17/09/2026
🔴பையில் பொருட்களை ஏற்றிக்கொண்டு Uber ஓட்டிய நான், இன்று Graduation Gown அணிந்து Degree பெறும் நிலைக்கு வந்திருக்கிறேன். இந்தப் பயணத்தைப் பற்றி ஒரு பதிவு எழுதாமல் எப்படி இருக்க முடியும்?
Scholarship தேர்வில் 88 மதிப்பெண்களும், O/L பரீட்சையில் C4 மற்றும் S4 பெறுபேறுகளும் பெற்ற என்னிடம், இந்த Result-ஐ வைத்துக்கொண்டு A/L Commerce படிக்க முடியாது என்று சொன்னார்கள். ஆனாலும், நான் பிடிவாதமாக School Commerce Class-க்குச் சென்றேன்.
School AL Commerce Stream-ல் AAB Result பெற்றதுடன், District Rank 247-ஐயும் பெற்றேன்.
Sabaragamuwa University-ல் இடம் கிடைத்திருந்தாலும், Interest-Free Student Loan மூலம் SLIIT-ஐத் தேர்ந்தெடுத்தது , Colombo-வுக்கு வந்து படிக்க வேண்டும் என்ற மிகப்பெரிய ஆசையால்தான்.
2022-ல் கையில் எதுவுமே இல்லாமல் Colombo வந்த நான், 2023-ல் ஒரு Bike வாங்கி Uber ஓட்டத் தொடங்கினேன். அந்தக் காலத்தில் வீட்டிற்கு ஒரு சுமையாக இல்லாமல், என் வாழ்க்கையை நானே Balance செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் என் ஒரே நோக்கம்.
Uber ஓட்டிக்கொண்டே ஒரு சிறிய Business-ஐயும் ஆரம்பித்தேன். அதற்கிடையில் இன்னொரு சிறிய Vehicle-ஐயும் வாங்கினேன். அதே Bike மூலமாகவே என் Career-க்கு நல்ல ஒரு Job-ஐத் தேடிக்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.
இன்று, அந்த எல்லாவற்றையும் திரும்பிப் பார்க்கும்போது, இந்தச் சிறிய காலத்திற்குள் நான் என்னை நானாக உருவாக்கிக் கொள்ள இந்தப் பயணம் எனக்கு போதுமானதாக இருந்திருக்கிறது.
Commerce Class-க்கே என்னை எடுத்துக்கொள்ள முடியாது என்று சொன்னபோது நான் தளர்ந்து பின் வாங்கி இருந்தால், இன்று இந்தக் கதையை உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.
இதைப் பார்க்கும் தம்பி, தங்கைகளிடம் நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான் , சில முடிவுகளை எடுக்கும்போது உன்னை நம்பி முடிவு எடுக்கச் சொல்ல யாரும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், உனக்காக நீ இருக்கிறாய்.
அந்த நம்பிக்கை உன்னிடம் இருந்தால், இன்று Impossible என்று தோன்றும் விஷயங்கள் நாளை Possible ஆகலாம்.
இந்தப் பயணத்தில் எனக்கு உதவிய, என்னை நம்பிய, எப்போதும் என் பக்கம் நின்ற ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றி.
என் Family எனக்குக் கொடுத்த Support பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.
அம்மாவைப் பற்றி மட்டும் இப்படி எழுதி முடித்துவிட முடியாது.
எனக்காக ஒரு சிறிய விஷயம் நடந்தாலும் என்னைவிட, இன்று நான் இருக்கும் நிலையைப் பார்த்து அதிகமாக Happy ஆகிறவர் அவள்தான். அந்த சந்தோஷமே எனக்குப் போதும்.
Bike-ல் Bags-ஐ சுமந்த நாட்களிலிருந்து, இன்று Graduation Gown அணியும் நாள் வரை…
இந்தப் பயணம் ஒவ்வொரு நொடியும் அர்த்தமுள்ளதாக இருந்தது. 🎓❤️
இவ்வாறு தனது வாழ்க்கை அனுபவத்தை Chamod Bimsara தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார் . இதன் மூலம் இன்னொருவர் தன்னம்பிக்கை பெறட்டும் என்று . வாழ்த்துக்கள் தம்பி.
Razmi Razak