SL BATTI NEWS$

SL BATTI NEWS$ SL BATTI NEWS
social service
(1)

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (07) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்துள்ளார்.குற்றப் புலனாய்வுப் ப...
07/04/2025

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (07) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்துள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட டெய்சி பாரஸ்ட் அல்லது டெய்சி பாட்டி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று அழைக்கப்பட்டதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ச, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுவது சாதாரண விடயமாகி விட்டது எனவும் தெரிவித்திருந்தார்.

2024.09.24 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் திரு. துமிந்த ஹூலங்கமுவ பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதிதொடர்பான ஜனாதிபத...
02/10/2024

2024.09.24 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் திரு. துமிந்த ஹூலங்கமுவ பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதிதொடர்பான ஜனாதிபதி ஆலோசகராகவும் மற்றும் கலாநிதி. ஏ.ஏ.ஜே. பர்னாந்து பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதிதொடர்பான ஜனாதிபதி ஆலோசகராக கௌரவ சேவைஅடிப்படையில் நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக (30.09.2024) நடைபெற்ற அமைச்சரவையில் உடன்பாடுதெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 41 ஆவதுஉறுப்புரையின் (01) ஆம் உப உறுப்புரையில் அதிகாரமளிக்கப்பட்டதன் பிரகாரம் அமைச்சரவையின் கருத்துக்களைக் கேட்டறிந்து தனது பணிக்குழாமினரை நியமிப்பதற்கானஅதிகாரம் ஜனாதிபதி ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான திருமதி பி.எம்.டி நிலுஷா பாலசூரியவை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்ட...
01/10/2024

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான திருமதி பி.எம்.டி நிலுஷா பாலசூரியவை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக உடனடியாக நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு தலைமையதிபதியாகப் பணியாற்றிய திரு. ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய அவர்கள் 2024.09.25 ஆம் திகதி முதல் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தடுப்புக் காவலில் இருப்பதால், குறித்த பதவியில் பணிகளை நிறைவேற்றுவதற்கு உடனடியாக பொருத்தமான அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டியுள்ளது. அதற்கமைய, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக தற்போது கடமையாற்றி வருகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர உத்தியோகத்தரான திருமதி. பீ.எம்.டீ. நிலுஷா பாலசூரிய அவர்களை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பதவிக்கு பதில்கடமைக்கு நியமிப்பதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

கரஸ்னாகலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நீரை விநியோகிக்கும் பிரதான குழாயின் திருத்தப் பணிகள் காரணமாக இன்று இரவு...
01/10/2024

கரஸ்னாகலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நீரை விநியோகிக்கும் பிரதான குழாயின் திருத்தப் பணிகள் காரணமாக இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (02) இரவு 10.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என்று நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி பஸ்யால, கலல்பிட்டிய, எல்லேருமுல்ல, வத்துபிட்டிவல, மாஒம்புல, அத்தனகல்ல, கொடகம, அலவல, ஊரபொல, திக்கந்த, வல்கம்முல மற்றும் மிடிகம்மான ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும், தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறும் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை 1939 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னைக்கும் யாழ். பலாலிக்குமிடையேயான இண்டிகோ (Indigo) ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய விமான சேவை நேற்று (01) முதல் ஆரம்ப...
02/09/2024

சென்னைக்கும் யாழ். பலாலிக்குமிடையேயான இண்டிகோ (Indigo) ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய விமான சேவை நேற்று (01) முதல் ஆரம்பமாகியது.

நேற்று முதல் தினந்தோறும் சென்னையிலிருந்து யாழ். பலாலிக்கு விமான சேவை நடத்தப்படவுள்ளதாக இண்டிகோ ( Indigo ) ஏயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது யாழ். பலாலிக்கு தினசரி விமான சேவையை இந்தியாவின் அலையன்ஸ் ஏயார் விமானம் ( Alliance Air ) நடத்துகிறது.

சென்னையில் இருந்து பயணத்தை ஆரம்பித்த விமானமானது 52 பயணிகளுடன் நேற்று பிற்பகல் 3.07 மணியளவில் பலாலியை வந்தடைந்தது. இதன்போது இனியம் இசைக்க விருந்தினர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து வருகை தந்த பயணிகள் அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் பலாலியில் இருந்து சென்னை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. பலாலியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் 74 பயணிகள் பயணத்தை மேற்கொண்டனர். விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் யாழ்ப்பாண உற்பத்திகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். இந்திய துணை தூதுவர் சாய் முரளி, விமானப்படை அதிகாரிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், பதவிநிலை அதிகாரிகள், பயணிகள் என பலர் கலந்து கொண்டனர்.

காலாவதி தேதி இல்லாத கனரக வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு முதல் புத...
27/08/2024

காலாவதி தேதி இல்லாத கனரக வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு முதல் புதிய உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (டிஎம்டி) தெரிவித்துள்ளது.

புதிய அனுமதிப் பத்திரங்களைப் பெறுவதற்கு போதிய கால அவகாசம் வழங்கப்படும் எனத் தெரிவித்த DMT ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க, புதிய அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்கு பழைய சாரதி அனுமதிப்பத்திரமும் மருத்துவச் சான்றிதழும் போதுமானது எனவும் தெரிவித்தார்.

தற்போது 1.1 மில்லியன் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரங்கள் காலாவதியாகாத நிலையில், சாதாரண வாகனங்களுக்கு 1.2 மில்லியன் அனுமதிப்பத்திரங்கள் இருப்பதாக வீரசிங்க தெரிவித்தார்.

காலாவதி தேதிகள் இல்லாத சாரதிகளுக்கு புதிய உரிமம் பெற ஆறு மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

"சகல அரசாங்க ஊழியர்களுக்கும் 25000 ரூபா கொடுப்பனவே 3 வருடங்கள் முழுவதும் வழங்கப்படும். கனிஷ்ட தரத்திலான சேவையாளர்களுக்கு...
19/08/2024

"சகல அரசாங்க ஊழியர்களுக்கும் 25000 ரூபா கொடுப்பனவே 3 வருடங்கள் முழுவதும் வழங்கப்படும். கனிஷ்ட தரத்திலான சேவையாளர்களுக்கும் ஆகக் குறைந்த சம்பளமாக 55000 ரூபா அல்லது அதற்கு மேல் அதிகரிக்க முடியும்."

அரசாங்க தகவல் திணைக்களத்தில் (18) இடம்பெற்ற விசேட செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் பேராசிரியர் பந்துல குணவர்தன அரசாங்க சேவையின் அதிக சம்பள உயர்விற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் தொடர்பாக இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளர்;

"அமைச்சரவை அனுமதி கிடைத்த அரசாங்க சேவை சம்பள உயர்வுக்கான யோசனை சர்வதேச நாணய நிதியத்தின் ஒதுக்கீட்டிற்கு இணங்க மூன்று வருடங்கள் மாற்றம் அடையாமல் காணப்படுகின்றது. எந்த அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைக்கு அமைய செயற்பட வேண்டும். வரவு செலவுத் திட்டத்திற்காக இந்த சம்பள அதிகரிப்பு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

ஆனால் ஊடகம் ஒன்று இதனை சரியாக பிரசுரிக்கவில்லை. அமைச்சரவையில் வாழ்க்கைச் செலவு தொடர்பாக முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தவறான முறை என சமூக மயப்படுத்தப்படுமாயின் அதனை சரிப்படுத்துவதற்கு அமைச்சரவைப் பேச்சாளராக எனக்குக் கடமையும் பொறுப்பும் உள்ளது.

அமைச்சரவை பத்திரத்தை வெளியில் கொண்டு செல்ல முடியாது அது இரகசியமானது. அவற்றை வெளியில் கொண்டு செல்வதில்லை. அமைச்சின் செயலாளர்களுக்கு அவற்றின் பிரதிகள் அனுப்பப்படும்.

அமைச்சரவைப் பேச்சாளர் என்ற ரீதியில் தான் செயற்படுகின்றேன். அச்செயற்பாடுகளின் போது ஊடகவியலாளர்களுடன் பொறுப்புடன் செயற்பட்டேன். தன்னால் மேற்கொள்ளப்படும் வெளியீடுகள் அரசியலமைப்புக்கு இணங்க சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் வெளியிடப்படுவதுடன், அவை ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்படும். அவை பேராசிரியர் பந்துல குணவர்தன வெளியிட்டவை அன்றி தான் வழங்கும் தகவல்கள் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களையே ஆகும்.

நீண்ட காலமாக அடிப்படைச் சம்பளம் சரி செய்யப்படாமையினால் அடிப்படைச் சம்பளத்தை அதிகரித்தல் மற்றும் 25000 ரூபா வீதம் வாழ்க்கை செலவுக் கொடுப்பனவை மூன்று வருடங்கள் பிரிக்காது வழங்கக் கூடியதாக இருந்தது என அவர் வலியுறுத்தினார்.

இந்தத் தீர்மானத்தை அறிவித்ததன் பின்னர் சில ஊடக நிறுவனங்கள் அதன் ஒரு பகுதியை மாத்திரம் சமூக மயப்படுத்தி இருந்தது.

இதன் போது அதிகமானவர்கள் அடிப்படைச் சம்பளம் தொடர்பாக அன்றி 25,000ரூபா குறித்து மாத்திரமே தகவல் வெளியிட்டார்கள் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தை கொண்டு நடாத்துதல் மற்றும் அரசியல் செய்தல் என்பது இரண்டு விடயங்கள். தற்போது நிதி அமைச்சர் வரவு செலவுத் திட்ட அறிக்கையை தயாரித்துள்ளது.

அதற்கு உள்ளடக்குவதற்காக அமைச்சரவை அறிவித்தலை சரி செய்ய வேண்டும். சகல அரசாங்க ஊழியர்களுக்கும் 25,000 ரூபா கொடுப்பனவை திருத்தப்படாத மூன்று வருடங்களுக்கும் வழங்க வேண்டி ஏற்பட்டுள்ளது என அவர் விவரித்தார்.

அத்துடன் அடிப்படைச் சம்பள திருத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால் நூற்றுக்கு 255.35 அளவில் அதிகரிக்கும். கனிஷ்ட ஊழியர்களுக்கு ஆக குறைந்தது மாதத்திற்கு 55000 ரூபாய் அல்லது அதைவிட அதிகமான தொகை கிடைக்கும்.

2027 வரை வரவு செலவுத் திட்டத்திற்காக பற்றாக்குறையாகவும் நிதி ஒதுக்கீட்டின் அளவை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களில் கையொப்பமும் இடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் சர்வதேச நானே நிதியத்தினால் திருத்தப்பட்ட அல்லது நானே நிதியத்தின் செயல்பாடுகள் அவ்வாறே தொடர்ந்தும் இடம்பெறும்.

சம்பள அதிகரிப்பு யோசனை சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக வழங்கப்படுவதாகவும், இந்த சம்பள கொடுப்பனவிற்கு போதிய நிதி காணப்படுகின்றது மையினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நிதி முகாமைத்துவ பொறுப்புக்கள் தொடர்பான சட்டமும் காணப்படுகிறது." என்றும் அமைச்சர் மேலும் தெளிவு படுத்தினார்

அரசாங்க சேவையின் ஆரம்பப் பிரவு தவிர ஏனைய சகல சேவைப் பிரிவுகளுக்கும் முறையான போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை ஊ...
14/08/2024

அரசாங்க சேவையின் ஆரம்பப் பிரவு தவிர ஏனைய சகல சேவைப் பிரிவுகளுக்கும் முறையான போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை ஊடாக மாத்திரமே அரச சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட வேண்டும் என சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அரசாங்க சேவையில் ஆரம்ப சேவைப் பிரிவிற்காக உள்வாங்குவதற்கான தகைமையாக இலங்கை உடற்தகுதி வழிகாட்டி மற்றும் தொழில் நிபுணத்துவம் என்பவற்றின் அடிப்படையில் சேவைத் தேவைக்கேற்ப தகுதியானவர்களைத் தெரிவு செய்யும் முறையைப் பின்பற்றுவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன மேலும் சுட்டிக்காட்டினார்.

கண்டியில் நடைபெறவுள்ள எசல பெரஹெர திருவிழாவை முன்னிட்டு எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை பகல் இரவு சேவையாக வி...
10/08/2024

கண்டியில் நடைபெறவுள்ள எசல பெரஹெர திருவிழாவை முன்னிட்டு எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை பகல் இரவு சேவையாக விசேட பஸ் சேவையொன்றை நடாத்துவதற்கு இலங்கை போக்குவரத்து சபை ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி கண்டி மாவட்டத்தை உள்ளடக்கிய வகையில் 438 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை ஏற்பாடுகளை செய்துள்ளது.

கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் எசல பெரஹரா திருவிழாவின் முதலாவது கும்பல் பெரஹெர இன்று (10) ஆரம்பமாகவுள்...
10/08/2024

கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் எசல பெரஹரா திருவிழாவின் முதலாவது கும்பல் பெரஹெர இன்று (10) ஆரம்பமாகவுள்ளது.

கும்பல் பெரஹர எதிர்வரும் 14ம் திகதி வரை வீதி உலா வர உள்ளது.

முதலாவது ரந்தோலி பெரஹெர ஆகஸ்ட் (15) அன்று ஆரம்பமாகவுள்ளது.

அன்றைய தினம் முதல் 5 நாட்களுக்கு பெரஹெர நிகழ்வுகள் இடம்பெறும். கடைசி பிரமாண்ட ஊர்வலம், 19ஆம் திகதி நடைபெறும்.

பொது மக்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கும் நோக்கில், இலங்கை சதொச நிறுவனமானது, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை...
10/08/2024

பொது மக்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கும் நோக்கில், இலங்கை சதொச நிறுவனமானது, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விலை குறைபானது நேற்று (09) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.



அதற்கமைய, ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனி 249 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் கீரி சம்பா 248 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட) 230 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் வெள்ளை கெளப்பி 978 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் இந்திய பெரிய வெங்காயம் 255 ரூபாவாகவும் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.



மேலும், ஒரு கிலோ கிராம் பாசிப்பயறு 935 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் சிவப்பு கெளப்பி 920 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் பருப்பு 280 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் காய்ந்த மிளகாய் 790 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் நெத்தோலி கருவாடு 940 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் .பச்சரிசி உள்நாட்டு 202 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் கடலை 442 ரூபாவாகவும் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

‘யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா – 2024’ நேற்று (09/08/2024) காலை யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் ஆரம்பமாகியுள...
10/08/2024

‘யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா – 2024’ நேற்று (09/08/2024) காலை யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் 11ஆம் திகதி வரை தினமும் காலை 10.00 மணிமுதல் மாலை 8.00 மணிவரை இந்த புத்தகக்கண்காட்சியும் விற்பனையும் நடைபெற உள்ளது.

யாழ்ப்பாண தொழில்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழாவில் இருபதுக்கும் மேற்பட்ட புத்தக விற்பனை நிலையங்கள், வெளியீட்டகங்கள், புத்தகங்கள் சார் அமைப்புக்கள் பங்குபற்றுகின்றன. இலங்கையிலிருந்து மட்டுமல்லாமல் உலகின் பலவேறு நாடுகளில் இருந்தும் வெளிவரும் புத்தகங்கள் இந்தக் கண்காட்சியில் விற்பனை செய்யப்பட உள்ளன. எமது சமூகத்தில் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், எழுத்தாளர்களை வெளிக்கொண்டுவரும் வகையிலும், எழுத்தாளர்கள் வாசகர்கள் சந்திப்புக்கான களமொன்றை உருவாக்கும் வகையிலும் யாழ்ப்பாண புத்தகத் திருவிழா 2024 இனை யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றம் ஒழுங்குசெய்துள்ளது.

அதுமட்டுமன்றி யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா இனி ஒவ்வொருவருடமும் இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. குழந்தைகள், சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் முதியோர் என அனைத்து தரப்பினருக்குமான புத்தகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

Address

Kotte

Website

Alerts

Be the first to know and let us send you an email when SL BATTI NEWS$ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SL BATTI NEWS$:

Share