Mannar Reports

Mannar Reports Reports FB page not promotes or encourages any activities.

page, covering Free & fair policy for purposes such as -religious ,News & Current Affairs.

அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளாரின், சகோதரர் (அண்ணன்) அன்ரனி இம்மானுவேல் சோசை (சோதி மாஸ்டர் - ஓய்வு பெற்ற அதிபர்) ...
28/08/2026

அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளாரின், சகோதரர் (அண்ணன்) அன்ரனி இம்மானுவேல் சோசை (சோதி மாஸ்டர் - ஓய்வு பெற்ற அதிபர்) இன்று(28.08.2026) இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனைகள் நாளை (29.08.2026) சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில், வங்காலை புனித ஆனாள் ஆலயத்தில் இரங்கல் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படும்.

அதன் பின்னர் அன்னாரின் பூதவுடல், வங்காலை கத்தோலிக்க சேமகாலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்:
அருட்தந்தை,
அ. விக்டர் சோசை அடிகளார்

#வங்காலை #இரங்கல் #இரங்கல்திருப்பலி #விக்டர்சோசை Mannar Reports Mannar Diocese Mannar News District Secretariat Mannar Mannar Ucmas Vankalai

உணவகங்களைத் தவிர்க்குமாறு பயணிகளிடம் கோரிக்கை...          +++++தூர இடங்களுக்குச் செல்லும் பயணிகள் பஸ் வண்டிகள் நிறுத்தப்...
22/08/2026

உணவகங்களைத் தவிர்க்குமாறு பயணிகளிடம் கோரிக்கை...
+++++

தூர இடங்களுக்குச் செல்லும் பயணிகள் பஸ் வண்டிகள் நிறுத்தப்படும் உணவகங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை பொது மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

இத்தகைய உணவகங்களின் தரத்தையும், சுகாதாரத்தையும் பேணுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை.

பழுதான உணவுப் பொருள்களையும், கூடிய விலைக்கு அவற்றை விற்பனை செய்வதும் அவதானிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

தூரப் பயணம் மேற்கொள்வோர் வீட்டிலிருந்தே உணவையும் குடிநீரையும் கொண்டுசெல்வது சிறந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#பயணிகள் #தூரப்பயணம் #அசேலபண்டார #உணவகங்கள் #பழுதானஉணவு #சுகாதாரம் #பஸ்வண்டிகள் #நுகர்வோர்விவகாரஅதிகாரசபை

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மன்னார் மாவட்ட பிரதிப் பணிப்பாளராக ரி.என்.சூரியராஜா நியமிக்கப்பட்டிருக்கிறார்.இதற்கு முன...
22/08/2026

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மன்னார் மாவட்ட பிரதிப் பணிப்பாளராக ரி.என்.சூரியராஜா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கு முன்னர் திரு. சூரியராஜா யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களின் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றினார்.

இதேவேளை, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவில் கடமையாற்றிய கனகரெத்தினம் திலீபன் வவுனியா மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#வவுனியா #யாழ்ப்பாணம் #கிளிநொச்சி ூரியராஜா #அனர்த்தமுகாமைத்துவநிலையம் #கனகரெத்தினம்திலீபன் #திலீபன்

வடக்கு மாகாண சபைக்கு முன்பாக போராட்டம்..
18/08/2026

வடக்கு மாகாண சபைக்கு முன்பாக போராட்டம்..

18/08/2026

16/08/2026

திருக்கேதீஸ்வரத்தில் இரவு நேரத்தில்..?

#மன்னார் #மன்னார்குடி #மன்னார்செய்திகள் #சத்தியலிங்கம் #சத்தியலிங்கம்MP #திருக்கேதீஸ்வரம்
#அபிவிருத்திக்குழு #தொல்பொருட்திணைக்களம்
#தொல்பொருள் #திணைக்களம்

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார், மடு அன்னையின் வருடாந்த ஆவனித் திருவிழா நாளை காலை 6.15க்கு ஆயர்களின் தலைமையில் கூட்டுத் ...
14/08/2026

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார், மடு அன்னையின் வருடாந்த ஆவனித் திருவிழா நாளை காலை 6.15க்கு ஆயர்களின் தலைமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படும்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை, கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயார் கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை, பதுளை மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யூட் நிஷாந்த சில்வா ஆண்டகை ஆகியோர் திருவிழாத் திருப்பலிக்கு தலைமை தாங்குவார்கள்.

தமிழ். சிங்களம், இலத்தீன் மொழிகளில் திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

திருவிழாத் திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி நடைபெறும்.
திருச்சொரூப பவனியின் நிறைவில் பக்த அடியார்களுக்கு மடு அன்னையின் திருச்சொரூப ஆசீர்வாதம் வழங்கப்பட்டு திருவிழா நிறைவடையும்
மடு அன்னையின் வருடாந்த ஆவனித்திருவிழா கடந்த ஆறாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

பக்தர்களின் வசதி கருதி தங்குமிடம், உணவு, போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்ட விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள் களியாட்ட நிகழ்வுகள் உள்ளிட்ட தேவையற்ற விடயங்களில் ஈடுபடுவதை முற்றாக தவிர்த்துக் கொள்ளமாறு மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை
கிறிஸ்து நேசன் அடிகளார் கேட்டுக்கொண்டுள்ளார்.

#மடு #அன்னை

08/08/2026

புலமைப்பரிசில் பரீட்சை நாளை..

புலமைப்பரிசில் பரீட்சை நாளை..               ********தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆண...
08/08/2026

புலமைப்பரிசில் பரீட்சை நாளை..
********

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்திருக்கிறார்.

பரீட்சார்த்திகள், பரீட்சை ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு சமூகம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

மாணவர்கள் மன ஒருமைப்பாட்டுடன் பரீட்சையை எதிர்கொள்ள வேண்டும் என்பது இதன் நோக்கமாகும்.

இதேவேளை, நாடு முழுவதும் 2,723 பரீட்சை மத்திய நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

2,94,089 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

இவர்களில் 2,20,366 பேர் சிங்கள மொழியிலும், 73,723 பேர் தமிழ் மொழியிலும் தோற்றுகின்றனர்.

#பரீட்சை #புலமைப்பரிசில் #புலமைப்பரிசில்பரீட்சை #இந்திகாகுமாரிலியனகே

Meta நிறுவனத்திற்கு அபராதம்                                                      ******சுமார் 567 மில்லியன் அமெரிக்க டொல...
08/08/2026

Meta நிறுவனத்திற்கு அபராதம்
******

சுமார் 567 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்குமாறு அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நீதிமன்றம் Meta நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், இந்தத் தீர்ப்பிற்க எதிராக தாம் மேன்முறையீடு செய்யப் போவதாக Meta நிறுவனம் அறிவித்திருக்கிறது.

Address

Mannar
41000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mannar Reports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share