13/06/2026
🏉 #மதீனா_தேசிய_பாடசாலையின் #மேலும்_ஒரு_பெருமைமிகு_சாதனை! 🏉
இன்று ரத்மலான விமானப்படை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அனைத்துப் பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி போட்டித் தொடரில், மடவல மதீனா தேசிய பாடசாலை அணி, வலுவான கொழும்பு ராஜகிரிய ஜனாதிபதி கல்லூரி அணியை 31 – 14 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
கடும் மழை, பலத்த காற்று உள்ளிட்ட சவாலான காலநிலையையும் தாண்டி, இரண்டு போனஸ் புள்ளிகளையும் பெற்றுக்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எமது வீரர்கள், இந்த வெற்றியின் மூலம் அடுத்த கட்டத்திற்கும் தகுதி பெற்றுள்ளனர்.
மேலும், இவ்வாண்டு போட்டித் தொடரில் Runners-Up நிலையைப் பெற்றிருப்பதும் மதீனா குடும்பத்திற்கான மற்றுமொரு பெருமைக்குரிய சாதனையாகும்.
இந்த வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த எமது மாணவ வீரர்களுக்கும், வழிகாட்டிய
#அதிபர்_அவர்களுக்கும், #பயிற்றுவிப்பாளர்களுக்கும் (Coaches)
ொறுப்பாசிறியர்
,
,
#அனுசரணையாளர்கள்,
#பெற்றோர்கள் மற்றும்
#மதீனா குடும்பத்தின் அனைத்து நலன்விரும்பிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வெற்றி என்பது ஒரு முடிவு அல்ல; அது மேலும் உயரங்களை நோக்கிய பயணத்தின் தொடக்கம்.
#மதீனா_என்றால்_மனஉறுதி_மதீனா #என்றால்_வெற்றி!
🏆🏉