ஐ FM

ஐ FM Istarradio.ga

என்ன நடக்கிறது
20/09/2026

என்ன நடக்கிறது

கண்டி - பன்விலை பகுதியில் உள்ள ஆறு  ஆலயங்களில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திட்டமிட்ட குழுவினரால் ஒரே இரவில் தி...
07/09/2026

கண்டி - பன்விலை பகுதியில் உள்ள ஆறு ஆலயங்களில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திட்டமிட்ட குழுவினரால் ஒரே இரவில் திருடப்பட்டுள்ளன.

கண்டி - மடுல்கலை உணனகலை முத்துமாரியம்மன் ஆலயம், டியனில்ல முத்துமாரியம்மன் ஆலயம், ஹுலுகங்கை கம்பளிக்கடை முத்துமாரியம்மன் ஆலயம், ஹுலுகங்கை விநாயகர் ஆலயம், ஆகலை அம்மன் ஆலயம், கந்தக்கட்டி அம்மன் ஆலயம் ஆகிய கோயில்களில் இன்று அதிகாலை இந்த திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

குறித்த ஆலயங்களின் நிர்வாகங்களால் பொலிஸ் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில்,

கருவறை விக்கிரகத்திற்கும், ஏனைய விக்கிரகங்களுக்கும் அணிவிக்கப்பட்டிருந்த பெறுமதியான தங்க ஆபரணங்களும், உண்டியலும் திருடப்படப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆலயங்களுக்குள் இதுவரை எவரும் பிரவேசித்து முழுமையாக பார்வையிடாதமையால், வேறு சிலைகள் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதா என்ற முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

பொலிஸ் விசாரணைகளின் பின்னரே, துல்லியமான தகவலை அறியமுடியும்.

குறித்த ஆலயங்களின் வளாகங்களில் ஆலய பரிபாலன சபையினரும், பொது பொதுமக்களும் கூடியிருக்கின்றனர்.

திட்டமிட்ட குழுவினரின் இந்த மோசமான செயலுக்கு பொதுமக்கள், தங்களது கடும் கண்டனத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை பன்வில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


2026/9/7

03/09/2026

Hi

01/09/2026
இரங்கல் அறிக்கைதமிழ் திரைப்பட உலகிற்கு தனித்துவமான படைப்புகளை வழங்கி, கிராமிய மண்வாசனையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற இய...
10/06/2026

இரங்கல் அறிக்கை
தமிழ் திரைப்பட உலகிற்கு தனித்துவமான படைப்புகளை வழங்கி, கிராமிய மண்வாசனையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மறைவு செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது.
தனது படைப்புகள் மூலம் எண்ணற்ற கலைஞர்களை உருவாக்கிய அவர், தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் அழியாத தடத்தைப் பதித்துள்ளார். அவரது அர்ப்பணிப்பு, கலைப்பணி மற்றும் சாதனைகள் என்றும் மக்களின் நினைவில் நிலைத்திருக்கும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். 🕯️
“கலைஞர்கள் மறைந்தாலும், அவர்கள் படைத்த கலை என்றும் வாழும்.”

🏆👑 மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய RCB-க்கு வாழ்த்துகள்! 👑🏆பல ஆண்டுகளாக ரசிகர்கள் காத்திருந்த கனவை நனவாக்கி, இரண்...
01/06/2026

🏆👑 மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய RCB-க்கு வாழ்த்துகள்! 👑🏆
பல ஆண்டுகளாக ரசிகர்கள் காத்திருந்த கனவை நனவாக்கி, இரண்டாவது முறையாக IPL கிண்ணத்தை வென்றுள்ள Royal Challengers Bengaluru அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! ❤️💛
வீரர்களின் கடின உழைப்பு, அணியின் ஒற்றுமை, ரசிகர்களின் அளவற்ற ஆதரவு – இவை அனைத்திற்கும் கிடைத்த அழகான பரிசுதான் இந்த சாம்பியன் பட்டம். ஒவ்வொரு போட்டியிலும் போராட்ட மனப்பான்மையுடன் விளையாடி, வெற்றியை தங்களுடையதாக்கியுள்ளீர்கள்.
RCB ரசிகர்களின் “Ee Sala Cup Namde” என்ற கனவு இன்று மீண்டும் பெருமையுடன் ஒலிக்கிறது! 🎉🏏
மேலும் பல வெற்றிகளையும் சாதனைகளையும் குவிக்க வாழ்த்துகள்

10/04/2026

2026-04-10

அஸ்வெசும முதலாம், இரண்டாம் கட்டத்திற்குரியவர்களுக்கு ஏப்ரில் மாதக் கொடுப்பனவு (2026- ஏப்ரில்) மாதக் கொடுப்பனவு அவர்களின் அஸ்வெசும கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.

இக் கொடுப்பனவை 2026-04-10 ஆம் திகதியன்று இன்று உங்கள் வங்கிகளில் பெற்றுக் கொள்ள முடியும்.

*குறிப்பு* அதிகரிப்பு செய்யப்பட்ட கொடுப்பனவு அடுத்த மாத கொடுப்பனவோடு சேர்த்து கிடைக்கும்

🚍✨ புனரமைக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் திறப்பு! ✨🚍நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய ப...
08/04/2026

🚍✨ புனரமைக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் திறப்பு! ✨🚍

நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. 🙌

🧼 சுத்தமான சூழல்
🚻 மேம்பட்ட சுகாதார வசதிகள்
🪑 ஒழுங்குபடுத்தப்பட்ட காத்திருப்பு பகுதிகள்
ℹ️ புதிய தகவல் மையம்

இது தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் முக்கிய போக்குவரத்து மையம் என்பதால், இந்த மாற்றம் அனைவருக்கும் பெரிய நன்மையாக இருக்கும் 👍

🌟 “Clean Sri Lanka” முயற்சியின் ஒரு சிறந்த முன்னேற்றம்!

👉 இனி உங்கள் பயணம் இன்னும் சுலபம், சுத்தம், சௌகரியம்!

Istarradio.ga

Address

Kandy
AUDIO

Alerts

Be the first to know and let us send you an email when ஐ FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category