Mihraj News

Mihraj News www.mihrajnews.com/ Mihraj News [email protected] call +94775690784, +94774672867

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!18/07/2025
18/07/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!
18/07/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉  வீரத்திடல் அல்-ஹிதாயா மாகா வித்தியாலயம் வரலாற்று சாதனை..!✍️  நிஸா இஸ்மாயீல் 𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇...
17/07/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 வீரத்திடல் அல்-ஹிதாயா மாகா வித்தியாலயம் வரலாற்று சாதனை..!

✍️ நிஸா இஸ்மாயீல்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 தற்போது வெளியாகியுள்ள கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில் சது/வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலய மாணவர்கள் நான்கு பேர் ஒன்பது பாடங்களிலும் "ஏ" சித்தியும் ஒரு மாணவி எட்டு "ஏ" சித்தியும் பெற்று இதுவரைகாலமும் கண்டிராத வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

ஒன்பது "ஏ" சித்தி பெற்ற மாணவர்களாக,
கலீல் முஹம்மட் ஜெஸாத்,
முஹம்மட் றிபாஸ் பாத்திமா ஜீனா,
அப்துல் கபூர் றாயிதா,
முஹம்மட் அலி தீனுஸ் சிம்ஹா,
எட்டு "ஏ" ஒரு "பிB" சித்தி பெற்ற மாணவரான
முஹம்மட் ஹில்மி பாத்திமா ஹிமா,
ஏழு "ஏ" இரண்டு "பிB" சித்தி பெற்ற மாணவரான
முஹம்மட் ஹாலித் ஆதில் அஹ்மட்,ஏழு "ஏ" ஒரு "பிB" ஒரு "சி" சித்தி பெற்ற மாணவரான
சுபைர் பாத்திமா நூஹா ஆகிய மாணவர்களே சித்தி பெற்றுள்ளனர்.

இப்பாடசாலையில் 37 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 32 மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதியுடையோராக சித்தியடைந்துள்ளனர்.

சிறப்பான பெறுபேறுகளுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய பாடசாலை அதிபர் திருமதி ஏ.எம்.முனாஷிர், பிரதி அதிபர் ஏ.எம்.சாலித்தீன், பகுதித் தலைவர் எம்.எஸ்.எம்.றியாஸ் மற்றும் அனைத்து ஆசிரியர்களின் பங்களிப்புடன் இப்பெறுபேறுகள் கிடைத்துள்ளமை குறிப்பிட்டத்தக்கதாகும்.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉  மஜ்மா நகர் பிரதேசத்தில் யானை வேலி அமைக்கும் பணியை விரைவுபடுத்துங்கள்..!✅👉  கலாநிதி எம்....
17/07/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 மஜ்மா நகர் பிரதேசத்தில் யானை வேலி அமைக்கும் பணியை விரைவுபடுத்துங்கள்..!

✅👉 கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை.

✍️ எஸ். சினீஸ் கான்

✅👉 மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணப்புக் குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (16) இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், இளையதம்பி ஶ்ரீநாத், கந்தசாமி பிரபு ஆகியோரது பங்கேற்புடன் இக் கூட்டம் இடம் பெற்றது.

இக்கூட்டத்தில் விஷேட அதிதியாக, சுற்றாடல் அமைச்சர் கௌரவ வைத்திய கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி கலந்துகொண்டார்.

இதன்போது, சுற்றாடல் அமைச்சிற்குட்பட்ட திணைக்களங்களின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பல முன்மொழிவுகளை முன் மொழிந்த்திருந்தார். அதனடிப்படையில்,

ஓட்டமாவடி மஜ்மா நகர் பிரதேசத்தில் யானை தாங்குதலால் உயிரிழப்பு உட்பட பல சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த பிரதேசத்திற்கு யானை வேலி அமைக்கப்பட்டு மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் இதற்கான நிதியினை விரைவாக ஒதுக்கீடு செய்து இத் தேவையை பூர்த்தி செய்து தருவதாக உறுதிமொழி வழங்கினார்.

அதேபோல், ஓட்டமாவடி பிரதேசத்தில் அமைந்துள்ள அரிசி ஆலைகள், மர அலைகள் என்பனவற்றால் சூழல் மாசடைவு, அதிக சத்தம் போன்ற பல காரணங்களால் இத்தொழிற்சாலைகளை ஓட்டமாவடி பத்திரிகை தொழிற்சாலை காணிகளுக்கு மாற்றுவதற்கு எழுபது ஏக்கர் காணிகளை ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.

இதன்போது, சுற்றாடல் அதிகார சபை காணியை அமைச்சு வழங்குமாக இருந்தால் அதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம் என தெரிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பதிலளித்த அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, தேவையான காணிகளை ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என உறுதிமொழி வழங்கினார்.

ஊடகப்பிரிவு

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!17/07/2025
17/07/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!
17/07/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉  கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் காவத்தமுனைக்கு விஜயம்..!✍️ எஸ். சினீஸ் கான் 𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑...
16/07/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் காவத்தமுனைக்கு விஜயம்..!

✍️ எஸ். சினீஸ் கான்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.தாஜுதீன் அவர்களின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று (15) காவத்தமுனைக்கு விஜயம் செய்து பிரதேச அபிவிருத்தி தொடர்பில் ஆராய்ந்தார்.

இதன் போது காவத்தமுனை விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா போன்றவற்றைப் பார்வையிட்டு குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், அதனை நிவர்த்தி செய்து தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வுடன், தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ், முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் ஹபீப் றிபான், பிரதேச சபை உறுப்பினர் எம்.தாஜுதீன் மற்றும் பிரதேச இளைஞர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!16/07/2025
16/07/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!
16/07/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!15/07/2025
15/07/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!
15/07/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉  மனிதநேயத்தின் உயிர்ப்புடன் – ரஹ்மத் பவுண்டேஷனின் இருசக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு..!✍...
14/07/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 மனிதநேயத்தின் உயிர்ப்புடன் – ரஹ்மத் பவுண்டேஷனின் இருசக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு..!

✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் மற்றும் YWMA பேரவையின் கூட்டுஅமைப்பில், சமூகத்தில் நீண்ட காலமாக உள்மன அக்கறையும் உடல் சவால்களும் கொண்ட விஷேட தேவையுடைய பயனாளர்களுக்காக அர்த்தமுள்ள செயல் ஒன்று நடை பெற்றது.

ரஹ்மத் பவுண்டேஷனுக்கு கிடைத்த கோரிக்கைகளின் அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கான இருசக்கர நாற்காலிகள், பவுண்டேஷனின் ஸ்தாபகரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் பணிப்புரைக்கமையான சமூக சேவையாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், CSWMA பேரவையின் தலைவி சகோதரி சீனியா தாஸிம் மற்றும் YWMA பேரவையின் தலைவி சகோதரி பவாஸா தாஹா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டு நிகழ்வுக்கு மெருகூட்டினார்கள். அவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

பயனாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன், பவுண்டேஷனின் உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் நிகழ்வில் பங்கெடுத்து, இதுபோன்ற நடவடிக்கைகள் சமூகத்துக்கு உணர்வு நிரம்பிய ஒளியை பரப்புவதாக பாராட்டினார்கள்.

இந்நிகழ்வு, ஒருவருக்கொருவர் தோள்கொடுத்து வாழும் சமூகத்தின் முகமாகவும், மனிதநேயத்திற்கான நட்புறவுகளின் உதாரணமாகவும் அமைந்தது.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉  நற்பிட்டிமுனை தாருல் ஹிக்மா மகளிர் கல்லூரியில் ரஹ்மத் மன்சூர் விஜயம் – எதிர்காலத் திட்ட...
14/07/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 நற்பிட்டிமுனை தாருல் ஹிக்மா மகளிர் கல்லூரியில் ரஹ்மத் மன்சூர் விஜயம் – எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆலோசனை..!

✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள், நற்பிட்டிமுனை தாருல் ஹிக்மா மகளிர் அரபுக் கல்லூரிக்கு நேற்று (13) விஜயம் மேற்கொண்டார்.

இந்த நேரத்தில், மாணவிகளின் கல்வி முன்னேற்றம், எதிர்கால திட்டங்கள் மற்றும் பயனுள்ள கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகளும், ஊக்கமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு, கல்லூரியின் அதிபர் நாசீர் ஹனி மௌலவி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில், CSWMA பேரவையின் தலைவி சகோதரி சீனியா தாஸிம் மற்றும் YWMA பேரவையின் தலைவி சகோதரி பவாஸா தாஹா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டு, நிகழ்வை மேலும் சிறப்பித்தனர். அவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உலமாக்கள், கல்லூரி நிர்வாக உறுப்பினர்கள், ஊர்முக்கியஸ்தர்கள் மற்றும் ரஹ்மத் பவுண்டேசனின் உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉  அபிவிருத்திக்கான சவூதி நிதியத்துக்கும் (SFD) இலங்கைக்கும் இடையிலான நல்லுறவுகள் ஆரம்பித்...
14/07/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 அபிவிருத்திக்கான சவூதி நிதியத்துக்கும் (SFD) இலங்கைக்கும் இடையிலான நல்லுறவுகள் ஆரம்பித்ததிலிருந்து, நீர், சக்தி, சுகாதாரம், பாதையமைப்பு மற்றும் கல்வி ஆகிய துறைகளில் மொத்தமாக 13 திட்டங்களை செயற்படுத்த, SFD மொத்தமாக சுமார் 425 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவு பெருமதி உள்ள 15 அபிவிருத்திக் கடன்களை வழங்கியுள்ளது.

✍️ எஸ். சினீஸ் கான்

இவற்றுள் பிரதானமாக நிதியளிக்கப்பட்ட 13 திட்டங்கள்

1. கொழும்பு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் நிர்வாக திட்டம் (1981 இல் கடன் வழங்கப்பட்டது) – நகர குடிநீர் மற்றும் சுகாதார அமைப்புகளை மேம்படுத்துதல்.
2. மின்சார பிணைய பராமரிப்பு திட்டம் (1981) – தேசிய மின்சார பாவனை மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்.
3. மஹவெலி கங்கை அபிவிருத்தி – இடது கரை (1980-களின் ஆரம்பத்தில் வழங்கப்பட்டது) – நீர்பாசன வசதி மற்றும் விவசாய ஆதரவு.
4. கொழும்பில் நியுரோ-ட்ரோமா பிரிவு அடங்கலான சுகாதார வளங்கள் அபிவிருத்தி திட்டம் (2002 மற்றும் 2008).
5. மட்டக்களப்பு – திருகோணமலை சாலை அபிவிருத்தி (2004) – கிழக்கு மாகாணத்தின் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கு.
6. சுகாதார வளங்கள் அபிவிருத்தி(2008) – கொழும்பு சுகாதார உள்கட்டமைப்பின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி.
7. எப்பிலெப்சி மருத்துவமனை மற்றும் சுகாதார மையம் (கொழும்பு தேசிய மருத்துவமனை) (2008 இல் கட்டப்பட்டது, 2015 இல் இதற்கு மேலதிக கடன் தொகை வழங்கப்பட்டது)– 242 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையம் அமைப்பு.
8. களு கங்கை அபிவிருத்தி திட்டம் (இடது கரை விரிவு, சுமார் 45 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, 2010/2017) – பாசனம், நீர்த்தேக்க தொட்டி மற்றும் கால்வாய் அமைப்புகள்.
9. சாலை வலையமைப்பு அபிவிருத்து / தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தல் (பேராதனை – பதுளை- செங்கலடி வரை, சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, 2015 இல் ஆரம்பித்து 2021 இல் முடிவடைந்தது)
10. வயம்ப பல்கலைக்கழக நகர அபிவிருத்தி (சுமார் 28 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்பட்டு, 2017 இல் தொடங்கியது) – உள்கட்டமைப்பு அபிவிருத்தி செய்து வருடத்திற்கு 5,000-க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு உதவும் நோக்கம்)
11. சபரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் அமைப்பு (சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர், 2019 இல் ஒப்பந்தம்)
12. கின்னியா பாலம் (திருகோணமலை மாவட்டம்) – சுமார் 2017-இல் கடன் ஒப்பந்தத்தின் கீழ் நிதி பெற்றது, சுமார் 1,00,000 மக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
13. கொழும்பு தேசிய மருத்துவமனையில் நியூரோ-டிராமா பிரிவு – சுகாதாரத் துறையின் திட்டங்களின் கீழ் நிதியளிக்கப்பட்ட சிறப்பு நியூரோடிராமா சிகிச்சை மையம்

இந்த திட்டங்களுள் வயம்ப பல்கலைக்கழக நகர அபிவிருத்தி திட்டத்தினை பொருத்தமட்டில், வையம்ப பல்கலைக்கழகத்தை மேம்படுத்தும் நோக்கில் 28 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 105 மில்லியன் சவுதி ரியால்) மதிப்புடைய கடன் ஒப்பந்தம் 2017 அக்டோபர் 24-ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது.

இந்த திட்டத்தின் நோக்கத்தைப் பொருத்தளவில், கல்விக்கான உட்கட்டமைப்பு வசதிகளை விரிவாக்கி மேம்படுத்துவதன் மூலம், 5,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான கல்வியில் துணை நிற்பதோடு, கல்வித் தரத்தை உயர்த்தல் மற்றும் சூழவுள்ள சமூகத்தின் நீண்டகால பொருளாதார மற்றும் சமூக திறன்களை வலுப்படுத்துவதுமாகும். இந்த திட்டத்தின் பரப்பை பொருத்தளவில் கற்பித்தல் வசதிகளை விரிவாக்குதல், கல்விக்கான உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் குளியாபிட்டிய மற்றும் மாகந்துர பகுதிகளில் உள்ள வயம்ப பல்கலைக்கழகத்தை ஒரு முக்கிய கல்வி மையமாக மாற்றுதல் ஆகியவை அடங்குகின்றன.

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்
காலித் ஹமூத் அல்கஹ்தானி

🌎 www.mihrajnews.com

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉  வயம்ப பல்கலைக்கழக நகரமைப்புத் திட்டம் திறப்பு விழா தொடர்பான இலங்கைக்கான சவூதி அரேபிய தூ...
14/07/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 வயம்ப பல்கலைக்கழக நகரமைப்புத் திட்டம் திறப்பு விழா தொடர்பான இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்களது ஊடக அறிக்கை..!

✍️ எஸ். சினீஸ் கான்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 2025 ஜூலை 14ஆம் திங்கள் கிழமை, வயம்ப பல்கலைக்கழக நகரமைப்புத் திட்டத்தின் திறப்பு விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்த கல்வி மற்றும் வளர்ச்சித் திட்டம், சவுதி அரேபியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்குமிடையேயான ஆழமான உறவுகளை பிரதிபலிக்கிறது.

சவுதி அபிவிருத்தி நிதியம், இலங்கை குடியரசில் சுமார் 425 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் மேற்பட்ட பெறுமதி கொண்ட 15 முக்கிய திட்டங்களுக்கு நிதியளித்துள்ளது . இந்த வயம்ப பல்கலைக்கழக திட்டமும் சவூதியின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். இலங்கையில் மனித வள அபிவிருத்தியில் முதலீடு செய்வதும், இலங்கையின் கல்வித்துறையின் எதிர்காலத்தை அபிவிருத்தி செய்வதும் முக்கியமானவை என்பதில் சவூதி அரேபிய கொண்டுள்ள நம்பிக்கையே இந்த திட்டங்களை செயற்படுத்த காரணமாக அமைந்துள்ளன.

பல்கலைக்கழகங்களை கட்டுதல், அபிவிருத்தி செய்தல் என்பது வெறும் கட்டிடங்களை நிர்மாணிப்பது மட்டுமல்ல, மாறாக அது ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான அடித்தளமாகவும், மக்களுக்கிடையேயான புரிதலையும் அறிவையும் இணைக்கும் பாலமாகவும் அமைகிறது.

இந்த திட்டம், எவ்வித உட்புற நோக்கங்களோ அல்லது நிபந்தனைகளோ இல்லாமல், பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்ட உண்மையான அபிவிருத்தி கூட்டுறவுகள் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்பதற்கான ஒரு முன்னுதாரணமாக உள்ளது.

1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து, சவூதி அபிவிருத்தி நிதியம், உலகம் முழுவதும் அபிவிருத்தி மற்றும் அமைதிக்காக சேவையாற்றும் சவூதியன் கொள்கையின் அடிப்படையில், 90க்கும் மேற்பட்ட நாடுகளில் நிலைத்த பயனுடைய திட்டங்களை செயற்படுத்த மிகுந்த முயற்சியுடன் செயல்பட்டு வருகிறது.

மேலும் இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களுக்கும் மற்றும் பிரதமர் மற்றும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அவர்களுக்கும், மேலும் இந்த திட்டத்தின் வெற்றிக்கு பங்களித்த அனைத்து செயற்குழுக்கள், இலங்கையின் கல்வி அமைச்சில் உள்ள எமது நணபர்கள் அனைவருக்கும் எனது எனது மனமார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இறுதியாக, வயம்ப பல்கலைக்கழகம் அறிவின் கலங்கரை விளக்கமாகவும் நம்பிக்கையின் இல்லமாகவும் இருப்பதையும், மேலும் செழிப்பான மற்றும் பாதுகாப்பான இலங்கையை கட்டியெழுப்ப உதவும் புது தலைமுறைகளை உருவாக்கும் தளமாகவும் அமையும் என நான் எதிர்பார்க்கிறேன்.

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்
காலித் ஹமூத் அல்கஹ்தானி

🌎 www.mihrajnews.com

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉  கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் 2025 ஆண்டுக்கான  மூன்றாம் கட்ட பெண் தலைமைத்துவ குடும்பம் மற...
14/07/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் 2025 ஆண்டுக்கான மூன்றாம் கட்ட பெண் தலைமைத்துவ குடும்பம் மற்றும் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார வேலைத்திட்டம்..!

✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 பெண் தலைமைத்துவ குடும்பம் மற்றும் வறிய குடும்பங்களை சேர்ந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார வேலைத்திட்டதின் கீழ் இந்த ஆண்டுக்கான மூன்றாவது கட்ட வேலைத்திட்டம் (13) ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான கௌரவ ரஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக CSWMA பேரவையின் தலைவி சகோதரி சீனியா தாஷிம், YWMA பேரவையின் தலைவி சகோதரி பவாஸா தாஹா அவர்களும் கல்முனை சமூக சேவை உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜெய்ஸான், ரஹ்மத் மன்சூர் அவர்களின் அன்பு தாயார் சுஹாரா அவர்களும் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முகாமையாளர் வைத்தியர் சனா, மௌலவி ரியாஸ் மற்றும் பவுண்டேசனின் உயர்பீட உறுப்பினர்கள், பயனாளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

Address

Maruthamunai

Alerts

Be the first to know and let us send you an email when Mihraj News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mihraj News:

Share