
19/07/2025
மாவனல்லை யுனைடட் விளையாட்டுக் கழகம் அபார வெற்றி
மாவனல்லை யுனைடட் விளையாட்டுக் கழகத்திற்கும் Great Star விளையாட்டுக் கழகத்திற்கும் இடையிலான
League 1 இரண்டு இறுதிப் போட்டிகளிலும் மாவனல்ல விளையாட்டுக் கழகம்
1 - 0 மற்றும் 3- 0 என்ற கோல் கணக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை பதிவு செய்திருக்கின்றது.
2025.07.12 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு கொழும்பு Race Course சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதலாவது இறுதிப் போட்டியில் 1 -0 என்ற அடிப்படையிலும் 2025.07.19 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில்
3 - 0 என்ற அடிப்படையில் அபாரமாக கோள்களை அடித்து சம்பியன் பட்டத்தை உறுதிப்படுத்தி இருக்கின்றது.
இலங்கை உதைப்பந்தாட் சம்மேளனத்தின் Football Federation of Srilanka League 1 - 2025 சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் இவ்வாறு நிறைவு பெற்றிருக்கின்றன.
இந்த லீக் போட்டிகளில் யுனைடட் விளையாட்டுக் கழகம் பங்குபற்றிய போட்டிகள் பலவற்றில் வெற்றிபெற்று இவ்வாறு Grand Final இறுதிப் போட்டிக்கு தெரிவாகி இருக்கின்றது.
அண்மைக்காலமாக மாவனல்லை யுனைடட் விளையாட்டு கழக Football Team அணி வீரர்கள் வெளிப்படுத்தி வருகின்ற அபரிமிதமான திறமைகள் பாராட்டப்பட வேண்டியதாகும் .
ஏற்கனவே நடந்து முடிந் த லீக் போட்டிகளில் இலங்கையில் பல பாகங்களிலும் இருந்தும் வந்து பங்குபற்றிய பலம்பொருந்திய பல அணிகளை தோற்கடித்த நிலையில் வீரர் சிபானின் அபாரமான ஆட்டம் கோள் காப்பாளரின் திறமை மற்றும் எல்லா விரர்களதும் அயராத முயற்சி காரணமாக இத்தகைய வெற்றிகளை பெற முடிந்தமை பாராட்டத் தக்கதாகும்
எமது ஊரில் சுமார் அரை நூற்றாண் டுக்கு மேலாக மிகவும் திறம்பட இயங்கி வருகின்ற யுனைடட் விளையாட்டுக் கழகம் எமது கிருங்கதெனிய கிராமத்தை தளமாகக் கொண்டு உதயமானாலும் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்கள் வரை சென்று திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய உதைப்பந்தாட்ட வீரர்களை உருவாக்குவதில் பெரும் பங்களிப்பை செய்து வருகின்றமை எமது பிரதேசத்திற்கு மாத்திரமன்றி இலங்கை தேசத்திற்கே பெருமை தேடித்தருவதாக அமைவதோடு அணியின் வீர்களது திறமைகளை பாராட்டி உற்சாகப்படுத்த வேண்டியதாக இருக்கின்றது.
பதுரியா மத்திய கல்லூரியின் பல வயது மட்ட பிரிவு மாணவர்கள் அண்மைக்கால
ங்களில் மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்ட உதைப்பந்தாட் போட்டிகளில் பங்குபற்றி சாதனைகளை படைப்பதற்கும் எமது ஊரின் ஒரே விளையாட்டுக் கழகமான யுனைடட் விளையாட்டுக் கழகமும் அதன் வீரர்களும் வழங்கி வருகின்ற ஒத்துழைப்பு பாராட்டப்பட வேண்டியதாகும்.
அதனால் Grand Final போட்டியிலும் எமது United Heroes வெற்றிவாகை சூடியமை எமது மாவனல்லை மண்ணுக்கு பெருமை சேர்ப்பதாக அமைகின்றது.
- அமீர் ஹூசைன்