Zahira Students' Media Forum

Zahira Students' Media Forum The Official page of Students Media Forum, Zahira College Mawanella

04/03/2026
Every answer sheet is a blueprint.Every question, a doorway.Today, you don’t just sit for an exam —you architect your ne...
18/02/2026

Every answer sheet is a blueprint.
Every question, a doorway.

Today, you don’t just sit for an exam —
you architect your next chapter.

Believe in yourself.
The future is already waiting at the gate.

மாவனல்லை வலய மட்ட விவாதப் போட்டியில் ஸாஹிரா அணியின் சிறப்பான வெற்றிபிப்ரவரி 14, 2026 அன்று நடைபெற்ற மாவனல்லை வலய மட்ட வி...
18/02/2026

மாவனல்லை வலய மட்ட விவாதப் போட்டியில் ஸாஹிரா அணியின் சிறப்பான வெற்றி

பிப்ரவரி 14, 2026 அன்று நடைபெற்ற மாவனல்லை வலய மட்ட விவாதப் போட்டியில் எமது பாடசாலை அணி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

இப்போட்டியில் பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்திய மாணவிகள்

- M.I.F. இம்லா
- M.R.F. ரிஷ்மா
- M.R. ஹயா

ஆகியோர் தங்களின் வாதத் திறமையை வெளிப்படுத்தி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த அனைத்து உதவி அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பாடசாலை நிர்வாகம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

Join our channel Zahira News 👇
https://whatsapp.com/channel/0029VbAXIVIGufIwvsjLjp0M

Special Morning Assembly: Remarking Welcome Ramadanஎதிர்வரும் ரமழான் மாதத்தை முன்னிட்டு, ஸாஹிரா தேசிய பாடசாலையில் பெப்ரவ...
18/02/2026

Special Morning Assembly: Remarking Welcome Ramadan

எதிர்வரும் ரமழான் மாதத்தை முன்னிட்டு, ஸாஹிரா தேசிய பாடசாலையில் பெப்ரவரி 12 ஆம் திகதி மாணவர்களுக்கான மார்க்க சொற்பொழிவு ஒன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக அஷ்ஷேஹ் நவாஸ் மதனி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ரமழானின் ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் ஒழுக்கப்பண்புகள் தொடர்பாக விளக்கமளித்தார்.

மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்ட இந்நிகழ்வு, அவர்களின் ஒழுக்கநெறி மற்றும் ஆன்மீக வளர்ச்சியை வலுப்படுத்தும் நிகழ்வாக அமைந்திருந்தது.

Join our channel Zahira News 👇
https://whatsapp.com/channel/0029VbAXIVIGufIwvsjLjp0M

பாடசாலை விளையாட்டு வளர்ச்சிக்கான Cordowa இல்லத்தின் பாராட்டத்தக்க பங்களிப்பு. 2026 ஆம் ஆண்டு Zahira College இல்ல விளையாட...
18/02/2026

பாடசாலை விளையாட்டு வளர்ச்சிக்கான Cordowa இல்லத்தின் பாராட்டத்தக்க பங்களிப்பு.

2026 ஆம் ஆண்டு Zahira College இல்ல விளையாட்டுப் போட்டி தேவைகளுக்காக Cordowa House மூலம் சேகரிக்கப்பட்ட நிதியில் மீதமிருந்த தொகையை, பாடசாலையின் எதிர்கால விளையாட்டு வளர்ச்சிக்காக நன்கொடையாக வழங்க அவர்கள் முன்வந்துள்ளனர்.

இது மாணவர்களிடையே ஒற்றுமை, பொறுப்புணர்வு மற்றும் விளையாட்டு மனப்பான்மையை வெளிப்படுத்தும் பாராட்டத்தக்க முயற்சியாகும்.

இந்நிகழ்வு இன்று காலை நடைபெற்ற கூட்டத்தில் இடம்பெற்றதுடன், அதிபர் Cordova இல்லத்தின் இம்முன்மாதிரி செயலை பாராட்டி தனது நன்றிகளை தெரிவித்தார்.

Join our channel Zahira News 👇
https://whatsapp.com/channel/0029VbAXIVIGufIwvsjLjp0M

ஸாஹிரா தேசிய பாடசாலையில் 78-வது சுதந்திர தின நிகழ்வும் மரநடுகை செயற்திட்டமும்எமது ஸாஹிரா தேசிய பாடசாலையில் நாட்டின் 78-வ...
18/02/2026

ஸாஹிரா தேசிய பாடசாலையில் 78-வது சுதந்திர தின நிகழ்வும் மரநடுகை செயற்திட்டமும்

எமது ஸாஹிரா தேசிய பாடசாலையில் நாட்டின் 78-வது சுதந்திர தின விழா மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.

கல்லூரி அதிபர் தலைமையிலான இந்த விழாவில் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மஸ்ஜிதுல் ஹுதா நிர்வாகிகள் கௌரவ அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

குறிப்பாக, குருளைச் சாரணர்களின் (Cub Scouts) அணிவகுப்பும் உற்சாகமும் அனைவரையும் கவர்ந்தது.

வெறும் கொண்டாட்டமாக மட்டுமன்றி, மண்ணைக் காக்கும் நோக்கில் மரக்கன்றுகள் நடப்பட்டு, நாட்டின் எதிர்காலத்திற்காக சேவை செய்ய மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Join our channel Zahira News 👇
https://whatsapp.com/channel/0029VbAXIVIGufIwvsjLjp0M

Dear esteemed teachers ,Zahira College Mawanella  bids a heartfelt farewell to Mrs. M.S.M.F Rifka, Mrs. M.R.F. Zaroona, ...
18/02/2026

Dear esteemed teachers ,

Zahira College Mawanella bids a heartfelt farewell to Mrs. M.S.M.F Rifka, Mrs. M.R.F. Zaroona, and Mrs. A.C. Ummu Kulsoom, who have retired after years of selfless service to the College. Their contributions to the school and its students will be deeply cherished.
The school community wishes them a happy, healthy, and fulfilling retirement and extends best wishes for their future endeavors .

With sincere gratitude,
The Zahira Family

Join our channel Zahira News 👇
https://whatsapp.com/channel/0029VbAXIVIGufIwvsjLjp0M

18/02/2026

அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டியில் ஸாஹிராக் கல்லூரி வெற்றிஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், Colombo Commodities ந...
14/02/2026

அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டியில் ஸாஹிராக் கல்லூரி வெற்றி

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், Colombo Commodities நிறுவன அனுசரணையில் புனித ரமழான் அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டி 2026 பெப்ரவரி மாதம் 7ம் திகதி மாவனல்லை ஸாஹிராக் கல்லூரி கேட்போர் கூடத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

அதில் 14 பாடசாலைகள் கலந்து கொண்டதுடன் மாவனல்லை ஸாஹிராக் கல்லூரி மற்றும் கொட்டியாகும்புர அல்-அகீல் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றுக்கிடையே இடம்பெற்ற போட்டியில் இரு பாடசாலைகளும் தலா 37 புள்ளிகளைப் பெற்று வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

மாவனல்லை ஸாஹிராக் கல்லூரி சார்பில் தரம் 13ஐ சேர்ந்த M.H.Rashidha, M.M.Zainab மற்றும் H.F.Asma ஆகிய மாணவிகள் கலந்து கொண்டனர்.
அவர்களை ஆசிரியை திருமதி P.M.Aaysha Begum அவர்கள் பயிற்றுவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Join our channel Zahira News 👇
https://whatsapp.com/channel/0029VbAXIVIGufIwvsjLjp0M

Address

Zahira College Road
Mawanella

Alerts

Be the first to know and let us send you an email when Zahira Students' Media Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zahira Students' Media Forum:

Share