Udunuwara Update

Udunuwara Update இதுவும் கடந்து போகும்

15/06/2026
இந்த லெவல் சேர்ஜரி எல்லாராலும் முடியாது 😆இலங்கையராக நாம பெருமைப்படணும்!ஆனா அந்த V.K பீடி cover-ஐ அளவுக்கு வெட்டி set பண்...
07/06/2026

இந்த லெவல் சேர்ஜரி எல்லாராலும் முடியாது 😆
இலங்கையராக நாம பெருமைப்படணும்!
ஆனா அந்த V.K பீடி cover-ஐ அளவுக்கு வெட்டி set பண்ணியிருக்கான் பாரு… அந்த moment அவன் life achievement 😭😂

கண்டி உடரட்டை நவீன ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் 2028 ஆம் ஆண்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குஇலங்கையின் மத்திய மாகாணத்தி...
06/06/2026

கண்டி உடரட்டை நவீன ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் 2028 ஆம் ஆண்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு

இலங்கையின் மத்திய மாகாணத்தின் முக்கிய நகரமான கண்டி நகரில் உள்ள Goodshed பேருந்து நிலையமும் கண்டி தொடருந்து நிலையமும் ஒன்றிணைத்து அமைக்கப்படும் நவீன போக்குவரத்து மையத் திட்டம் 2028 ஆம் ஆண்டில் திறக்கப்படும் என போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பல தசாப்தங்களாக கண்டி நகரின் முக்கிய போக்குவரத்து மையங்களாக பயன்பட்டு வந்த இந்த இரண்டு இடங்களும் தற்போது கடுமையான வாகன நெரிசல், பயணிகள் கூட்டம் மற்றும் வசதிகளின் பற்றாக்குறை காரணமாக மேம்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கல்களுக்கு நீண்டகால தீர்வாக இந்த மிகப்பெரிய அபிவிருத்தித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் கீழ் பேருந்து நிலையமும் தொடருந்து நிலையமும் ஒரே ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகமாக மேம்படுத்தப்பட உள்ளன. பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளுக்கு இடையில் எளிதாக மாறிச் செல்லும் வகையில் Skywalk பாலங்கள், நிலத்தடி நடைபாதைகள் (Underground Pedestrian Tunnels), மற்றும் டிஜிட்டல் தகவல் அமைப்புகள் (Digital Information Systems) அமைக்கப்படவுள்ளன.

மேலும் பல அடுக்கு பேருந்து நிலையம் (Multi-level Bus Terminal), நவீன தொடருந்து மேடைகள், எஸ்கலேட்டர்கள், லிப்ட்கள் மற்றும் Smart Ticketing System ஆகிய வசதிகளும் இடம்பெறும்.

இந்த திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களின் பயன்பாடாகும். சூரிய மின்சார அமைப்புகள் (Solar Power Systems), கூரை தோட்டங்கள் (Rooftop Gardens), மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் (Rainwater Harvesting Systems) பயன்படுத்தப்பட்டு இந்த மையம் ஒரு நவீன Green Transport Hub ஆக உருவாக்கப்படும்.

போக்குவரத்து நிபுணர்கள் கூறுவதாவது, இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின் கண்டி நகரின் தினசரி வாகன நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகவும் வசதியான மற்றும் நவீன போக்குவரத்து அனுபவம் கிடைக்கும்.

2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முக்கிய கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, 2028 ஆம் ஆண்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுவது திட்டத்தின் இலக்காகும். இது இலங்கையில் கட்டப்படுகின்ற மிகவும் நவீனமான ஒருங்கிணைந்த போக்குவரத்து மையங்களில் ஒன்றாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10/03/2026
கடைசி 10 நோன்பை பிரயொசனப்படுத்திக்கொல்லுங்கள்
10/03/2026

கடைசி 10 நோன்பை பிரயொசனப்படுத்திக்கொல்லுங்கள்

Elamaldeniya Musjid Udunuwara Kandy Masha allah
07/03/2026

Elamaldeniya Musjid
Udunuwara Kandy
Masha allah

23/02/2026

Horsetail Fall – USA 🇺🇸
🔥🌊 நீர்வீழ்ச்சி… ஆனால் சில நாட்களில் அது “தீப்போல்” மின்னும்!

💞 நோன்பை முறிக்கும் 6 செயல்கள் பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞• இஸ்லாம் கூறும் அடிப்படைக் கடமைகளில் நோன்பும் ஒன்றாகும்! நோன்ப...
19/02/2026

💞 நோன்பை முறிக்கும் 6 செயல்கள் பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞

• இஸ்லாம் கூறும் அடிப்படைக் கடமைகளில் நோன்பும் ஒன்றாகும்! நோன்பு என்பது அல்லாஹ்வுக்காக சுபஹிலிருந்து மஃரிப் வரை உண்ணல், பருகல், உடலுறவில் ஈடுபடுதல், ஆசைகள் என அனைத்தையும் தவிர்த்து இருப்பதை நோன்பு என்போம்!

• நோன்பை முறிக்க கூடியவைகளை அரபியில் ‘ முப்திலாதுஸ் ஸவ்ம் ’ (நோன்பை முறிப்பவை) கூறப்படும்! நோன்பை வைக்க கூடிய ஒவ்வொரு முஸ்லீமும் எந்த செயல்கள் செய்தால் நோன்பு முறிந்து விடும் என்பதை அறிந்து வைத்து இருக்க வேண்டும்! இன்ஷாஅல்லாஹ் அவற்றை பற்றி பார்ப்போம்!

1) கணவன் மனைவி சேர்வது :

• நோன்பை முறிக்கும் விஷயங்களில் இதுவே மிகவும் கடுமையானதும், மிகவும் பாவமான ஒரு செயலாகும்.

• ரமலானில் நோன்பு வைத்த நிலையில் வேண்டுமென்றே அல்லது சொந்த விருப்பப்படி கணவன் மனைவி இருவரும் சேர்ந்து விந்து வெளியானாலும், வெளியாக விட்டாலும் நோன்பு முறிந்து விடும்.

• நோன்பு முறிந்தாலும் அவர் சூரியன் மறையும் வரை நோன்பை விட கூடாது அதன் பின்பு கடுமையான பரிகாரம் செய்ய வேண்டும்.

❤️ பரிகாரம் :

1) தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும் அல்லது,

2) 60 ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும்!

(நூல் : ஸஹீஹ் புஹாரி : 2600)

• கணவன் மனைவி சேர்வது தவிர, நோன்பை முறிக்கும் வேறு எந்த விஷயத்திற்கும் பரிகாரம் கிடையாது.

2) வேண்டுமென்றே உண்ணுதல், பருகுதல் :

• ஒருவர் அறியாத நிலையில் அல்லது மறதியாக உணவு அல்லது ஏதேனும் பானம் வாய் வழியாகவோ அல்லது மூக்கின் வழியாகவோ உடலினுள் சென்று விட்டால் நோன்பு முறியாது ஆனால் வேண்டுமென்றே இவ்வாறு நடந்தால் நம்முடைய நோன்பு முறிந்து விடும்!

(சூரத்துல் : அல் பகரா : 187)

• நாம் ஒழு செய்யும் பொழுது கூட கவனமாக ஒழு செய்ய வேண்டும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நீ தண்ணீரை நன்கு மூக்கினுள் செலுத்திச் சுத்தம் செய்! ஆனால், நீ நோன்பாளியாக இருந்தாலே தவிர (அப்போது அவ்வாறு செய்யாதே)

(நூல் : சுனன் திர்மிதி : 788)

• வாசனை நுகர்வதால் நோன்பு முறியாது!

❤️ மறதியாக உண்ணுதல், பருகி விட்டால்?

• யார் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் மறதியின் காரணமாக சாப்பிடுகிறாரோ அல்லது தண்ணீர் பருகிவிடுகிறாரோ (அவர் மீது எந்த குற்றமும் இல்லை) அவரின் நோன்பு ஏற்றுக்கொள்ளப்படும்!

• என்றாலும், அவருக்கு அவர் நோன்பாளி என்பது நினைவு வந்து விட்டால் அதை அப்படியே நிறுத்தி விட வேண்டும். மேலும் , வாயில் உள்ளவற்றை துப்பி விட வேண்டும்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் :

ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தம் நோன்பை முழுமைப்படுத்தட்டும்! ஏனெனில் அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 1933)

• மேலும், நோன்பாளி மறதியின் காரணமாக தண்ணீர் குடிப்பதையோ, சாப்பிடுவதையோ ஒருவர் பார்த்தால் அவருக்கு நோன்பாளி என்று நியாபகமூட்டுவது அவர் மீது கடமையாகும்!

3) உண்ணுதல் - பருகுதலுக்கு இணையானவை :

• சொட்டு மருந்து : நோன்பாளி மூக்கிற்கு (அ) காதுக்கு சொட்டு மருந்து விடுவதை முடிந்த அளவுக்கு தவிர்த்து கொள்ள வேண்டும்!

• காரணம் : சொட்டு மருந்தின் சுவை மூக்கு வழியாக அல்லது காதின் வழியாக வயிற்றை அடைய வாய்ப்புள்ளது. அதன் சுவை தொண்டைக்குழியை அடையாமல் இருக்குமானால் அவ்வாறு செய்வது நோன்பை முறிக்காது ! ஆனால் தொண்டையினுள் சென்று விட்டால் நோன்பு முறிந்து விடும்!

(ஃபதாவா : ஷேக் இப்னு பாஸ் (ரஹ்) : 15 / 261)

• ஊசி மற்றும் குளுகோஸ் : உடல் சரி இல்லாதவர்கள் ஊசி போட்டு கொள்ள அனுமதி உண்டு அவரின் நோன்பு முறியாது!

• ஆனால் அந்த ஊசி போட்டால் உடலின் சக்தி அதிகரிக்கும் என்றால் நாம் ஊசி செலுத்திக்க கூடாது அல்லது நோன்பை விட்டு விட வேண்டும்! நோயாளிகளுக்கு நோன்ப விட அனுமதி உண்டு!

• குளுகோஸ் பொறுத்த வரை அதை நமது உடலில் செலுத்தினால் நோன்பு முறிந்து விடும் காரணம் அதை உடலில் ஏற்றினால் உடலின் சக்தி அதிகரிக்கும் அதனால் நோன்பு முறிந்து விடும்!

(லஜனதுத் தாயிமா லில்புஹுஸில் இல்மிய்யா வல் இஃப்தா : 5176)

4) வேண்டும் என்றே விந்து வெளியாக்குதல் :

• உடலுறவு அல்லாத வேறு வழிகளில் ஒருவர் இச்சையுடன் விந்தை வெளிப்படுத்தினால் அவரின் நோன்பு முறிந்து விடும்! அவர் அல்லாஹ்விடம் மனம் வருந்தி தவ்பா செய்ய வேண்டும் மேலும் முறிந்த நோன்பை மீண்டும் களா செய்ய வேண்டும்!

ஷேக் முகம்மது பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) கூறினார்கள் :

• ஒரு நபருக்கு கனவின் மூலம் விந்து வெளியாகினால் நோன்பு முறியாது ஆனால் இவை இல்லாமல் சுய இன்பம் மூலம் விந்து வெளியேறினால் நோன்பு முறிந்து விடும்! மீண்டும் அவர் நோன்பை களா செய்ய வேண்டும்!

• ஆனால் அவர் பரிகாரம் செய்ய வேண்டிய தேவையில்லை! என்றாலும் அவர் அந்த பாவத்தில் இருந்து விலகி அல்லாஹ்விடம் தவ்பா செய்ய வேண்டும்!

(ஃபதாவா : அர்கானுல் ஈமான் : 2/661)

5) வேண்டும் என்றே வாந்தி எடுப்பது :

• ஒருவருக்குத் தானாக வாந்தி வந்தால் நோன்பை அது முறிக்காது! ஒருவர் தானாக முயற்சித்து வாந்தியெடுத்தால் அது நோன்பை முறிக்கும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யாருக்கு வாந்தி வந்ததோ அவர் அந்த நோன்பைக் கழா செய்ய வேண்டியதில்லை! யார் வேண்டுமென்றே வாந்தியெடுத்தாரோ அவர் அதை கழாச் செய்யட்டும்!

(நூல் : சுனன் திர்மிதி : 720)

6) ஹைலு அல்லது நிபாஸ் ஏற்படுதல் :

• ஒரு பெண்ணுக்கு நோன்பு வைத்த நிலையில் மாதவிடாய் அல்லது நிபாஸ் ஏற்பட்டு விட்டால் அவளின் நோன்பு அந்த நிமிடமே முறிந்து விடும்! அது பகலின் ஆரம்பமாக இருந்தாலும் சரி! சூரியன் மறைவதற்கு ஒரு நிமிடம் முன்னால் ஏற்பட்டாலும் சரி! விட்ட நோன்புகளை கணக்கு செய்த பின்னர் களா செய்ய வேண்டும்!

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 560)

Address

Kandy
20000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Udunuwara Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share