள் உங்களுக்காக தங்கள் கதவைத் திறந்து வைப்பார்கள். உங்கள் தாய் உங்களை முத்தமிட்டு ஆறுதல்படுத்துவாள்.
👉🏼 உங்கள் தந்தை, "நான் உயிருடன் இருக்கும் வரை நீ என் பராமரிப்பில் இருக்கலாம்" என்று கூறுவார். (நான் உயிருடன் இருக்கும் வரை) என்பதை மீண்டும் ஒரு முறை வாசித்துக் கொள்ளுங்கள்.
👉🏼 இரண்டாவது மாதத்தில், அவர்களுக்கு சலிப்பு தட்ட ஆரம்பிக்கும். உங்கள் குழந்தைகளின் இரைச்சல்களை அவர்கள் தொந்தரவாகப் பார்க்க ஆரம்பிப்பார்கள். உங்கள் குழந்தைகளுக்கும் உங்கள் சகோதரர்களின் குழந்தைகளுக்கும் மத்தியில் ஏற்படும் சண்டைகளால் பதட்டங்கள் ஏற்பட்ட ஆரம்பிக்கும்.
👉🏼 உங்களிடம் எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் அடைக்கப்பட்ட சுவர்களுக்குள் உங்களைப் பற்றியும் உங்கள் பிள்ளைகளைப் பற்றியும் பேசிக்கொள்வார்கள்.
👉🏼 மூன்றாவது மாதத்தில், உங்கள் சகோதரர்களின் மனைவிகளால் உங்கள் மீது தூண்டல் துலக்கல் வர ஆரம்பிக்கும். உங்களை கட்டுப்படுத்த ஆரம்பிப்பார்கள். அங்குதான் உங்களுக்கு பெரும் தலையிடி ஆரம்பிக்கும்.
👉🏼 நான்காவது மாதத்தில், உங்கள் பிள்ளைகள் பற்றி சுற்றியுள்ளவர்களின் புகார்கள் வர ஆரம்பிக்கும். உங்கள் பிள்ளைகளை தந்தையிடம் அனுப்பி விட்டு நீங்கள் மட்டும் தனியாக இருக்குமாறு உங்களிடம் வேண்டுவார்கள்.
👉🏼 ஐந்தாவது மாதத்தில், உங்களுக்கும் உங்கள் சகோதரர்களின் மனைவிகளுக்கும் இடையே வாய்ச் சண்டைகள் தொடங்கும்.
நீங்கள் சுற்றும் முற்றும் பார்ப்பீர்கள். 'உங்கள் கணவருடன் வாழ்வைதை விட நல்வாழ்வு கிடைக்கும்" என்று உங்களுக்கு
உறுதியளித்தவர்கள் அனைவரும் வாய் மூடி இருப்பதைக் காணுவீர்கள்.
👉🏼 இப்படி காலங்கள் போகப் போக அழுத்தாங்களும் நெருக்குதல்களும் அதிகரித்த்துக்கொண்டுதான் போகும்.
கடைசியில் நீங்கள் உங்கள் வசிப்பிடத்தை தக்க வைத்துக் கொள்ள அனைவருக்கும் வேலை செய்து சேவை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
🔺️ உங்கள் உறவினர்கள்
உங்களுடன் உங்கள் உற்றார் உறவினர்கள்
பழகும் விதங்கள் சற்று மாற்றமடைய ஆரம்பிக்கும். அவர்களின் பெண்களை உங்களுடன் பழக அனுமதிக்க மாட்டார்கள்.
(கோபப்படாதீர்கள், நியாயம் அநியாயம் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, இன்றைய சமூகம் விவாகரத்தானவளை ஒரு மாதிரியாகவே பார்க்கிறது.)
இதனால் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் தனிமைப்படுத்தப்படுவது போன்று உண்ர்வீர்கள். உங்கள் மன அழுத்தம் அதிகரிக்க ஆரம்பிக்கும்.
🔺️ உங்கள் சமூகம்:
👉🏼 நீங்கள் சந்தைக்குச் செல்லும்போது, சமூகத்திலுள்ள சந்தர்ப்பவாதிகள் உங்களை வெற்றிச் செல்வமாக அல்லது
வழிமாறி வந்த மான் போல பார்ப்பார்கள். எல்லோரும் உங்களைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள்.
👉🏼 நீங்கள் அரசாங்க அலுவலகங்களுக்கு, பொது இடங்களுக்கு நுழையும்போது, உங்களை அற்ப விலைக்கு பேரம் பேச பலர் முயற்சிப்பார்கள்.
👉🏼 உங்களை உடலாக மட்டும் பார்க்கும்
பெண் பித்தர்கள் பதிவு செய்யப்படாத திருமண உடன்படிக்கைக்காக உங்களை
அழைப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு முழுமையான வாழ்க்கை துணையாக நீங்கள் தேவை இல்லை. பகுதி நேர துணையாக எதிர்பார்ப்பார்கள்.
இதனால் உங்கள் உணர்வுகள் கண்ட இடங்களில் மிதிக்கப்படும், உங்கள் பிள்ளைகளின் வாழ்வு இன்னும் சீரழிய ஆரம்பிக்கும்.
🔺️ உளவியல் மற்றும்உடலியல் ரீதியாக நீங்கள்:
👉🏼 உங்களை பாதுகாக்க, உங்களுக்கு அறுதல் அளிக்க ஒரு துணை இல்லையே என்ற பெரும் ஏக்கம் உங்களை வதைக்க ஆரம்பிக்கும். தனிமை உணர்வு உங்களை வாட்டத் தொடங்கும்.
👉🏼 வீட்டுக்கு உள்ளே... வெளியே...நீங்கள் பசியாக இருக்கும்போது... நீங்கள் தூங்கும்போது... நீங்கள் சோர்வாக இருக்கும்போது... நீங்கள் நோய்வாய்ப்படும் போது... நீங்கள் பலவீனமாக இருக்கும் போது... உங்கள் கணவர் உங்கள் பக்கத்தில்
இல்லையே என்ற சோகம் உங்களை
வருத்திக்கொண்டே இருக்கும். வறுமை, பிரிவு என்ற இரு பெரும் கொடுமைகளுக்கு மத்தியில் நீங்கள் திண்டாடுவீர்கள்.
👉🏼 ஆகவே விவரமற்ற தாய், தோழிகள், ஆலோககர்கள் மற்றும் ரகசிய காதலன்
போன்றோரின் பேச்சைக் கேட்டு உங்கள்
வாழ்க்கையை அழித்துக்கொள்ளாதீர்கள்.
நீங்கள் விவாகரத்து கேட்கும்போது அனைவரும் உங்களுடன் நிற்பார்கள், உங்களை உண்மையாக நேசிப்பவர்கள் மாத்திமே நீங்கள் சேர்ந்து வாழ வேண்டும் என போராடுவார்கள்.
குறிப்பு:
இது அற்ப காரணங்களுக்காக ஆவேசப்பட்டு விவாகரத்து கேட்டுக்கும் பெண்களுக்கு மாத்திரமான பதிவாகும். ஆனால் தங்கள் மானம், மரியாதை மற்றும் மார்க்கத்தைக் காத்துக்கொள்ளவும், மனித மிருகங்களுக்கு வாழ்க்கைப்படு, விடுதலை தேடும் பெண்களுக்குமான பதிவல்ல.
✍ தமிழாக்கம் / imran farook
BEEROK MEDIA TAMIL
WhatsApp Group
https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH