
08/08/2025
கிறிஸ்தவ கற்கைநெறியில் கலைமானி (B.A. in Christian Studies) பட்டமளிப்பு விழா - 08.08.2025
மன்னார் புனித யோசேவ் வாஸ் இறையியல் கல்லூரியில் 04 வருடங்களாக இறையியல் கற்கைநெறியில் உயர்கல்வியை மேற்கொண்ட 11 மாணவர்களுக்கும், அவர்களோடு சேர்த்து இலங்கை ரீதியில் மொத்தமாக 87 மாணவர்களுக்கும் 08.08.2025 வெள்ளிக்கிழமை இன்று கொழும்பு புனித யோசேவ் வாஸ் மத்திய நிலையத்தில் கிறிஸ்தவ கற்கைநெறியில் கலைமானி (B.A. in Christian Studies) பட்டமளிப்பு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது.
இவர்கள்தான் மன்னார் புனித யோசேவ் வாஸ் இறையியல் கல்லூரியிலிருந்து உயர்கல்வியை நிறைவுசெய்து பட்டம் பெறுகின்ற முதல் தொகுதி (1st Batch) மாணவர்களாவர்.
இவர்களை வாழ்த்தி பூரித்து நிற்கின்ற வேளையிலே, தங்கள் தியாகமிக்க பல்நிலை செயல்களாலும் ஊக்கமூட்டலாலும் இவர்களின் இந்நிலைக்கு முற்றிலும் காரணமாக இருந்த எமது ஆயர் மேதகு ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் முன்னாள் ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, குருமுதல்வர், கல்லூரி முதல்வர்
அருட்பணி. அ. கிறிஸ்ரி றூபன், பெர்னாண்டோ, விரிவுரையாளர்கள், அருட்பணியாளர்கள், துறவிகள், கல்லூரிப் பணியாளர்கள், பெற்றோர்கள், அனைவருக்கும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.