Kattankudy.lk

Kattankudy.lk 🌴 𝐊𝐚𝐭𝐭𝐚𝐧𝐤𝐮𝐝𝐲 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐥𝐢𝐧𝐠 𝐭𝐨 𝐇𝐚𝐩𝐩𝐢𝐧𝐞𝐬
𝐊𝐚𝐭𝐭𝐚𝐧𝐤𝐮𝐝𝐲.𝐥𝐤 ❤️ – 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐏𝐚𝐠𝐞

14 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் – கைது செய்யப்பட்ட நபர் 'மௌலவி' இல்லை!Kattankudy.lkஅம்பாற...
01/06/2026

14 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் – கைது செய்யப்பட்ட நபர் 'மௌலவி' இல்லை!

Kattankudy.lk
அம்பாறை - இறக்காமம் பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் சில ஊடகங்களிலும் பரவி வரும் செய்திகளில் அவர் “மௌலவி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பாக இறக்காமம் ஜம்இய்யத்துல் உலமா கிளை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், குறித்த சந்தேக நபர் எந்தவொரு அங்கீகாரம் பெற்ற மார்க்க அறிஞரும் அல்ல என்றும், அவர் பட்டம் பெற்ற மௌலவி அல்ல என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உறுப்பினரும் அல்ல எனவும் அந்த அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் குறித்த நபர் தொடர்பில் வெளியிடப்படும் தகவல்களில் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தி வெளியிடுமாறும் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறும் அந்த ஊடக அறிக்கை ஊடாக இறக்காமம் ஜம்இய்யத்துல் உலமா கிளை கேட்டுக்கொண்டுள்ளது.

மட்டக்களப்பில் 135 வீடு வீடு திருத்தத்திற்கான உதவித்தொகைகள் வழங்கிவைப்பு - எம்.பீஎம். பிர்தௌஸ் நளீமி பிரதம அதிதியாக பங்க...
01/06/2026

மட்டக்களப்பில் 135 வீடு வீடு திருத்தத்திற்கான உதவித்தொகைகள் வழங்கிவைப்பு - எம்.பீஎம். பிர்தௌஸ் நளீமி பிரதம அதிதியாக பங்கேற்பு!

Kattankudy.lk
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பழுதடைந்த நிலையிலுள்ள வீடுகளைத் திருத்தம் செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட 135 பயனாளிகளுக்கான இறுதிக்கட்ட உதவித்தொகைக் கொடுப்பனவுகளின் காசோலைகள் கடந்த 26ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட வீடமைப்பு அதிகார சபை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர்களில் ஒருவரான எம்.பி.எம். பிர்தௌஸ் (நளீமி), பயனாளிகளுக்கு காசோலைகளை நேரடியாக வழங்கிவைத்தார்.

வீட்டு வசதிகளை மேம்படுத்தி மக்களின் வாழ்வாதாரத் தரத்தை உயர்த்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம், மாவட்டத்தின் பல குடும்பங்களுக்கு பயனளிப்பதுடன் பாதுகாப்பான மற்றும் வசதியான குடியிருப்புச் சூழலை உருவாக்குவதற்கும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது.

நிகழ்வில் வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள், பயனாளிகள் மற்றும் அழைக்கப்பட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

01/06/2026

காத்தான்குடியின் சில பகுதிகளில் குப்பை சேகரிப்பு தாமதம் – உடனடி நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் வேண்டுகோள்..!

Kattankudy.lk
காத்தான்குடி நகர சபை எல்லைக்குட்பட்ட அல் அக்ஸா வட்டாரம் மற்றும் ஜாமியுழ்ழாபிரீன் வட்டாரம் உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த சில வாரங்களாக குப்பை சேகரிக்கும் வாகனம் வருகை தரவில்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் எமது ஊடகத்துடன் தொடர்புகொண்டு தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

குப்பை சேகரிப்பு முறையாக இடம்பெறாத காரணத்தால் பல வீடுகளில் அதிகளவிலான குப்பைகள் தேங்கிக் கிடப்பதாகவும், இதனால் துர்நாற்றம் பரவுவதோடு பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகள் உருவாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக அல் அக்ஸா வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு வாரங்களாக குப்பை சேகரிக்கும் வாகனம் வருகை தராததால் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் தொடர்பான காணொளியையும் அப்பகுதி மக்கள் எமது ஊடகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எனவே, இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காத்தான்குடி நகர சபையின் அப்பகுதிகளுக்கான வட்டார உறுப்பினர்கள் உடனடி கவனம் செலுத்தி, குறித்த பகுதிகளில் திண்மக்கழிவு சேகரிப்பு நடவடிக்கைகளை சீராக முன்னெடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

01/06/2026

14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு – சந்தேக நபராக 21 வயது மதப்போதகர் கைது!
1st Comment 👇

077 433 3602 (WhatsApp)
01/06/2026

077 433 3602 (WhatsApp)

🌊 கொழும்பு - தெஹிவளை கடற்கரை ஓரத்தில்...உங்கள் சொந்த வீட்டில் இருப்பது போன்ற ஓர் அனுபவம்!- Kattankudy Ads Zone -🏡 அழகிய ...
01/06/2026

🌊 கொழும்பு - தெஹிவளை கடற்கரை ஓரத்தில்...
உங்கள் சொந்த வீட்டில் இருப்பது போன்ற ஓர் அனுபவம்!

- Kattankudy Ads Zone -
🏡 அழகிய கடற்கரை சூழலில் ஓய்வையும் மகிழ்ச்சியும் தேடுகிறீர்களா?

தெஹிவளையில், நவீன வசதிகளுடன் கூடிய 2 அல்லது 3 படுக்கையறைகள் கொண்ட அழகிய அபார்ட்மெண்ட்கள் தற்போது நாளாந்த வாடகைக்கு கிடைக்கின்றன.

👨‍👩‍👧‍👦 குடும்ப விடுமுறைக்கும், நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரம் கழிப்பதற்கும் சிறந்த தேர்வு!

✅ 2 அல்லது 3 விரிவான படுக்கையறைகள்
✅ முழுமையான தளபாட வசதி (Fully Furnished)
✅ வாகன தரிப்பிட வசதி
✅ அமைதியான சூழல் மற்றும் கடற்கரை அருகாமை
✅ காலி வீதி, ஷாப்பிங் மால், ரயில் நிலையம் அனைத்தும் மிக அருகில்
✅ மிக நியாயமான வாடகைக் கட்டணம்

🛎️ இது ஒரு ஹோட்டல் அல்ல — உங்கள் சொந்த வீட்டின் அனுபவம்!

📞 முன்பதிவுக்கு: 070 352 2296

- Kattankudy Ads Zone -
Kattankudy.lk

-------------------------------------------
🏡 காணி | 🏠 வீடு | 🏢 கடைத்தொகுதி
விற்பனை தொடர்பான விளம்பரங்களை Kattankudy.lk ♥️ சமூக ஊடகத்தில் விளம்பரம் செய்து கொள்ள 📲 077 4333 602 என்ற WhatsApp இலக்கம் ஊடாக தொடர்பு கொள்ளலாம்.
--------------------------------------------

ஆழமான கட்டமைப்பு ரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம்!Kattankudy.lkசமத்துவமின்மையையும் செயற்கை நுண்ணறிவு சவால்களைய...
01/06/2026

ஆழமான கட்டமைப்பு ரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம்!

Kattankudy.lk
சமத்துவமின்மையையும் செயற்கை நுண்ணறிவு சவால்களையும் வெற்றிகொள்வதற்கு பாடத்திட்டத் திருத்தங்களுக்கு அப்பால் சென்ற ஆழமான கட்டமைப்பு ரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு பேராயர் துஷாந்த ரொட்ரிகோவின் அழைப்பின்பேரில், நிகழ்த்திய,உரையின் ​போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டில் இலங்கை மற்றும் அதற்கு அப்பாலான கல்வியின் எதிர்காலத்தை வடிவமைத்தல் என்ற தலைப்பில் ஆற்றிய விரிவுரையின் போது, இலங்கையின் பல்மத ஒற்றுமை மற்றும் சமூகப் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தைப் பிரதமர் வலியுறுத்தினார்.

இலங்கையின் கல்விக் கொள்கையின் வரலாற்றுப் பயணத்தைப் பற்றி கருத்துத் தெரிவித்த பிரதமர், 1971 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) அறிக்கையை மேற்கோள்காட்டி, நாட்டில் நிலவும் “திறன்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கு இடையிலான பொருத்தமின்மை மற்றும் அரசத் துறை வேலைவாய்ப்புகளை நோக்கிய வரிசையில் காத்திருக்கும் நிலை ஆகியன பொருளாதார சவால்களுக்கு காரணமாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.

பல தசாப்தங்களாக STEM கல்வி மற்றும் தொழில்நுட்பத் திறன்கள் அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்த போதிலும், அதன் மூலம் நாட்டின் கட்டமைப்பு ரீதியிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அச் சீர்திருத்தங்களால் இயலாது போயிருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்

இலவசக் கல்வியின் உண்மையான நோக்கம் தொழிலாளர் படையை உருவாக்குவது மட்டுமல்ல, ஜனநாயக சமூகத்தை முன்னெடுத்துச் செல்லத் தக்க, அரசியல் விழிப்புணர்வும், ஒழுக்கம்மிக்க நிலைப்பாடும் விமர்சன ரீதியான சிந்தனையும் கொண்ட நாட்டு மக்களை உருவாக்குவதாக அது அமைய வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

அத்தோடு கல்வி கட்டமைப்பில் தீர்க்கப்பட வேண்டிய ஐந்து முக்கிய நெருக்கடிகளைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கல்வி நிறுவனங்களுக்கிடையில் நிலவுகின்ற இடைவெளி, சமூகப் பொறுப்புணர்வுமிக்க குடிமக்களை உருவாக்குவதில் காணப்படும் இயலாமை, பெண்களின் கல்விரீதியிலான வெற்றிகள் மற்றும் தொழிலாளர் படையில் இணைந்து கொள்வதில் காணப்படும் இடைவெளி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்ப மாற்றங்களைத் தழுவிக்கொள்ள வேண்டியதன் அவசியம் மற்றும் கல்வியை வெறுமனே சான்றிதழ்களைப் பெறுவதற்கான கருவியாக மாத்திரம் கருதும் நிலை.

செயற்கை நுண்ணறிவை எதிர்கொள்ள வேண்டுமாயின் டிஜிட்டல் கல்வியறிவையும் இணையவழிப் பாதுகாப்பையும் பலப்படுத்துவது அவசியம் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

கல்வி என்பது உலகைப் புரிந்து அதை மாற்றியமைக்கும் ஒரு செயற்பாடாகும் என்றும், ஆசிரியர் தொழிலை மீண்டும் சமூக மரியாதைக்குரிய ஒரு உயரிய தொழிலாக நிலைநிறுத்த வேண்டுமெனவும், கல்விச் சீர்திருத்தங்களின் இறுதி இலக்கு சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய தலைவர்களை உருவாக்குவதாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

விபத்தை ஏற்படுத்திய சாரதி மதுபோதையில் - பொலிஸார் உறுதி!Kattankudy.lkகொழும்பு - மீகொட பகுதியில் தானசாலைக்காக வரிசையில் நி...
01/06/2026

விபத்தை ஏற்படுத்திய சாரதி மதுபோதையில் - பொலிஸார் உறுதி!

Kattankudy.lk
கொழும்பு - மீகொட பகுதியில் தானசாலைக்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது வாடகை கார் மோதியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான குறித்த சாரதி மதுபோதையில் இருந்தமை தற்போது உறுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில், காயமடைந்த சிறு குழந்தை உட்பட ஏழு பேர் ஹோமகம மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆரம்பகட்ட விசாரணைகளில் அவிசாவெல்ல பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குறித்த வாடகை கார் மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில், வரிசையிலிருந்த 15, 32 மற்றும் 56 வயதுடைய மூன்று பெண்களும், 35 மற்றும் 38 வயதுடைய மூன்று ஆண்களும் உயிரிழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில், காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவர் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அத்துடன், விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி மையவாடி அருகே  குப்பை கொட்டுபவர்களுக்கு எதிராக நகர சபை கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – மக்கள் கோரிக்...
01/06/2026

காத்தான்குடி மையவாடி அருகே குப்பை கொட்டுபவர்களுக்கு எதிராக நகர சபை கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – மக்கள் கோரிக்கை!

Kattankduy.lk
காத்தான்குடி நகர் மத்தியில் அமைந்துள்ள மையவாடி பகுதியை அண்மித்து சிலர் முறையற்ற வகையில் குப்பைகளை கொட்டிவருவதால், சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் பொதுச் சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக சேர் ராஷிக் பரீட் மாவத்தையில், பழைய தண்ணீர் தாங்கிக்கு முன்பாக அமைந்துள்ள ஜாமியுழ்ழாபிரீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் மையவாடி சந்தி அருகே குப்பைகள் குவிக்கப்பட்டு காணப்படுவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புனிதமும் மரியாதையும் பேணப்பட வேண்டிய மையவாடி பகுதியை அண்மித்து இவ்வாறான அசுத்த நிலை காணப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவ்வாறான சட்டவிரோத குப்பைக் கொட்டல்களை தடுப்பதற்காக பொறுப்புடைய அதிகாரிகள் இதுவரை போதுமான கவனம் செலுத்தவில்லை என்பதும் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அருகிலுள்ள கண்காணிப்பு கமெரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து, குப்பைகளை வீசும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுச் சொத்துக்கள், மதிப்புமிக்க இடங்கள் மற்றும் சுற்றுச்சூழலை சுத்தமாக பேணுவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும். சமூக நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இவ்வாறான பொறுப்பற்ற செயல்களை தடுக்க காத்தான்குடி நகர சபையினர் உடனடி நடவடிக்கை அவசியம் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையினால் தாமரை இலையில் வெசாக் தன்சல் விநியோகம்!Kattankudy.lkவெசாக் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு ...
31/05/2026

மட்டக்களப்பு சிறைச்சாலையினால் தாமரை இலையில் வெசாக் தன்சல் விநியோகம்!

Kattankudy.lk
வெசாக் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலை மற்றும் சிறைச்சாலை நலன்புரி சங்கம் இணைந்து தன்சல் வழங்கும் நிகழ்வு இன்று (31) மாலை நடைபெற்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் அசித குணதிலக தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு சிறைச்சாலை வளாக முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது பொதுமக்களுக்கு தாமரை இலையில் கடலை வழங்கப்பட்டது. தாமரை இலையில் வழங்கப்பட்ட இந்த வெசாக் தன்சலை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு சுவைத்தனர்.

இந்த நிகழ்வில் சிறைச்சாலை அதிகாரிகள், நலன்புரி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Address

Main Street
Kattankudi
30100

Opening Hours

Monday 07:00 - 23:00
Tuesday 07:00 - 23:00
Wednesday 07:00 - 23:00
Thursday 07:00 - 23:00
Friday 07:00 - 23:00
Saturday 07:00 - 23:00
Sunday 07:00 - 23:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kattankudy.lk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share