Ezhumin News

Ezhumin News wellcome to the official page of the Ezhumin news.

இணைய ஊடகத்தின் இணையில்லா தலைவன்.
(3)

உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை எமது எழுமின் செய்திகள் தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

நம்பகமான செய்திகளை நேயர்களுக்கு விரைவாகவும் தெளிவாகவும் கொண்டு சேர்ப்பதே எமது நோக்கம்.

சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு கௌரவம்யாழ்ப்பாணம் நல்லூரில் நடைபெற்ற முதலாவது சர்வதேச சைவ மாநாட்டில், சிரேஷ்ட ஊடகவியலாளர் மற்றும...
19/08/2026

சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு கௌரவம்

யாழ்ப்பாணம் நல்லூரில் நடைபெற்ற முதலாவது சர்வதேச சைவ மாநாட்டில், சிரேஷ்ட ஊடகவியலாளர் மற்றும் அறிவிப்பாளர் இராமன் கேதீஸ்வரனுக்கு சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

09/08/2026

MEGA SALE 🔥
தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் கோயில் மண்டபத்தில்..!

👟 பாதணிகள் | 🎒 புத்தக பைகள் | 🪣 இறப்பர் & பிளாஸ்டிக் பொருட்கள்

UPTO 50% OFF!!!

📅 06.08.2026 முதல் 16.08.2026 வரை மட்டுமே
தவற விடாதீங்க!

🛒 Rainbow Mega Sale

  | நோர்வூட் அஸ்வெசும மோசடி ரூ.1.62 கோடியைத் தாண்டியது; மேலும் மூன்று அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைநோர்வூட் பிரதேச செயலக...
06/08/2026

| நோர்வூட் அஸ்வெசும மோசடி ரூ.1.62 கோடியைத் தாண்டியது; மேலும் மூன்று அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை

நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பண மோசடி ரூ.1.6 கோடியாக அதிகரித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் மேலும் மூன்று அரச அதிகாரிகள் தொடர்புபட்டிருப்பதாக தெரியவந்ததைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி நோர்வூட் பிரதேச செயலாளர் சமீரா கம்லத் இன்று (06) ஹட்டன் காவல் பிரிவின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, பிரதேச செயலாளர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண் அதிகாரிகள் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, சந்தேகநபர்கள் இருவரையும் இம்மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பயனாளிகளுக்கு உரிய கொடுப்பனவுகள் கிடைக்கவில்லை என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னக்கோனுக்கு அனுப்பப்பட்ட அநாமதேய கடிதம் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த மோசடி தொடர்பான தகவல்கள் முதலில் வெளிச்சத்துக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய இரு அதிகாரிகளும் மாவட்டத்தின் வேறு பிரதேச செயலகங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதுடன், 2023 முதல் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற கொடுப்பனவுகள் தொடர்பில் விசாரணை நடத்த நுவரெலியா மாவட்ட செயலகம் மற்றும் நிதி அமைச்சின் தணிக்கைப் பிரிவுகளைச் சேர்ந்த 10 அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழுவும் நியமிக்கப்பட்டது.

தணிக்கை அதிகாரிகள் நோர்வூட் பிரதேச செயலகத்தில் தங்கி விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், அங்கு பணியாற்றும் கிராம சேவை அதிகாரிகள், கொடுப்பனவு பிரிவின் அதிகாரிகள் மற்றும் பல பயனாளிகளிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின்போது, கொடுப்பனவுகள் கிடைக்காதது தொடர்பில் அலுவலகத்திற்கு சென்ற பயனாளிகளை சந்தேகநபர்கள் அச்சுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் சந்தேகநபர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், சில தொகைகள் தனிப்பட்ட பணப் பரிமாற்றங்களாக வழங்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 10 பிரதேச செயலகங்களிலும் பல்வேறு அரச நலத்திட்டங்களின் கீழ் வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பிலும் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இழப்பீட்டுத் தொகை, திவிநெகும மானியங்கள், சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் கொவிட்-19 காலப்பகுதியில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ரூ.100,000 கொடுப்பனவு உள்ளிட்ட நிதியுதவிகள் உரிய முறையில் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும், ரூ.5,000 கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய சலுகைகள் முறையாக வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும் ஆராய சிறப்புத் தணிக்கைக் குழுவொன்றை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீராராச்சி தெரிவித்துள்ளார்.

  | இந்தியாவில் உயர்கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்ற மலையக மாணவி கிருஷதரணிடயகம அக்கரப்பத்தனை, பிரேமோர் பிரிவைச் சேர்ந்த மோ...
06/08/2026

| இந்தியாவில் உயர்கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்ற மலையக மாணவி கிருஷதரணி

டயகம அக்கரப்பத்தனை, பிரேமோர் பிரிவைச் சேர்ந்த மோகன்ராஜன் கிருஷதரணி, இந்தியாவின் ஈரோட்டில் அமைந்துள்ள பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் B.Sc. கணினி அறிவியல் (செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்) பட்டப்படிப்பைத் தொடரும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

2026–2027 கல்வியாண்டிற்கான இச்சேர்க்கை, அவரது கல்விச் சாதனையில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதுடன், உயர்கல்விப் பயணத்திற்கான சிறந்த தொடக்கமாகவும் அமைந்துள்ளது.

கிருஷதரணி, ஹோல்புறுக் தமிழ் மகா வித்தியாலயத்தில் தனது பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்துள்ளார்.

அவரது தாயார் ஜெயக்கொடி, பச்சபங்களா தோட்டத்தில் முன்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

மலையகத்தின் பின்தங்கிய தோட்டப் பகுதிகளில் இருந்து கல்வி கற்று, சர்வதேச உயர்கல்விக்கான வாய்ப்பைப் பெற்றுள்ள கிருஷதரணிக்கு பலரும் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உயர்கல்விப் பயணம் சிறப்பாக அமையவும், எதிர்காலத்தில் தனது கல்வித் துறையில் சிறந்து விளங்கவும் எழுமின் செய்திகள் சார்பிலும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை மீண்டும் தி...
04/08/2026

சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை மீண்டும் திறக்கப்படும் என மத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்த அழகான குடும்பம்நேற்று (03) கினிகத்தென, பொல்பிட்டியாவில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வ...
04/08/2026

மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்த அழகான குடும்பம்

நேற்று (03) கினிகத்தென, பொல்பிட்டியாவில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும் மண்ணில் புதையுண்டு உயிரிழந்துள்ளனர்

குசும் ரத்நாயக்க (தாய்)
ஷ்யாமா குமுதுனி ரத்நாயக்க, (மூத்த சகோதரி)
மனேல் குமுதுனி ரத்நாயக்க (இளைய சகோதரி)
மஹின்ச தினேத் ரத்நாயக்க (மகன்)

04/08/2026

| தொடர்ந்து பல ஆண்டுகளாக மண்சரிவு அபாயத்தில் வாழும் கேம்பிரி மேற் பிரிவு மக்கள்..!

  | *🛑மலையக ரயில் சேவையில் மீண்டும் ஒரு பாதிப்பு* 📌 வட்டவளை ரயில் நிலையத்தின் மீது மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ரயி...
03/08/2026

| *🛑மலையக ரயில் சேவையில் மீண்டும் ஒரு பாதிப்பு*

📌 வட்டவளை ரயில் நிலையத்தின் மீது மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ரயில் நிலைய கட்டிடம் இடிந்து விழுந்து பாரிய அளவிலான சேதத்தை ஏற்பட்டுள்ளது .

03/08/2026

| *🛑நோர்வுட் பகுதியில் மண்சரிவு அபயம்!*

📌 நோர்வுட் பகுதியில் பல இடங்களில் கனமழை காரணமாக வீதி ஓரங்களிலும் மண் மேடு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது இதனால் மக்கள் பாரிய தாக்கத்திலும் அச்சத்திலும் உள்ளனர்.

இதன் காரணமாக மக்கள் அனைவரும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்படி எமது எழுமின் செய்தி குடும்ப சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

03/08/2026

| 🛑 *ஹட்டன் நோர்வுட் வீதியில் வனராஜ பகுதியில் உள்ள நீர் ஓடையில் இருந்து பெருக்கு எடுத்த வெள்ள எச்சரிக்கை*

📌 ஹட்டன் மஸ்கெலியா வீதியில் வனராஜ பகுதியில் நீர் ஓடையில் இருந்து பெருக்கு எடுத்த நிலையில் அந்த வீதியில் பயணித்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் ஹட்டனில் இருந்து மஸ்கெலியா மற்றும் பொகவந்தலாவ செல்லும் பயணிகள் கவனமாக பாதையில் செல்லும் படி கேட்டுக் கொள்கிறோம்.

நிருபர் ✒️ ராமநாதன் கிஷான்

Address

No 36, Cymbru Upper Division
Lindula

Alerts

Be the first to know and let us send you an email when Ezhumin News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ezhumin News:

Shortcuts

Share