10/10/2025
                                            வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்❤️
அல் குர்ஆனின் இஜாஸா (الإجازة)* என்பது:
அரபியில் *"இஜாஸா"* என்றால் "அனுமதி" அல்லது "அங்கீகாரம்" என்ற பொருள்.
குர்ஆன் இஜாஸா என்பது:
ஒரு தகுதியான (ஷைக்) ஆசானிடம், ஒரு மாணவர்  
முழுக் குர்ஆனையும் சரியாக  தஜ்வீத் முறையில்  மனப்பாடமாக ஓதி ஒப்புவித்த பின்பு, அந்த ஆசான் தனது மாணவருக்கு “ இந்த மாணவர் ஓதும் ஓதல் 100% நபியவர்களுக்கு அருளப்பட்டது போன்றதே என்று ஏற்று நபி ﷺ வரையில் தொடர்சியாக சென்றடையும் “ஸனத்” எனும்  சங்கிலித் தொடரில் அந்த மாணவரையும் இணைத்து, இவர் நான் எனது ஷைக் இடம் கற்ற பின்பு அதனை கற்பிக்க அனுமதி வழங்கப்பட்டது போன்று இந்த மாணவருக்கும் இந்தத் தொடரில் அவரது (மாணவருக்கு) அந்தச் சங்கிலித்தொடருடன்
குர்ஆனை கற்பிக்க அனுமதி வழங்கப்படுவதே இஜாஸாவாகும்.
இஜாஸா பெறும் ஒருவர்:
- தனது ஆசானிடம் முழு குர்ஆனை துல்லியமாக ஓதி முடிக்க வேண்டும்.
- தஜ்வீத் , மனனம்  என்பனவற்றில் துல்லியம் இருக்க வேண்டும்.
- ஆசான் அதனை பரிசீலித்து, தகுதி உறுதியான பிறகு *"இஜாஸா"* எனப்படும் சான்றிதழ் வழங்குவார்.
இஜாஸாவின் முக்கியத்துவம்:
- இது ஒரு அறிவியல் மரபு (Isnād tradition).
- நபி ﷺ அவர்கள்