KINNIYAN MAIL

KINNIYAN MAIL இன்றே இணைந்திடுங்கள்....இவ் உலகம் உங்கள் கையடக்க தொலைபேசியில்.

இலங்கையின் 25 நிர்வாக மாவட்டங்களையும் நினைவுபடுத்தும் சின்னங்களோடு புதிய 10 ரூபாய் நாணயக் குற்றிகளை வெளியிட்டது மத்திய வ...
18/11/2014

இலங்கையின் 25 நிர்வாக மாவட்டங்களையும் நினைவுபடுத்தும் சின்னங்களோடு புதிய 10 ரூபாய் நாணயக் குற்றிகளை வெளியிட்டது மத்திய வங்கி.

கிழக்கு மாகாண பொது சுகாதார பரிசோதகர்கள் பணிப்பகிஷ்கரிப்பு.கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பொது சுகாதார பரிசோதகர்களும் இன்...
20/10/2014

கிழக்கு மாகாண பொது சுகாதார பரிசோதகர்கள் பணிப்பகிஷ்கரிப்பு.

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பொது சுகாதார பரிசோதகர்களும் இன்று முதல் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு சுகாதார பணிமனைக்கு உட்பட்ட பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை சட்டத்திற்கு முரணான வகையில் இடமாற்றம் செய்தமைக்கு, எதிர்ப்பு தெரிவித்தே பணியிலிருந்து விலகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளை தலைவர் எஸ். கிருஸ்ணப்பிள்ளை தெரிவிக்கின்றார்.

இந்த பிரச்சினைக்கான உரிய தீர்வு வழங்கப்படும் வரை கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பொது சுகாதார பரிசோதகர்களும் பணியிலிருந்து விலகியிருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த விடயம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ள போதிலும் எவ்விதமான காத்திரமான பதில்களையும் அவர்கள் வழங்கவில்லை எனவும் எஸ். கிருஸ்ணப்பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வித விசாரணைகளும் இன்றி குறித்த உத்தியோகஸ்தருக்கு இடமாற்றும் வழங்கப்பட்டுள்ளதை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையும் போட்டியிட முடியுமா? உயர்நீதிமன்றத்தை நாடுகிறது அரசாங்கம்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதி...
20/10/2014

மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையும் போட்டியிட முடியுமா? உயர்நீதிமன்றத்தை நாடுகிறது அரசாங்கம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது தடவையும் போட்டியிட முடியுமா என்ற சட்டப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கம், உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கோரவிருப்பதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 18வது திருத்தத்தின் வியாக்கியானத்தை ஜனாதிபதி காரியாலயத்தின் ஊடாக நீதிமன்றிடம் நவம்பர் முதல் வாரத்தில் கோரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரும்பாலும் 2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி சமர்ப்பித்த பின்னர், அரசாங்கம் இதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்தும் என்றும் தெரியவருகிறது.அரசியலமைப்பின் 18வது திருத்தத்தில் இருக்கின்ற உறுப்புரைகளுக்கு அமைய ஜனாதிபதிக்கு மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிட முடியாது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா உள்ளிட்ட சட்ட நிபுணர்களும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பலரும் தர்க்கித்து வருகின்றனர்.

இதனால் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உயர்நீதிமன்றத்தை நாடவேண்டும் என்று அரசாங்கத்தின் சட்ட ஆலோசகர்கள் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமையவே அரசாங்கம் நீதிமன்றத்தை நாடவிருப்பதாக தெரியவருகின்றது. அரசியலமைப்புக்கு வியாக்கியானம் செய்யும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கே இருக்கின்றது. இந்நிலையிலேய தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு 18வது திருத்தம் தொடர்பிலான வியாக்கியானத்தை அரசாங்கம் கோரவிருக்கின்றது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

20/10/2014

இன்றே இணைந்திடுங்கள்....இவ் உலகம் உங்கள் கையடக்க தொலைபேசியில்.

பிரபல பிக்குகளுக்கு இடையில் கடும் மோதல்!எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடவுள்ள மாதுலுவாவே சோபித்த த...
16/10/2014

பிரபல பிக்குகளுக்கு இடையில் கடும் மோதல்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடவுள்ள மாதுலுவாவே சோபித்த தேரருக்கும் பொதுபலசேனாவின் ஸ்தாபக தலைவர் கிராம விமலஜோதி தேரருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இந்த வார ஆரம்பத்தில் இடம்பெற்ற பெல்லன்ன ஞானவிமல தேரரின் மரணக்கிரியையின் போது இந்த வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வுக்கு சோபித தேரர் வருகைத்தந்த போது விமலஜோதி தேரர் வயதுக்கு பெரியவர் என்ற அடிப்படையில் எழுந்து நின்று சோபித தேரருக்கு மரியாதை செலுத்தினார்.
எனினும் தம்மீது தாக்குதலை நடத்தும் பொதுபலசேனா ஆசனத்தில் இருந்து எழுந்து மரியாதை செலுத்துவதில் எவ்வித பிரயோசனமுமில்லை என்று சோபித தேரர் குறிப்பிட்டார்.

இதன்போது வாக்குவாதம் புரிந்த விமலஜோதி தேரர், தாம் சோபித தேரருக்கு எதிரானவர் அல்ல. எனினும் காவியுடை அணிந்துக்கொண்டு செயற்படும் அரசசார்பற்ற அமைப்பினரை தமக்கு பிடிக்காது என்று குறிப்பிட்டார்
இதனையடுத்து சோபித தேரரும் தர்க்கம் புரிந்த பின்னர் வேறிடத்தில் சென்று அமர்ந்துக்கொண்டார்
முன்னதாக பொதுபல சேனாவுடன் முரண்பட்டிருந்த விமலஜோதி தேரர் தற்போது மீண்டும் பொதுபலசேனாவுடன் இணைந்து செயற்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபரீத விளம்பரத்தால் 24 மணித்தியாலத்தில் 517 விபத்துக்கள்: மொஸ்கோவில் பரபரப்பு.பெண்ணொருவரின் மார்பகங்களை காட்சிப்படுத்து...
16/10/2014

விபரீத விளம்பரத்தால் 24 மணித்தியாலத்தில் 517 விபத்துக்கள்: மொஸ்கோவில் பரபரப்பு.

பெண்ணொருவரின் மார்பகங்களை காட்சிப்படுத்தும் வகையில் விளம்பர நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட விளம்பர பிரச்சாரம் ஒன்றினால் 24 மணித்தியாலத்துக்குள் 500க்கும் மேற்பட்ட வாகன விபத்துக்கள் ஏற்பட்ட விபரீதச் சம்பவமொன்று ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில் இடம்பெற்றுள்ளது.

மொஸ்கோ நகரில் உள்ள 'சரப்பேன்' என்ற விளம்பர நிறுவனம், ஒரு பெண் தனது இரு மார்பகங்களையும் கையில் ஏந்தியவாறு இருக்கும் வகையில் அமைந்த பாரிய படத்தை கொண்ட விளம்பர காட்சியை 30 வேன்களில் வைத்து பேரணியாக சென்றுள்ளன.

அதாவது மொஸ்கோ நகரில் உள்ள வர்த்தக நிலையங்களின் விளம்பரங்களை இந்த சுவரொட்டியின் பக்கத்தில் வைத்தால் மக்களிடத்தில் கூடுதலான வரவேற்பை பெற முடியும் என்பதை நோக்காக கொண்டே இந்த வாகன பேரணியை குறித்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இந்த வாகன பேரணியால் குறித்த தினத்தில் 24 மணித்தியாலங்களில் 517 விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

எனினும் குறித்த விளம்பர நிறுவனம், விளம்பரங்களை மக்களிடத்தில் எளிதாக கொண்டுச் செல்ல மேற்கொண்ட புதிய யுக்தியால் பயணடைந்துள்ளதோம். அதன் விளைவே 517 விபத்துகள் பதிவாகியுள்ளன. மேலும் வாகன விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

24 வருடங்களின் பின்னர் யாழ். மண்ணை முத்தமிட்டது யாழ்தேவி.24 வருடங்களுக்கு பின்னர் யாழ்தேவி ரயில் இன்று யாழ்ப்பாணத்தினை ச...
13/10/2014

24 வருடங்களின் பின்னர் யாழ். மண்ணை முத்தமிட்டது யாழ்தேவி.

24 வருடங்களுக்கு பின்னர் யாழ்தேவி ரயில் இன்று யாழ்ப்பாணத்தினை சென்றடைந்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை இன்று திறந்துவைக்கப்பட்டது

அதனைத் தொடர்ந்து வடபகுதிக்கான ரயில் சேவை உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் வரை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பளையில் இருந்து முற்பகல் 10 மணி அளவில் யாழ்தேவி ரயில் பயணத்தை ஆரம்பித்து 11.15 அளவில் யாழ்ப்பாணத்தினை சென்றடைந்தது.

நன்றி - நியூஸ்பெஸ்ட்.

மருத்துவத்துறை நோபல் பரிசு - மூவருக்கு.ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு துறைகளிலும் இடம்பெறும் ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புகளுக்காக...
08/10/2014

மருத்துவத்துறை நோபல் பரிசு - மூவருக்கு.

ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு துறைகளிலும் இடம்பெறும் ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசுகள் வழங்கப்படுவது தெரிந்ததே. இந்த ஆண்டும் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு வழங்கப்படுகிறது.ஸ்வீடன் தலைநகர் "ஸ்டாக்ஹோம்" இல் வைத்து இந்த நோபல் பரிசை நோபல் பரிசுக்குழு இன்று அறிவித்தது.

மனிதனின் மூளை செல்கள் தொடர்பான கண்டுபிடிப்புக்காகவே இந்தப்பரிசு வழங்கப்படுகின்றது. அமெரிக்காவைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி ஜோன் ஓ கீஃப், மற்றும் நோர்வே நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகளான எட்வர்ட் ஐ மோசர்,அவரது மனைவி மே பிரிட் மோசர் ஆகிய மூவருக்குமே இந்த மருத்துவ நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்படுகின்றது.

இந்த, மருத்துவத்துறைக்கான நோபல் பரிசுக்குரிய 1.1 மில்லியன் அமெரிக்கடொலர் பரிசுத்தொகையில் பாதி தொகை நோர்வே நாட்டின் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படவிருக்கும் நிலையில்,மறுபாதி தனியொருவர் ஜோன் ஓ கீஃபுக்கு கிடைக்கவிருக்கிறது.

இதேவேளை,எம்மைச் சுற்றியுள்ள இடத்தின் வரைபடத்தை மூளை உருவாக்குகின்ற விதம் மற்றும் ஆபத்தான,சிக்கலான சூழ்நிலையில் மூளை அதற்கேற்ப எம்மை எப்படி வழிநடத்தி செல்கிறது? போன்ற மூளை சம்பந்தமான பல விடயங்களை தெரிந்துகொள்வதற்கு இவர்களின் கண்டுபிடிப்புகள் உதவியாக இருக்கும் என்று நோபல் பரிசுக்குழு தெரிவித்துள்ளது.

140 கிலோ சங்கிலியால் கட்டப்பட்ட ஒசாமா பின்லேடனின் உடல்.ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு, அவரது உடலில் 140 கிலோகிராம் எட...
08/10/2014

140 கிலோ சங்கிலியால் கட்டப்பட்ட ஒசாமா பின்லேடனின் உடல்.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு, அவரது உடலில் 140 கிலோகிராம் எடை கொண்ட சங்கிலி கட்டப்பட்டு கடலில் வீசப்பட்டதாக அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

‘சிஐஏ’வின் முன்னாள் இயக்குனரும், லியோன் பனேடா, சமீபத்தில் அமெரிக்க போர்கள் தொடர்பான புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

அதில், அல் தைா இயக்கத்தின் தலைவர் பின்லேடன், அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட பிறகு, எவ்வாறு அவரது உடல் கடலில் வீசப்பட்டது என்பதை விவரித்துள்ளார்.

“சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு ஒசாமாவின் உடல் கார்ல் வில்சன் போர்க் கப்பலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இஸ்லாமிய முறைப்படி அவரது உடல் வெள்ளைத் துணியால் மறைக்கப்பட்டு, அரேபிய மொழியில் அவருக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டு, ஒரு கனமான பைக்குள் உடல் வைக்கப்பட்டது.

உடல் ஒழுங்காக மூழ்க வேண்டும் என்று 140 கிலோகிராம் எடையிலான சங்கிலியும் அந்த பையோடு இணைக்கப்பட்டது. ஒரு மேசையில் உடல் வைக்கப்பட்டு, அந்த மேசை கப்பலின் மேலடுக்கில் தடுப்புகளுக்கு பக்கத்தில் வைக்கப்படது. மேசையை சாய்த்து உடலை கடலில் தள்ளும்போது, இருந்த எடையில் அந்த மேசையும் கடலுக்குள் விழுந்துவிட்டது. உடல் மூழ்கிய பிறகு மேசை கடல் பரப்பில் மேலே மிதந்தது” என்று லியோன் விவரித்துள்ளார்.

பின்லேடனின் உடல் எந்தக் கடலில், எந்தக் குறிப்பிட்ட இடத்தில் மூழ்கடிக்கப்பட்டது என்ற விபரங்கள் இதுவரை இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறப்புறுப்பில் முளைவிட்டு வளர்ந்திருந்த உருளைகிழங்கு: தாயின் ஆலோசனையால் விபரீதம், வைத்தியர்கள் அதிர்ச்சி!கொலம்பியாவை சே...
05/10/2014

பிறப்புறுப்பில் முளைவிட்டு வளர்ந்திருந்த உருளைகிழங்கு: தாயின் ஆலோசனையால் விபரீதம், வைத்தியர்கள் அதிர்ச்சி!

கொலம்பியாவை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர், கடுமையான வயிற்று வலிக்காக வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவரது உடலை பரிசோதித்த வைத்தியர்கள் அவரது பிறப்புறுப்பில் உருளைகிழங்கு முளைவிட்டு வளர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

பெண்ணின் அந்தரங்க உறுப்பினுள் உருளைகிழங்கு துண்டு ஒன்று வேர்விட்டு வளர்ந்திருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். பெயர் வெளியிட விருப்பமில்லாத அந்த பெணிடம் மருத்துவர்கள் எப்படி உருளைகிழங்கு அங்கு சென்றது என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், தனது தாய், குழந்தை பிறப்பை தவிர்ப்பதற்காக சிறந்த மருத்து உருளை கிழங்கு தான்.

எனவே இனச்சேர்க்கைக்கு முன் அந்த இடத்தில் உருளைக் கிழங்கை வைத்துக் கொண்டால், குழந்தை பிறப்பை தடுப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கும் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். உள்ளுருப்பினுள், உருளைக் கிழங்கு லேசாக வளர்ந்திருந்ததால், அறுவை சிகிச்சை இல்லாமல் நீக்கப்பட்டது.
இச்சம்பவம் கொலம்பியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியாவில் கடந்த 1990 முதல் பாடசாலையிலேயே உடலுறவு கல்வி கற்பிக்கப்பட்டு வந்தாலும், அங்கு வழக்கமான கருத்தடை மற்றும் பாதுகாப்பிற்கான ஆணுறை போன்றவை உபயோகப்படுத்தப்படுவதில்லை.

மாறாக, தம் மூதாதையர்கள் வாய்வழியாக கூறிவந்த இது போன்ற வைத்தியங்கள் மேலோங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுக்கு கொலம்பியாவில், பின் இளைய தலைமுறையினரிடம் பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிறையை கண்களால் பார்த்து தீர்மானிப்பதே பிறை :A :இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு ந...
05/10/2014

பிறையை கண்களால் பார்த்து தீர்மானிப்பதே பிறை :

A :
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்

(திருக்குர்ஆன் : 2:185)
பிறை சம்பந்தமான முக்கியமான ஆதாரமாக இந்த வசனம் அமைந்துள்ளது. திருக்குர்ஆன் ஏக இறைவனின் வார்த்தை என்பதை நாம் அறிவோம். மனித வார்த்தைகளில் காணப்படும் தவறுகள் இறைவனின் வார்த்தைகளில் இருக்காது; இருக்கவும் முடியாது.

“ஃபமன் ஷஹித மின் கும் அல் ஷஹ்ர“ (உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ)
ஆகிய ஏழு வார்த்தைகள் தேவையை விட அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது போல் தோன்றுகிறது. இந்த வார்த்தைகள் ஒரு பயனும் இல்லாமல் ஒரு கருத்தையும் கூறாமல் வீணாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா? நிச்சயமாக இல்லை. அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு வார்த்தையும் பொருளற்றதல்ல.

ரமளான் மாதத்தில் நோன்பு கடமை என்பதுடன் வேறு ஏதோ ஒரு செய்தியையும் சொல்வதற்காகவே இந்த வார்த்தைகளை அல்லாஹ் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை விட்டும் அவன் தூயவன்.
"உங்களில் அம்மாதத்தை அடைபவர்"
இதைப் புரிந்து கொள்வதற்கு இது போன்ற நடையில் பயன்படுத்தப்பட்ட சொற்றொடர்களை முன்மாதிரியாக நாம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முந்தைய வசனம் கூட இது போன்ற நடையில் தான் அமைந்திருக்கிறது.
உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ அல்லது பயணத்திலிருக்கிறாரோ அவர் வேறு நாட்களில் நோன்பு நோற்கட்டும் என்று இந்த வசனத்தில் இறைவன் கூறுகிறான்.

உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ என்றால் நோயாளியல்லாதவர்களும் உங்களில் இருப்பார்கள் என்ற கருத்து அதில் அடங்கியுள்ளது. எல்லோருமே நோயாளிகளாக இருந்தால் யார் நோயாளியாக இருக்கிறாரோ என்று பயன்படுத்த முடியாது.
இந்த வசனத்தைப் புரிந்து கொள்வது போல் தான் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இரண்டுமே ஒரே மாதிரியான நடையில் அமைந்த சொற்றொடர்களாகும் .
உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்றால் உங்களில் அம்மாதத்தை அடையாதவர்களும் இருப்பார்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.
இந்த வசனங்களில் மட்டுமின்றி திருக்குர்ஆனின் எந்த வசனங்களில் எல்லாம் யார் அடைகிறாரோ யார் போகிறாரோ என்பது போல் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அத்தனை இடங்களையும் இப்படித் தான் புரிந்து கொள்ள முடியும்.

நேர்வழி பெறுபவர்கள், பெறாதவர்கள் என இரு சாரார் இருக்கும் போது தான் யார் எனது வழியைப் பின்பற்றுகிறாரோ (திருக்குர்ஆன் 2:38) என்று கூற முடியும்.
ஹஜ்ஜை மேற்கொள்பவர்களும் ஹஜ்ஜை மேற்கொள்ளாதவர்களும் இருக்கும் போது தான் யார் ஹஜ்ஜை மேற்கொள்கிறாரோ (திருக்குர்ஆன் 2:197) என்று கூற முடியும்.
குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்பவர்களும் குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்ளாதவர்களும் இருக்கும் போது தான் யார் குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்ளவில்லையோ ((திருக்குர்ஆன் 2.196) என்று கூற முடியும்.

ஆக
# அம்மாதத்தை ஒருவர் அடைந்திருக்கும் போது மற்றவர் அடைந்திருக்க மாட்டார்.

# ஒருவர் ரமளானை அடைந்த பின் இன்னொருவர் ரமளானை அடைவார்.

இப்படி இருந்தால் மட்டுமே யார் ரமளானை அடைகிறாரோ என்று கூற முடியும்.

மேலும் சூரிய சந்திர கிரகணத்தில் புரிந்துகொண்ட நாம் :
எவரது மரணத்திற்காகவோ, பிறப்புக்காகவோ சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுவதில்லை. நீங்கள் சூரிய, சந்திர கிரகணங்களைக் கண்டால் அது விலகும் வரை தொழுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
நூல்: புகாரி 1042

"நீங்கள் சூரிய, சந்திர கிரகணங்களைக் கண்டால்" (இவ்விடத்தில் முழு உலகமும் என்று எடுத்துக்கொள்ளலாமா?....)
கிரகணம் ஏற்பட்டால் அந்த நேரத்தில் தொழுவது நபிவழி என்பதை மேற்கண்ட ஹதீஸ் கூறுகின்றது. இன்று அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்படுவதை நாம் தொலைக் காட்சியில் நேரடியாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

இப்போது நமது கேள்வி என்னவென்றால் அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் இந்தியாவில் கிரகணத் தொழுகை தொழ வேண்டுமா?

சந்திர கிரகணம் இரவு நேரத்தில் ஏற்படக் கூடியது. அமெரிக்காவில் கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் நாம் பகலில் சூரியனைப் பார்த்துக் கொண்டு இருப்போம். பகலில் சந்திர கிரகணத் தொழுகை தொழுதால் பைத்தியக்காரத் தனம் என்று தான் அதைக் கூற வேண்டும்.
விஞ்ஞான அடிப்படையிலும் சரி தகவல் அடிப்படையிலும் சரி உலகம் முழுவதும் ஒரே பிறை என்று வாதிடக்கூடியவர்கள் அமெரிக்காவில் தோன்றும் சந்திர கிரகணத்திற்கு இந்தியாவில் தொழ வேண்டும் என்று கூற மாட்டார்கள்.

1999ல் ஏற்பட்ட சூரிய கிரகணத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்தக் கிரகணம் முதன் முதலில் லண்டனில் தோன்றியது. சென்ற நூற்றாண்டின் இறுதிக் கிரகணம் என்பதால் உலகமெங்கும் இருந்து மக்கள் அந்தக் கிரகணத்தைக் காண லண்டனுக்குச் சென்றனர்.
லண்டனில் சூரிய கிரகணம் ஏற்படும் போது இந்திய நேரம் பிற்பகல் சுமார் 3 மணி. கிரகணத்தின் காரணமாக அங்கு இருட்டாகி இரவைப் போல் காட்சியளித்ததை பி.பி.சி தொலைக் காட்சியில் நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்தோம். அதே நேரத்தில் சென்னையில் சூரியன் ஒளிவீசிக் கொண்டிருந்தது. லண்டனிலிருந்து கிரகணம் படிப்படியாக துருக்கி ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து இறுதியில் சென்னையில் 6 மணியளவில் கிரகணம் ஏற்பட்டு விலகியது.

இப்படி ஊருக்கு ஊர் கிரகணம் வெவ்வேறு நேரங்களில் தோன்றியதை நாம் கண்கூடாகக் கண்டோம்.
கிரகணம் ஏற்படுவதாக முன் கூட்டியே கணித்துச் சொல்லப்பட்டு விட்டதால் உலகம் முழுவதும் கிரகணத் தொழுகையைத் தொழ வேண்டுமா? அல்லது கிரகணம் ஏற்பட்ட அந்த இடத்தில் மட்டும் தொழ வேண்டுமா?
இந்தக் கேள்வியைச் சிந்தித்தாலே உலகம் முழுவதும் ஒரே பிறை என்ற வாதம் அடிபட்டுப் போகும். சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கிரகணங்கள் ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் போது அதே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பிறையும் ஊருக்கு ஊர் மாறுபடும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
---------------------------------------

B:
மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: அபூ உமைர்
நூல்கள்: இப்னுமாஜா, அபூதாவூத், நஸயீயின்

பிறையைப் பார்த்துவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ஒரு கூட்டத்தினர் தெரிவிக்கிறார்கள். அந்தக் கூட்டத்தினர் மதீனாவுக்கு அருகில் உள்ள ஊரிலிருந்து நிச்சயம் வந்திருக்க முடியாது.
அருகில் உள்ள ஊரிலிருந்து வந்திருந்தால் பிறை பார்த்தவுடன் அன்றிரவே வந்திருக்க முடியும். இரவில் ஓய்வு எடுத்துக் கொண்டால் கூட அதிகாலையில் புறப்பட்டு முற்பகலில் வந்திருக்கலாம். ஆனால் இக்கூட்டத்தினர் பகலின் கடைசி நேரத்தில் வந்ததாக மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது. அஸரிலிருந்து மக்ரிபுக்குள் உள்ள நேரம் தான் பகலின் கடைசிப் பகுதியாகும்.

இவ்வளவு தாமதமாக வந்துள்ளார்கள் என்றால் அதிகமான தொலைவிலிருந்து பயணம் செய்து தான் இவர்கள் வந்திருக்க வேண்டும். நடந்து வந்த காரணத்தால் தாமதமாக வந்திருப்பார்களோ என்றும் கருத முடியாது. வாகனக் கூட்டம் என்று ஹதீஸில் தெளிவாகவே கூறப்படுகிறது. வாகனத்தில் வந்திருந்தும் மாலை நேரத்தில் தான் மதீனாவை வந்தடைகிறார்கள் என்றால் அவர்கள் மிகவும் அதிகமான தொலைவிலிருந்து தான் மதீனாவுக்கு வந்துள்ளனர் என்பது உறுதியான விஷயமாகும்.

எங்களுக்குப் பிறை தெரியாததால் நாங்கள் நோன்பு நோற்றோம் என்று தன்னிலையாக ஹதீஸ் ஆரம்பிக்கிறது.
வாகனக் கூட்டத்தினர் பகலின் இறுதிக் கட்டத்தில் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்று கூறுகிறார்கள்.
இவர்களது கூற்றை ஏற்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இட்ட கட்டளை எவ்வாறு அமைந்தது என்பது தான் கவனிக்க வேண்டிய, பலரும் கவனிக்கத் தவறிய அம்சமாகும்.

A -மேகம் காரணமாக எங்களுக்கு ஷவ்வால் பிறை தெரியவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். அப்போது ஒரு வாகனக் கூட்டத்தினர் பகலின் இறுதியில் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்றார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும் மறு நாள் பெருநாள் தொழுகை தொழுமாறும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

B - மேகம் காரணமாக எங்களுக்கு ஷவ்வால் பிறை தெரியவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக காலைப் பொழுதை அடைகிறோம். அப்போது ஒரு வாகனக் கூட்டத்தினர் பகலின் இறுதியில் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்றார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும் மறுநாள் பெருநாள் தொழுகை தொழுமாறும் மக்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

C - மேகம் காரணமாக எங்களுக்கு ஷவ்வால் பிறை தெரியவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக காலைப் பொழுதை அடைந்தோம். அப்போது ஒரு வாகனக் கூட்டத்தினர் பகலின் இறுதியில் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்றனர். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விடுமாறும் அவர்களது தொழும் திடலுக்கு அவர்கள் மறுநாள் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

இங்கே நாம் சுட்டிக்காட்டிய மூன்று வாக்கிய அமைப்புகளில் முதலிரண்டு அமைப்புகளில் இந்த ஹதீஸ் அமைந்திருந்தால் இவர்களின் வாதம் ஏற்கக் கூடியது தான். ஆனால் நாம் மூன்றாவதாகக் குறிப்பிட்ட அமைப்பில் தான் ஹதீஸ் அமைந்துள்ளது.
நாங்கள் நோன்பு நோற்றோம்.

எங்களை நோன்பை விடச் சொன்னார்கள் என்றால் வெளியூர் சாட்சியத்தை ஏற்று உள்ளூர் மக்களை நோன்பை விடச் சொன்னார்கள் என்று வாதிடலாம்.
அல்லது மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று கூறப்பட்டிருந்தால் வெளியூர் கூட்டம் வந்து அளித்த சாட்சியத்தை ஏற்று எல்லா மக்களையும் நோன்பை விடச் சொன்னார்கள் என்று வாதிடலாம்.

எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்றும் கூறாமல்
மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்றும் கூறாமல்
யார் சாட்சியம் அளித்தார்களோ அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது
தங்கள் ஊரில் பிறை பார்த்த பிறகும் பெருநாள் தொழுகையைத் தொழாமல், நோன்பையும் பிடித்துக் கொண்டு மார்க்கத் தீர்ப்பு பெறுவதற்காக இவர்கள் வந்துள்ளனர். பிறை பார்த்த பின்பும் நோன்பு நோற்றதும், பெருநாள் தொழுகையை விட்டதும் சரியில்லை என்பதால் அவர்களது நோன்பை முறிக்குமாறு அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அவர்களது தொழும் திடலுக்கு மறு நாள் செல்லுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்றால் கட்டளை யாருக்கு என்பது தெளிவாகவே விளங்குகிறது. பிறை பார்த்தவர்களுக்குத் தான் அந்தக் கட்டளையே தவிர பிறை பார்க்காமல் மேக மூட்டம் காரணமாக முப்பதாம் நோன்பு வைத்த உள்ளூர் மக்களுக்கு அல்ல!
அவர்களுக்கும் எங்களுக்கும் கட்டளையிட்டார்கள் என்று கூட ஹதீஸில் கூறப்படவில்லை.

நாங்கள் என்று இவ்வாசகம் ஆரம்பமாகிறது. நாங்கள் என்று யார் கூறுகிறார்களோ அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தால் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று கூறப்பட்டிருக்கும். கூறப்பட்டிருக்க வேண்டும்.
இரண்டு சாராருக்கும் கட்டளையிட்டிருந்தால் எங்களுக்கும் அவர்களுக்கும் கட்டளையிட்டார்கள் என்று கூறப்பட்டிருக்கும்.

நாங்கள் அவர்கள் என்று இரு சாரார் பற்றிக் கூறும் போது அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று கூறினால் நாங்கள் எனக் கூறியவர்களை அது கட்டுப்படுத்தாது என்பது யாருக்கும் தெரிந்த உண்மை!
---------------------------------------
C:
உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் என்னை சிரியாவிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித்தேன். நான் சிரியாவில் இருக்கும் போது ரமளானின் தலைப்பிறை தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் பி
றையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் மதீனாவுக்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் (பயணம் குறித்து) விசாரித்தார்கள். பின்னர் பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்?'' என்று (என்னிடம்) கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம்'' என்று கூறினேன். நீயே பிறையைப் பார்த்தாயா?'' என்று கேட்டார்கள். ஆம், (நான் மட்டுமல்ல) மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள்'' என்று கூறினேன். அதற்கவர்கள் ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில் தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம்'' என்றார்கள். முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்குப் போதாதா?'' என்று கேட்டேன். அதற்கவர்கள், போதாது! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: குரைப்
நூல்: முஸ்லிம்

தானும் பிறை பார்த்து முஆவியாவும் பார்த்து மக்களும் பார்த்த விபரத்தை குரைப் கூறுகிறார். இதற்குப் பிறகும் இப்னு அப்பாஸ் (ரலி) ஏற்க மறுக்கிறார்கள். எங்கள் பகுதியில் பிறையை நாங்கள் காண வேண்டும். இல்லாவிட்டால் முப்பது நாட்கள் என்று முடிவு செய்து கொள்வோம் என்று விடையளிக்கிறார்கள்.

இவ்வளவு பேர் பார்த்திருக்கிறோமே அது போதாதா என்று கேட்டதற்கு போதாது என்று விடையளித்து விட்டு இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர் எனக் காரணத்தைக் கூறுகிறார்கள்.
குரைபுடைய கேள்வியே பெருநாளைப் பற்றியது தான். முஆவியா (ரலி) பிறை பார்த்த அடிப்படையில் முப்பது நாட்கள் பூர்த்தியாகின்றதே! அது உங்களுக்குப் போதாதா? என்ற கருத்தில் தான் குரைப் கேட்கிறார். அதற்குத் தான் இப்னு அப்பாஸ் (ரலி) போதாது. இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்று கூறுகின்றார்கள்.

மதீனாவை விட சிரியாவில் ஒரு நாள் முன்னதாக பிறை பார்த்திருக்கிறார்கள். சிரியாவில் முப்பது நாட்களைப் பூர்த்தி செய்யும் போது மதீனவில் 29 நாட்கள் தான் பூர்த்தியாகியுள்ளது. சிரியாவில் பெருநாள் என்று உறுதியாகத் தெரிந்த பின்னரும் இப்னு அப்பாஸ் (ரலி) அதை ஏற்றுக் கொள்ளாமல், எங்களுக்கு 29 நாட்கள் தான் ஆகிறது. எனவே நாங்கள் பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்கள் பூர்த்தியாகும் வரை நோன்பு நோற்போம்' என்று கூறுகின்றார்கள்.

சிரியாவில் முப்பது நாட்கள் முழுமையாகி விட்டது என்று குரைப் வந்து நேரடியாகக் கூறுவது தொலைத் தொடர்பு சாதனங்களில் கேட்பதை விட உறுதியான விஷயம். அதை இப்னு அப்பாஸ் (ரலி) மறுக்கின்றார் என்றால் தெலை தூரத்தில் பிறை பார்க்கப்பட்டால் அதை ஏற்கக் கூடாது என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரியவில்லையா?
---------------------------------------

D:
ரமளானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு மக்களுக்குக்
கட்டளையிட்டனர். பெருநாள் தொழுகை தொழும் திடலுக்குச் செல்லுமாறும் கட்டளையிட்டனர்.
அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ்
நூல்: அபூதாவூத்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதம் முப்பதாம் நாள் சுப்ஹ் வேளையை அடைந்தார்கள். அப்போது இரு கிராமவாசிகள் வந்து வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று உறுதி கூறி நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ்
நூல்: தாரகுத்னீ

இங்கே கிராம வாசிகள் (அஃராபிகள்) வந்து சாட்சி கூறியதாகக் கூறப்பட்டுள்ளது. அஃராபிகள் என்றால் யார்?
ஒரு நகரத்தைச் சுற்றி வாழ்பவர்கள், எல்லா முக்கியத் தேவைகளுக்கும் அந்த நகரத்தையே சார்ந்திருப்பவர்கள் ஆகியோரே அஃராபிகளாவர். கிராமப்புறத்தார்கள் என்று தமிழ்ப்படுத்தலாம்.

இவர்கள் அதிகாலையிலேயே வந்து தகவல் கூறி விட்டதால் தொலைவிலிருந்து வரவில்லை. அருகிலிருந்து தான் வந்தனர் என்பது தெரிகிறது.
பயணக் கூட்டம் சம்பந்தமான ஹதீஸில் உள்ளது போல் இவர்கள் தொலைவிலிருந்து வரவில்லை.

# வாகனத்தில் வரவில்லை

# பகலின் கடைசி நேரத்திலும் வரவில்லை.

ஒரு வேளை மதீனாவில் ஜும்ஆ தொழும் இவர்கள் பெருநாள் தொழுவதற்காக மதீனா வந்திருக்கவும் அங்கே நோன்பு வைத்திருப்பதைக் கண்டதும் பிறை பார்த்த செய்தியைச் சொல்லி இருக்கவும் சாத்தியமுள்ளது.
இந்தச் சாத்தியத்தை ஏற்காவிட்டாலும் அஃராபுகள் என்போர் மதீனா நகரைச் சுற்றி வாழ்ந்த கிராமத்தார்கள் தான் என்பதை மறுக்க முடியாது.

இவ்வாறு ஒவ்வொரு நகரத்தைச் சுற்றியும் அஃராபுகள் வாழ்ந்தாலும் மதீனாவுக்கு வந்தவர்கள் மதீனாவைச் சுற்றி வாழ்ந்தவர்களே.

இந்த விபரங்களைக் கவனத்தில் கொண்டு ஆராய்ந்தால் இரண்டு நிகழ்ச்சிகளும் முரண்பட்டவையல்ல என்று பிரித்தறியலாம்.

கிராமப்புறங்கள் அந்தந்த நகர்ப்புறங்களின் ஒரு பகுதியாகும். எனவே நகரத்தில் காணப்படும் பிறை சுற்றியுள்ள கிராமங்களையும், சுற்றியுள்ள கிராமங்களில் காணப்படும் பிறை நகரத்தையும் கட்டுப்படுத்தும்.
இவ்வாறு பொருள் கொண்டால் இரண்டுக்கும் எந்த முரண்பாடும் இல்லை.

முந்தைய நிகழ்ச்சி தூரத்தில் உள்ள வெளியூரிலிருந்து வந்த தகவலை ஏற்கலாகாது எனக் கூறுகிறது. பிந்தைய நிகழ்ச்சி ஓர் ஊரை ஒட்டிய கிராமத்தார் பிறை பார்ப்பது அந்த ஊரையும் கட்டுப்படுத்தும் என்பதைக் கூறுகிறது.
ஓர் ஊரைச் சுற்றியுள்ள கிராமங்கள் என்றால் எத்தனை கிலோமீட்டர் தொலைவு என்று கேட்கலாம். கிலோ மீட்டரில் அளந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. அதை நாமே தீர்மானம் செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
---------------------------------------

E:
அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1909

மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1907

உலகில் எங்காவது பார்த்தால் போதும் என்றால் இந்த பிற்பகுதி தேவையில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் எப்போதும் மேகமாக இருக்காது. எங்காவது மேகமில்லாத பகுதி இருக்கும். அங்கே பார்த்து உலகுக்கு அறிவிக்கலாம். உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் என்ற வாசகம் ஒவ்வொரு பகுதியிலும் பிறை பார்க்க வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கியே நிற்கிறது.

எனவே மேற்கண்ட ஹதீஸின் பொருள் இது தான். ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பிறை பார்த்து நோன்பு வைக்க வேண்டும். பிறை பார்த்து நோன்பை விட வேண்டும். மேகமூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ள வேண்டும்.
மதீனாவைச் சுற்றிலும் உஹது போன்ற பெரும் மலைகள் இருந்தன. அம்மலைகளின் உச்சியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டும் வந்தது. அப்படியிருந்தும் மேகமூட்டம் ஏற்படும் நாட்களில் பிறை தென்படுகிறதா என்று மலையின் மீது ஏறித் தேடிப் பார்க்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. கட்டளையும் இடவில்லை ஆர்வமூட்டவுமில்லை.

மேக மூட்டமாக இருந்தால் அந்த நாளை முப்பதாவது நாளாகக் கருதிக் கொள்ளுங்கள் என்று எளிமையான தீர்வை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டார்கள்.
பிறை வானில் இருக்கிறதா இல்லையா என்று அலட்டிக் கொள்ள வேண்டாம். உண்மையில் வானில் பிறை இருந்து அதை மேகம் மறைத்திருந்தால் கூட அம்மாதத்தை முப்பது நாட்களாகக் கருதிக் கொள்ளுங்கள் என்று கூறி பிறை பார்க்க வேண்டியதன் அவசியத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தி விட்டார்கள்.

சுற்றி வளைத்து ஏதேதோ விளக்கம் கூறுவதை விட இந்த ஹதீஸ் கூறுகின்ற தெளிவான கட்டளையை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதற்கு எந்த வியாக்கியானமும் கூற முடியாது.

ஒவ்வொரு பகுதியிலும் பிறை காணப்பட வேண்டும். காணப்பட்டால் அடுத்த மாதம் ஆரம்பமாகி விட்டது. காணப்படா விட்டால் அம்மாதத்திற்கு முப்பது நாட்களாகும் என்பது எவ்வளவு தெளிவான சட்டம்.
மேக மூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்படாமல் போகலாம். அப்போது அலட்டிக் கொள்ளக் கூடாது. அடுத்த மாதம் பிறக்கவில்லை என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.

தத்தமது பகுதியில் பிறை பார்க்காமல் எங்கோ பிறை பார்த்த செய்தியை ஏற்று நோன்பு நோற்பவர்களுக்கு இந்த ஹதீஸ்கள் மறுப்பாக அமைந்துள்ளன.
பிறை பார்க்கத் தேவையில்லை. நாம் வானியல் அறிவின் துணை கொண்டு கணித்து விடலாம் என்று வாதிடக் கூடியவர்களுக்கும் இந்த ஹதீஸ் மறுப்பாக அமைந்துள்ளது.
---------------------------------------

F:
மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி - 1907

இந்த நபிமொழியும் தலைப்பிறையைத் தீர்மானிப்பதற்குரிய ஆதாரங்களில் முக்கியமானதாகத் திகழ்கிறது.

இந்த நபிமொழியின் கருத்துப்படி எந்த மாதத்துக்கும் 28 நாட்களோ அல்லது 31 நாட்களோ இருக்க முடியாது. மாதத்தின் குறைந்த பட்ச அளவு 29 நாட்கள்; அதிகபட்ச அளவு 30 நாட்கள்; இதைத் தவிர வேறில்லை. நோன்பின் எண்ணிக்கை 29ஐ விடக் குறைவாகவோ, 30ஐ விட அதிகமாகவோ இருக்கக் கூடாது என்பதை மேற்கண்ட நபிமொழி கூறுகிறது.

ஒருவர் எடுக்கும் ஒரு முடிவின் காரணமாக ரமளான் மாதத்துக்கு 28 நோன்பு என்ற நிலை வருமானால் அல்லது 31 நோன்பு என்ற நிலை ஏற்படுமானால் நிச்சயமாக அந்த முடிவு தவறான முடிவாகத் தான் இருக்க முட

Address

343 B, Mainstreet
Kinniyai
31100

Alerts

Be the first to know and let us send you an email when KINNIYAN MAIL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KINNIYAN MAIL:

Share