25/09/2025
மட்டக்களப்பு வைத்தியசாலை மலசல கூடத்தில் சிசு #உயிரிழப்பு – பெண் சிற்றூழியர் கைது.!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவில் மலசல கூடத்தில் #பெண் சிசுவை #பிரசவித்து, அதனை பெட்டிக்குள் வைத்து கட்டிலின் கீழ் #மறைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#உயிரிழந்த நிலையில் சிசுவின் உடல் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் தொடர்புடைய 37 வயதான சுகாதார சிற்றூழியர் செவ்வாய்க்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
2 பிள்ளைகளின் தாயாரான குறித்த பெண், திருமணமானவராக இருந்தாலும், கணவருடன் கடந்த ஜூன் மாதம் முதல் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ தினமான திங்கட்கிழமை (22) வழக்கம்போல் தனது கடமையில் ஈடுபட்டிருந்தபோது, வயிற்று வலி ஏற்பட்டதால் மலசல கூடத்திற்குச் சென்ற அவர், யாருக்கும் தெரியாமல் #பெண் குழந்தையைப் #பிரசவித்துள்ளார்.
பிறந்த குழந்தையை பெட்டிக்குள் வைத்து கட்டிலின் கீழ் மறைத்த பின்னரும், தனது கடமையில் தொடர்ந்துள்ளார்.
இதற்கிடையில், அதிக #இ*ர*த்*தப்போக்கு ஏற்பட்டதால் தாதியர் ஒருவர் அவரை அவதானித்து வார்டில் அனுமதித்தார். வைத்தியர்கள் பரிசோதித்தபோது அவர் குழந்தையைப் பெற்றிருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் விசாரணையில், குழந்தையை பெட்டிக்குள் மறைத்திருப்பதை அவர் ஒப்புக்கொண்டார். அந்த சிசு #உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.
மேலும், அவர் 38 வார கர்ப்பத்திற்கு பின் 2.485 கிலோ எடையுள்ள பெண் சிசுவை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. கர்ப்பிணியாக இருந்தது சக ஊழியர்களுக்கும் தெரியவில்லை.
குறித்த சிற்றூழியரின் கணவரும், குறித்த வைத்தியசாலையில் சிற்றூழியராகவே கடமையாற்றி வருகிறார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, கணவன் கடந்த ஜூன் மாதத்திலிருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
பிரிந்த கணவன் "அக்குழந்தை தனக்குப் பிறக்கவில்லை" எனத் தெரிவித்ததையடுத்து, குழந்தையின் மற்றும் தந்தையின் #இரத்த மாதிரிகளைப் பெற்று, DNA பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, மட்டக்களப்பு தலைமையக பெரும் குற்றத் தடுப்புப் பிரிவு (CID) பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tharani fm