
23/06/2025
கத்தார் தளம் மீதான தாக்குதல் பற்றி முன்கூட்டியே அறிவித்தமைக்காக ஈரானுக்கு நன்றி தெரிவிக்கிறார் ட்ரம்ப்!
"ஈரான் தனது அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா அழித்ததற்கு அதிகாரபூர்வமாக மிகவும் பலவீனமான பதிலடியைக் கொடுத்துள்ளது. இது நாங்கள் எதிர்பார்த்தது தான். 14 ஏவுகணைகள் ஏவப்பட்டன அவற்றில் 13 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன, ஒன்று மாத்திரம் "விடுவிக்கப்பட்டது". ஏனெனில் அது அச்சுறுத்தல் இல்லாத திசையில் சென்றதால் ஆகும். எந்த அமெரிக்கர்களும் பாதிக்கப்படவில்லை, எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இனி ‘வெறுப்பு’ இருக்காது என்று நம்புகிறேன். எங்களுக்கு முன்கூட்டியே அறிவித்ததற்காக ஈரானுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், இதனால் யாரும் உயிரிழக்கவோ, யாரும் காயமடையவோ இல்லை. ஈரான் இப்போது பிராந்தியத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிச் செல்லக்கூடும், மேலும் இஸ்ரேலும் அதனை செய்ய வேண்டும் என ஊக்குவிப்பேன்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.