15/12/2013
பிஸ்மி – சிறுவர்களுக்கான இஸ்லாமிய சஞ்சிகை
இஸ்லாமிய சஞ்சிகை, சிறுவர், சிறுவர்களுக்கான
இன்றைய நவீன விஞ்ஞான உலகின் தொழில் நுட்பத்தின் பிரமிக்கத்தக்க விளைவை தொலை தொடர்பு சாதனங்களின் வழி நாம் மெஞ்சிக் கொண்டு இருக்கின்றோம்
இலங்கையில்
மிக அண்மைக்காலங்களில் துரித கதியில் தோற்றம் பெற்ற ஒளி,ஒலி பரப்பு சேவைகள் இதனை எமக்குத் தெளிவாக பறை சாற்றி நிற்கின்றன
இது ஓர் சாதகமான நிலையாயினும் இவற்றின் வணிக நோக்கு சார்ந்த நடவடிக்கையும் முதற் தர இருப்புக்குமான போட்டியின் காரணமாக பல நல்ல நிகழ்ச்சிகள் இன்றி வெறுமனே பாலியலைத் தூண்டக் கூடிய நிகழ்ச்சிகள் மாத்திரமே அதிகம் இடம் பெறுகின்றன
இவற்றின் பாதகமான விளைவுகளை ஏனைய சமூகத்தினரை விடவும் முஸ்லிம் சமூகம் உணர்வுபூர்வமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறது
குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினர் சிக்குண்டு தவிப்பதை தெளிவாக காணக்கூடியதாக உள்ளது
இரண்டு தசாப்த கால யுத்த சூழ் நிலை விலகிய பின்னர் பல்வேறுபட்ட காரணங்களின் அடியாக
தனக்கான தனித்துவமான ஓர் ஊடகம் தேவை என்பதை முஸ்லிம் சமூகம் உணர்ந்து கொள்ள ஆரம்பித்திருக்கின்றது
இந்தக் குறையே முஸ்லிம் பத்திரிகைகள் மிகக் கணிசமான அளவு தாக்கம் செலுத்தி குறைத்து வந்து கொண்டிருக்கின்ற நிலையிலும் ஒரு முழு நிறைவான தன்மையே உணர முடியவில்லை.
இன்று சிறுவர்கள் பற்றிய கவனம் ஆழ்ந்த வாசிப்புக்குட்படுத்தப்படுகின்றது
சிறுவர் இலக்கியம் பற்றிய வெளிப்பாடுகள் மிகக் குறைவாகவே தமிழில் உள்ள நிலையில் காத்தான் குடி இஸ்லாமியக் கலை கலாசார பண்பாட்டுக் கழகத்தின் அனுசரனையில் பிஸ்மி பதிப்பகத்தின் வெளியீடாக சிறுவர்களுக்கான இஸ்லாமிய இதழாக ‘பிஸ்மி’ சஞ்சிகை வெளிவருவதானது முக்கியத்துவம் பெறுகின்றது.
இது இலங்கையின் முதலாவது இஸ்லாமிய சிறுவர் இதழ் என்பதும் குறிப்பிடத்தக்கது
குர்ஆன் சொல்லும் கதை, பிஸ்மி நண்பர்கள் பகுதி, ஹதீஸ் பக்கம், சூராக்களின் அறிமுகம், ஈமான் கொள்வோம், குறுக்கெழுத்துப் போட்டி என பல்சுவை அம்சங்களுடன் வெளி வருகிறது.
மாத இதழான பிஸ்மி முதல் இதழுக்கும் இரண்டாவது இதழுக்கும் இடையில் இதண்டு மாதங்கள் சென்றிருப்பதும் குறைந்த பக்கங்களுடன் வெளி வந்திருப்பதும் பிஸ்மியின் பொருளாதாரத்தைச் சுட்டுகின்றது.
இம்முறை புலமைப் பரிசில் பரீட்சை மாதிரி வினாத் தாளை தன்னகத்துடன் சுமந்திருப்பது பிஸ்மியின் விரிந்த நோக்கை புலப்படுத்துகின்றது.
எனவே பிஸ்மியின் தொடர் வருகை அவசியமானது
இதனது பங்களிப்பு இச்சமூகத்தில் காத்திரமானதாக அமைய வேண்டும் எனவும் வாழ்த்துகிறோம்.
அத்தோடு சில தவறுகள் பிஸ்மியில் உள்ள போதிலும் அவற்றைத் திருத்தி மேலும் அதிக பக்கங்களுடன் வெளி வர வேண்டுகின்றேன்.
எமது முயற்சிகளை அல்லாஹ் தூய்மைப்படுத்துவானாக.
- 2004/08 /ஞாயிற்றுக் கிழமை தினகரனில் பிரசுரமானது-