26/09/2021
கணையம் எங்கே இருக்கிறது?’ என்று கேட்டால், பலரும் யோசிப்பார்கள். காரணம், கணையம் குறித்த விழிப்புணர்வு எம்மவர்களிடம் கூட இல்லை. மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிற இக்கால கட்டத்தில் கணையத்தை பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
கணையம் அல்லது Pancreas👇🏼
நம் வயிற்றில், இரைப்பைக்குக் கீழே, சிறிது பின்புறமாக, முன்சிறுகுடலுக்கு இடது பக்கமாக, மாவிலை வடிவத்தில், ஊதாவும் மஞ்சளும் கலந்த நிறத்தில், தட்டையாக ஓர் உறுப்பு உள்ளது.
நீளம் அதிகபட்சமாக 20 செ.மீ. எடை 100 கிராம் வரை இருக்கும்.
இது ஒரு கலப்படச் சுரப்பி (Dual Gland). இதில் நாளமுள்ள சுரப்பிகளும் உள்ளன. நாளமில்லா சுரப்பிகளும் உள்ளன
🔴கணையப் புற்றுநோய்
மிகை மது மற்றும் புகைப்பழக்கம் காரணமாக கணையத்தில் புற்றுநோய் ஏற்படவும் அதிக வாய்ப்புண்டு.
🔴இதன் அறிகுறிகளும் கணைய அழற்சிக்குரிய அறிகுறிகளும் ஏறக்குறைய ஒன்றுபோலவே இருக்கும். இது ஒரு கொடுமையான புற்றுநோய்.
மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை கதிர்வீச்சு சிகிச்சை என்று எதற்கும் கட்டுப்படாது. நோயாளி சீக்கிரத்தில் உயிரிழப்பது உறுதி.
🔴கணையத்தில் சுரக்கும் செரிமான நீர்கள் மிகவும் கடுமையானவை. தங்கள் இயல்பை மீறி கணையத்தில் இவை தேங்குமானால், கணையத்தையே அழித்துவிடுகின்ற அளவுக்கு மோசமானவையும்கூட
🔴கணையம் சில காரணங்களால் திடீரென்றோ, நாள்பட்டோ பாதிக்கப்படலாம்.
அப்போது கணையம் வீங்கிவிடும். பிறகு அழுகிவிடும். இறுதியாக கணையத்தில் ரத்தப்போக்கு ஏற்படும் அந்த நிலைமையைக் `கணைய அழற்சி’ (Pancreatitis) என்கிறோம். 🔴சமிபாட்டிற்குத் தேவையான கணைய நொதிகள் (குறிப்பாக டிரிப்சின் நொதியம்) சிறுகுடலில் செயற்பாடடைவதற்குப் பதிலாகக் கணையத்திலேயே செயல்திறன்மிக்கதாக மாறிவிடுவதால் இந்நோய் உருவாகிறது.
🔹நாட்பட்ட கணைய அழற்சி நீரிழிவு நோய் அல்லது கணையப் புற்றுநோய்க்கு வித்திடலாம்
🔹கணைய நொதிகள் போதிய அளவு இல்லாமையால் சமிபாடு பாதிக்கப்பட்டு விளக்க இயலாத உடல் எடை குறைவு ஏற்படலாம்.
பொதுவான அறிகுறிகள்:
▪️மேல்வயிறு அல்லது வயிற்றின் இடது மேற்புறம் கடுமையான எரிச்சல் தரக்கூடிய வலி ,முதுகுபுறமாகப் பரவுதல்,
▪️குமட்டல்,
▪️உணவு உண்டபின் மோசமாகும் வாந்தி
▪️உடலின் உட்புறத்தில் ஏற்படும் இரத்தக் கசிவு மற்றும் அதன் தீவிரத்தைப் பொருத்து
▪️வலி, குருதி அழுத்தம் அதிகரிக்கலாம்.
▪️இதயத் துடிப்பு, சுவாசவீதம் ஆகியவை அடிக்கடி அதிகரித்துக் காணப்படும்.
▪️சாதாரணமாக, வலி ஏற்பட்டுள்ளதைப் போலல்லாமல்
குறைந்த அளவில் வயிறு மிருதுவாகக் காணப்படும்
▪️காய்ச்சல் அல்லது மஞ்சள் காமாலை காணப்படலாம்.
🔴பித்தக்கற்கள்
🔴மது அருந்துவது
(80%) கணைய அழற்சிக்குக் காரணமாகிறது.
பொதுவாக, கடுமையான கணைய அழற்சிக்குப் பித்தக்கற்களும்
நாட்பட்டக் கணைய அழற்சிக்கு மது அருந்துவதும் முதன்மைக் காரணிகளாக விளங்குகின்றன
☑️முன்பக்கமாக சாய்ந்து உட்கார்ந்தால் வலி சிறிது குறையும். படுத்தால் வலி அதிகரிக்கும். இந்த நோய்க்கு இது ஒரு முக்கிய அறிகுறி.
குமட்டல், வாந்தி இருக்கும்.
வயிறு உப்பும்.
🔴நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது - இரைப்பைப் புண் உள்ளவர்களுக்கும் இதே போன்றுதான் வயிற்றுவலி இருக்கும்.
🔴ஆனால், அவர்களுக்கு வாந்தி எடுத்த பின்னர் வயிற்று வலி குறைந்துவிடும்.
🔴கணைய அழற்சி உள்ளவர்களுக்கு வாந்தி எடுத்தாலும் வயிற்றுவலி குறையாது.
பரிசோதனைகள்
🔹ரத்தத்தில் அமைலேஸ் அளவு அதிகரித்தால் கணைய அழற்சி ஏற்பட்டுள்ளது என்று நிர்ணயித்துவிடலாம்.
இதன் இயல்பு அளவு 80லிருந்து 100 யூனிட்்.
கணைய அழற்சியில் இதன் அளவு 1000 யூனிட்டுகளுக்கு மேல் அதிகரிக்கும்
🔹ரத்தத்தில் லைப்பேஸ் அளவும் அதிகரிக்கும்.
🔹வயிற்று எக்ஸ்-ரே,
🔹அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,
🔹சி.டி. ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்றவையும் கணைய அழற்சியை உறுதி செய்ய உதவும்.
சிகிச்சை முறைகள்
கணைய அழற்சியை ஆரம்ப நிலை
யிலேயே கவனித்து விட்டால் மருந்துகள் மூலமே குணப்படுத்தி விடலாம். கணையம் அழுகி விட்டாலோ அல்லது அதில் ரத்தப்போக்கு ஏற்பட்டு விட்டாலோ அறுவை சிகிச்சை தேவைப்படும்.
கணையத்தைக் காப்பது எப்படி?
1. தொடர்ந்து மது அருந்துவதை அறவே தவிர்க்கவும்.
2. பித்தப்பையில் கற்கள் உருவானால் உடனே அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும்.
3. மஞ்சள் காமாலை, அம்மைக்கட்டு, ருபெல்லா நோய்களுக்கு குழந்தைப் பருவத்திலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ளவும்.
4. நீங்களாக மருந்துக்கடைகளில் மருந்து, மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவதை நிறுத்தவும்.
5. புகையில் வாட்டி தயாரிக்கப்படுகின்ற உணவுகளை ஓரங்கட்டுங்கள்.
6. கலப்பட எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்த வேண்டாம்.
7. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திப்பயன்படுத்தாதீர்கள்.
8. நாற்பது வயதுக்கு மேல் உள்ளவர்கள் கொழுப்புணவுகளைக் குறைத்துக் கொள்ளவும்.
9. புகைப்பதை நிறுத்தவும்.
10. பழங்கள், காய்கறிகள் நிறைந்த ஆரோக்கிய உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுங்கள்.
✅நாளமுள்ள சுரப்பிகள், என்சைம்கள் அடங்கிய உணவுச் செரிமான நீர்களைச் சுரக்கின்றன. இந்தச் செரிமான நீர்கள் ‘கணைய நாளம்’ வழியாக முன்சிறுகுடலுக்குச் சென்று, கொழுப்பு, புரதம், மாவுப்பொருள் ஆகிய உணவுச்சத்துகள் செரிப்பதற்கு உதவுகின்றன.
✅கணையத்தில் ‘லாங்கர்ஹான்ஸ் திட்டுகள்’ (Islets Of Langerhans) எனும் சிறப்புத் திசுக்கள் ஆங்காங்கே பரவிக்கிடக்கின்றன.
ஆரோக்கியமாக உள்ள நபரிடம் சுமார் 10 லட்சம் திட்டுகள் உள்ளன. ஒவ்வொரு திட்டிலும் 3000 முதல் 4000 வரை செல்கள் உள்ளன.
இந்த செல்கள் ஆல்பா, பீட்டா, டெல்டா என்று 3 வகைப்படும். இவற்றில் ‘பீட்டா’ செல்கள் இன்சுலினையும், ஆல்பா செல்கள் குளுக்ககான் ஹார்மோனையும், டெல்டா செல்கள் சொமோட்டோஸ்டேடின் ஹார்மோனையும் சுரக்கின்றன. இவை ‘நாளமில்லா சுரப்பிகள்’ என்பதால், தாம் சுரக்கின்ற ஹார்மோன்களை ரத்தத்தில் நேரடியாகவே சேர்த்துவிடுகின்றன.
✅இப்படி ஒரே நேரத்தில் இரு வேலைகளைச் செய்கிற உறுப்பு நம் உடலில் வேறு எதுவும் இல்லை.
Written by dr . Priyaanthini Kamalasingam
DGH chilaw , TH jaffna.