10/01/2025
🌴🌷🌴✋😇🤚🌴🌷🌴
*🌴 எல்லாம் இன்பமயம் 🌴*
*🌴🌷🌴மகரயாழ்🌴🌷🌴*
*(10.01.2025)*
*༺🌷༻*
*🌸🌼🌿நிறையுடைமை நீங்காமை வேண்டின்...*
*༺🌷༻*
சாது ஒருவர், பல வருடங்களுக்கு மேலாக ஊரை விட்டு ஒதுங்கி அமைதியான சூழலில், தனிமையில் மலை மேல் சென்று தவத்தில் இருந்து வந்தார்!!
அங்கு அவரை காண வந்த ஊர் முக்கியஸ்தர்கள், ஊர் கோவில் விழாவில் கலந்து கொள்ள வரச் சொல்லி அவரை வேண்டினர்!! அவர்களின் அழைப்பை ஏற்று துறவியும் மலை அடிவாரத்தின் கீழே அமைந்திருந்த அந்த மகரயாழ் ஊருக்கு வந்திருந்தார்....
*༺🌷༻*
கோவில் விழாவில் கடுமையான கூட்டம்!! கூட்டத்தில் யாரோ ஒருவர், தவறுதலாக சாதுவின் கால்களை மிதித்துவிட்டார்!! வலியினால் கோபமடைந்த சாது தன்னை மறந்து, நிதானத்தை இழந்து, தன் காலை மிதித்தவரை கண்டபடி வார்த்தைகளால் வசைப்பாடி தீர்த்தார்!! தவறுதலாக துறவியின் கால்களை மிதித்துவிட்ட அந்த பக்தர், துறவியின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோரினார்....
சிறிது நேரத்திற்கு பின்னர்
நிதானத்திற்கு வந்த துறவி, தன்னுடை பலவருட தவத்தின் பலனை இப்படி கோபமடைந்து சிதற விட்டோமே என்று எண்ணி வருத்தமடைந்தார்!!
*༺🌷༻*
இந்த சமூகம்தான்,
உங்கள் உள்தன்மையின்.... உண்மைத்தன்மையின்... உரைக்கல், என்பதை நினைவில் கொள்ளுங்கள்!!
உங்களையே - நீங்கள் நேர்மையாக பரிசோதனை செய்ய இந்த சமூகம் என்கிற சந்தைகடைதான் சரியான சூழல்!! தவத்தின் உண்மை தன்மை என்பது காடுகளிலும், மலைகளிலும் தான் நிகழ்ந்தாக வேண்டும் என்பதல்ல!!
சந்தைப்பேட்டையிலும் தியானிக்கலாம்!!
🤘 ~ ஓஷோ
*༺🌷༻*
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.
🌻 ~ திருக்குறள்
(நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி வாழ வேண்டும்.)
✒️ ~ மனோரஞ்சிதா, ஆசிரியை
சத்தியமங்களம்
💐நன்றி🙏