02/09/2026
- #சவால்களைத்_தாண்டி
#சாதனையை_நோக்கி...!🏆🏆🏆🏆
பரகஹதெனிய தேசிய பாடசாலை பிறவியிலேயே பலவீனமும், பின் தங்கிய நிலையும் கொண்ட ஒரு கல்வி நிறுவனமல்ல.மாறாக அது பெருமைமிக்க வரலாற்றையும், பல திறமைமிக்க சமூகப் தலைவர்களையும் உருவாக்கிய பெருமைக்குரிய ஒரு தாய் பாடசாலையாகவே திகழ்ந்தது.
🔴கடந்த கால பின்னடைவுக்கான முதன்மை காரணங்கள்🔴
கடந்த காலங்களில் இப்பாடசாலையின் கல்வி மற்றும் ஒழுக்க நிலைகளில் தொய்வு நிலை ஏற்படுவதற்குப் பின்வரும் நிருவாக மற்றும் சமூக ரீதியான குறைபாடுகளே பிரதான காரணங்களாக அமைந்தன.
👉முறையற்ற நிர்வாகமும் ஆதிக்கப்போக்கும்
காலத்திற்குக் காலம் மாறிய நிருவாக முறைமை, தன்னிச்சையான முடிவுகள், அகம்பாவம், முன்கோபம் மற்றும் சுயநலம் என்பன பாடசாலையின் சீரான வளர்ச்சியைப் பெரிதும் பாதித்தன.
👉அதிகார அத்துமீறல்களும் அரசியல் தலையீடுகளும்
சந்தர்ப்பவாத அரசியலின் தாக்கம் மற்றும் அதிகாரப் பலத்தைப் தவறாகப் பயன்படுத்திய சில அரைவேக்காடுகளின் அத்துமீறிய செயற்பாடுகள் கல்விச் சூழலைச் சீர்குலைத்தன.
👉உள்வீட்டுப் போட்டியும் காழ்ப்புணர்ச்சியும்
ஆரோக்கியமற்ற போட்டி, பொறாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி என்பன பாடசாலையின் கூட்டு முயற்சியையும், ஆசிரிய-மாணவர் உறவையும் பாதித்து கல்வி நடவடிக்கைகளைத் திட்டமிட்ட அடிப்படையில் பின்தள்ள வழிவகுத்தன.
🏆வரலாற்றுச் சாதனையுடன் கூடிய புதிய திருப்பம் (2026)♥️
அத்தகைய சவால்கள், அகங்காரப் போக்குகள் மற்றும் தடைகள் அனைத்தையும் முறியடித்து, பரகஹதெனிய தேசிய பாடசாலை இன்று தனது உண்மையான திறனை வெளிப்படுத்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
🏆 22 மாணவர்கள் சாதனை
2026 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின்படி, இப்பாடசாலையின் வரலாற்றிலேயே முதன்முறையாக 22 மாணவர்கள் வெட்டுப்புள்ளியைத் தாண்டி சாதனை படைத்துள்ளனர்.
கடந்த காலத்தில் நிலவிய நிருவாகச் சீர்கேடுகளையும் பின்னடைவுகளையும் தாண்டி, மாணவர்கள் தங்களது அர்ப்பணிப்பினாலும் சரியான வழிகாட்டலினாலும் பாடசாலைக்கு மீண்டுமொரு பொன் மகுடத்தை👑 சூடியுள்ளனர்.
இத்தகைய சாதனையைக் கைவரப் பெற்று, பாடசாலையின் புகழை மீண்டும் நிலைநாட்டிய அனைத்து மாணவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும், ஊர் மக்களுக்கும் கிராம மக்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள்!
எழுத்தாக்கம்
நன்றிகள்
- Rizkhan SJ
Proud Pns 🎊👏
Congratulations 🤩💖