03/09/2025
இந்திய அணியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட சிவம் மவி, தற்போது மீண்டும் வாய்ப்புக்காக காத்து கொண்டு இருக்கிறார். 26 வயதான சிவம் மவி இதுவரை ஆறு டி20 சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். 19 முதல் தரப் போட்டிகளில் 72 விக்கெட்டுகளும், 46 லிஸ்ட் ஏ போட்டிகளில் 72 விக்கெட்டுகளும் பெற்றுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த சிவம் மவி, கேகேஆருக்காக ஐபிஎல்-ல் விளையாடியுள்ளார், ஆனால் காயங்கள் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை பலமுறை பாதித்துள்ளன. நேர்காணல் ஒன்றில் பங்கேற்று பேசிய சிவம் மவி, ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்ஷியில் உங்களுக்கு போதுமான ஆதரவு கிடைத்ததாக உணர்கிறீர்களா என்ற கேள்விக்கு, அவர் எனக்கு ஆதரவு அளித்தார்."
"ஆனால் ஐபிஎல்-ல் பின்னர் எனக்கு வாய்ப்பு கிடைக்காதது ஏன் என்று எனக்கு புரியவில்லை. நான் நன்றாக செயல்பட்டு இந்திய அணிக்கு திரும்ப வேண்டியிருந்தது. ஆனால், எனக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்காதது புரியவில்லை. என்று கூறினார். இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, தேர்வாளர்கள் அல்லது நிர்வாகத்திடமிருந்து ஏதேனும் தொடர்பு இருந்ததா என்று கேள்வி எழுப்பட்டது.
அதற்கு, "இல்லை, யாரிடமிருந்தும் எந்த தொடர்பும் கிடைக்கவில்லை" என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய அவர், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஆசை. ஏனெனில் மஹி பாய் ஒரு பந்து வீச்சாளர்களின் கேப்டன் என்று எப்போதும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் நிறைய சுதந்திரம் அளிக்கிறார். மைதான அமைப்பை எளிதாக்கி, நாம் எந்த பந்து வீச முயற்சிக்கிறோமோ அதைச் செயல்படுத்துவதை எளிதாக்குகிறார்."
"அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும். தோனி எனக்கு அளித்த ஆலோசனையில்
டி20 கிரிக்கெட்டில், 2-3 ஓவர்களில் 40 ரன்கள் விட்டாலும், கடைசி ஓவரை நன்றாக வீசி, 6-7 ரன்கள் மட்டும் கொடுத்து, 1-2 விக்கெட்டுகளை வீழ்த்தி உங்கள் அணிக்கு வெற்றியைத் தேடித்தர முடியுமானால், அதுவே முக்கியம் என்று கூறினார்."
"ஒவ்வொரு பந்தும் முக்கியமானது மற்றும் அதை சரியாக செயல்படுத்த வேண்டும். இளம் வீரர்கள் ஒரு சிக்ஸர் அடிக்கப்பட்டால் அதிகமாக சிந்தித்து, தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். ஆனால், நீங்கள் நன்றாக தயாராகி, ஒவ்வொரு பந்தையும் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தினால், அழுத்தம் தானாகவே குறையும்," என்று தோனி ஆலோசனை வழங்கியதாக மவி தெரிவித்தார்.
* இலங்கையர்கள் காணிகள் வீடுகள் வாங்கல் விற்றல் சம்பந்தமான விபரங்களை உங்களது whatsapp இல் பெற்றுக் கொள்ள Comment Box யில் Link இருக்கிறது Join பண்ணிக் கொள்ளுங்கள்
* எமது வீடியோக்களில் உங்களது விளம்பரங்கள் வர வேண்டுமா WhatsApp யில் Chat பண்ணுங்கள்
+94755226220