Muththithal முத்திதழ்

Muththithal முத்திதழ் எமக்கான தனித்துவ அடையாளத்தை தோற்றுவிக்கும் ஒரு தளம்

மூதூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக எம்.ஐ.எம்.ஜெம்சித் நியமனம்முமைத்துவ சேவை உத்தியோகத்தராக பல்வேறு அரச நிறுவனங்களில் ...
27/01/2025

மூதூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக எம்.ஐ.எம்.ஜெம்சித் நியமனம்

முமைத்துவ சேவை உத்தியோகத்தராக பல்வேறு அரச நிறுவனங்களில் நீண்ட காலம் சேவையாற்றி பல அனுபவமும் திறமையும், நேர்மையான சேவை போன்ற பல காரணங்களாலும், அவரின் சேவையின் திருப்தி மற்றும் அவசியத்தன்மை என்பவனவற்றை கருத்திற் கொண்டு ஜனாப். எம்.ஐ.எம்.ஜெம்சித் இன்று திங்கட்கிழமை (27.01.2025) தனது கடமையை மூதூர் பிரதேச சபையில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன் போது மூதூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் புதிய செயலாளரை இன்முகத்துடன் வரவேற்றனர்.

பொன்விழா இலட்சினை வெளியீடுஇலங்கைத் திருநாட்டின்  பழைமைவாய்ந்த அஹதியாக்களில் ஒன்றாகவும் திருகோணமலை மாவட்டத்தின் முதன்மை அ...
27/12/2024

பொன்விழா இலட்சினை வெளியீடு

இலங்கைத் திருநாட்டின் பழைமைவாய்ந்த அஹதியாக்களில் ஒன்றாகவும் திருகோணமலை மாவட்டத்தின் முதன்மை அஹதியாவுமான மூதூர் மத்திய அஹதியா தனது 50 வது ஆண்டில் தடம் பதித்திருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்வை பிரதிபளிக்கும்முகமாக இன்றைய தினம் (22-12-2024) திருகோணமலை மாவட்ட அஹதியாக்கள் சம்மோளத்தின் தலைவர் அஷ்ஷேஹ் M. Y ஹதியதுல்லஹ் மௌலவி அவர்களினால் மூதூர் மத்திய அஹதியாவின் பொன் விழா இலட்சினையானது வெளியீடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் மூதூர் மத்திய அஹதியாவின் தலைவர் A.M அர்ஷத், உப தலைவர் ஹாபில் மௌலவி, செயலாளர் A.M. நுஸ்கி மௌலவி, உப செயலாளர் அயாஸ் மௌலவி மற்றும் ஞாயிறு பாடசாலையின் உப அதிபர் நிஷ்பாக் மௌலவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல் :- A.M. நுஸ்கி (நத்வி)
செயலாளர், மூதூர் மத்திய அஹதியா

தேசிய சாகித்திய விழாவில் கலாபூசணம் விருது பெரும் மூதூரின் இரு இலக்கியவாதிகள் இலங்கையின் இலக்கிய செயற்பாட்டிற்காக அரச இலக...
12/12/2024

தேசிய சாகித்திய விழாவில் கலாபூசணம் விருது பெரும் மூதூரின் இரு இலக்கியவாதிகள்

இலங்கையின் இலக்கிய செயற்பாட்டிற்காக அரச இலக்கிய உயரிய விருதாக கலாபூசணம் விருது வழங்கி வைக்கப்படுகின்றது. 60 வயதிற்கு மேற்பட்ட நீண்டகால இலக்கிய பயணத்தில் செயற்படும் இலக்கிய ஆளுமைகளுக்காக கலாபூஷண விருது பரிந்துரை செயப்படுகின்றது.

அந்தவகையில் 2024 ம் ஆண்டுக்கான தேசிய சாகித்திய விருது வழங்கல் விழாவில் நாடளாவிய ரீதியில் 35 இலக்கிய செயற்பாட்டாளர்களின் மூதூரைச் சேர்ந்த இலக்கியவாதிகளான கிலிவெட்டையை சேர்ந்த பத்துக்குட்டி மதிபாலசிங்கம் அவர்களுக்கும், கட்டைபறிச்சான் பிரதேசத்தை சேர்ந்த இராமலிங்கம் இரத்தினசிங்கம் அவர்களுக்கும் கலாபூஷண விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

கெளரவிக்கப்பட்ட இரு ஆளுமைகளுக்கும் முத்திதழ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

தேசிய சாகித்திய விருது பெற்றுக்கொள்ளும் மூதூரின் இரு எழுத்தாளர்கள் 2023 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துறையில் தேசிய சாகித்திய...
27/11/2024

தேசிய சாகித்திய விருது பெற்றுக்கொள்ளும் மூதூரின் இரு எழுத்தாளர்கள்

2023 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துறையில் தேசிய சாகித்திய விருதுக்கு மூதூரைச் சேர்ந்த இரு எழுத்தாளர்களின் நூல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் சிறுவர் பாடல் பிரிவில் மீரா முகைதீன் அவர்கள் எழுதிய "வண்டில் மாமா" நூலும் , இளையோர் நாவல் பிரிவில் அ.வா.மூஹ்ஸீன் அவர்களின் "காணாமல் போன கன்சுல்" என்ற நூலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இரு பெரும் இலக்கிய ஆளுமைகளுக்கு சிறந்த நூலுக்கான தேசிய சாகித்துய விருதை பெற்றுக்கொண்டமைக்கு முத்திதழ் சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.

ஆங்கில தின போட்டியில் தேசிய மட்ட சாதனை ஆங்கில தின போட்டியில் Hand Writing போட்டியில் இரண்டாம் இடம் மூ/அந் நஹார் மகளிர் ம...
18/11/2024

ஆங்கில தின போட்டியில் தேசிய மட்ட சாதனை

ஆங்கில தின போட்டியில் Hand Writing போட்டியில் இரண்டாம் இடம் மூ/அந் நஹார் மகளிர் மகா வித்தியாலயதில் கல்வி பயிலும் தரம் 9 ஐ சேர்ந்த மாணவி எம்.எஸ்.ஹயா ஹானி தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரை பாயிற்றுவித்த ஆங்கிலப்பாட ஆசிரியர் மற்றும் வகுப்பாசிரியர் மற்றும் அதிபர் உள்ளிட்ட பெற்றோருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் முத்திதழ் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.

மூதூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் புதிய தலைவர் பதவியேற்பு மூதூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பணிப்பாளர் சபையின்...
06/11/2024

மூதூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் புதிய தலைவர் பதவியேற்பு

மூதூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பணிப்பாளர் சபையின் தீர்மானத்திற்கு அமைவாக புதிய தலைவராக லாபீர் பாத்திமா நிரோஷா என்பவர் கௌரவ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1936 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மூதூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் முதலாவது பெண் தலைவர் இவர் என்பதும் விசேட அம்சமாகும்.

தேசிய மட்ட இரண்டாம் மொழி சிங்களப் போட்டியில் தி/மூ/ அந்நகார் மகளிர் பாடசாலைக்கு 5ம் இடம்.2024.11.03 ஆம் திகதி தேசிய ரீதி...
05/11/2024

தேசிய மட்ட இரண்டாம் மொழி சிங்களப் போட்டியில் தி/மூ/ அந்நகார் மகளிர் பாடசாலைக்கு 5ம் இடம்.

2024.11.03 ஆம் திகதி தேசிய ரீதியில் நடைபெற்ற இரண்டாம் மொழி சிங்கள போட்டியில் வாசிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தரம் 08 யில் கல்வி கற்கும் M.I றீமா செரீன் 5ம் இடத்தை பெற்று பாடசாலைக்கும் மூதூர் மண்ணுக்கும் பெருமையினை தேடி தந்திருக்கின்றார்.

தோப்பூர் அல்ஹம்றா கல்லூரி தேசிய மட்டத்தில் சாதனைஅகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட போட்டியில் தோப்பூர் அல்ஹம...
24/10/2024

தோப்பூர் அல்ஹம்றா கல்லூரி தேசிய மட்டத்தில் சாதனை

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட போட்டியில் தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவன் ஆர்.எம்.அஹ்ஸன் 3 ஆம் இடத்தை பெற்றுள்ளார். 18 வயதிற்கு உட்பட்ட தட்டெறிதல் போட்டியில் 45.78 மீற்றர் தூரம் எறிந்து இச்சாதனையை படைத்துள்ளார்.

இது இவர் பெறுகின்ற தேசிய மட்டத்திலான இரண்டாவது பதக்கமாகும். இம் மாணவனுக்கு விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் எம்.சுஹைல் பயிற்சி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று வருடமாக அல் ஹம்றா மத்திய கல்லூரி தேசிய மட்டத்தில் தொடர்ச்சியான பதக்கங்களை பெற்று வருகின்றது. இவ்வெற்றியில் பங்குகொள்ளும் அனைத்து தரப்பினருக்கும் முத்திதழ் சார்பிலான வாழ்த்துக்கள்.

அல் ஹிலால் மத்திய கல்லூரி மாணவன் தேசிய மட்டத்தில் சாதனை. 2024ம் ஆண்டுக்கான தேசியமட்ட தமிழ் மொழி தினப் போட்டிகள் கொழும்பு...
24/10/2024

அல் ஹிலால் மத்திய கல்லூரி மாணவன் தேசிய மட்டத்தில் சாதனை.

2024ம் ஆண்டுக்கான தேசியமட்ட தமிழ் மொழி தினப் போட்டிகள் கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் கடந்த 19ம் திகதி நடைபெற்றது.

இதில்கலந்து கொண்ட மூதூர், தி/மூ/அல் ஹிலால் மத்திய கல்லூரியில், தரம் - 12, கணிதப் பிரிவில் கல்வி பயிலும் நிஹாஸ் முகமட் ஸவ்மர் என்ற மாணவன் அறிவிப்பாளர் போட்டியில் கலந்து கொண்டு, தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினை பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

இவர் வலய மட்ட, மாகாண மட்டப் போட்டிகளிலும் இவர் முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இம்மாணவனை பயிற்றுவித்த அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் பெற்றோர்கள், வெற்றியீட்டிய மாணவன் மற்றும் வலய அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் முத்திதழ் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மழைச்சாரல் தொடர்கிறதுநூல் வெளியீடு தோப்பூர் ஷாக்கிர் கிலுறுதீன் எழுதிய "மழைச்சாரல் தொடர்கிறது" என்ற கவிதை நூலானது நேற்றை...
14/10/2024

மழைச்சாரல் தொடர்கிறதுநூல் வெளியீடு

தோப்பூர் ஷாக்கிர் கிலுறுதீன் எழுதிய
"மழைச்சாரல் தொடர்கிறது" என்ற கவிதை நூலானது நேற்றைய தினம் 2024.10.13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தோப்பூர், தி/மு/ பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் தோப்பூர் கலை இலக்கியப் பேரவையின் அணுசரனையோடு மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், முன்னாள் பீடாதிபதியுமான M.L. பௌசுல் அமீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் B. ஹாஜா முகைதீன் அவர்கள் கலந்து கொண்டதோடு, இந்நூலானது தோப்பூர் கலை இலக்கியப் பேரவையின் மூன்றாவது வெளியீடாகும்.

சமூக நல்லிணக்க நடைபயணம்இலங்கை மத்திய அஹதியா சம்மேளனத்தின் "சகவாழ்வு திட்டத்தை நடைமுறைப்படுத்தல்"  ஆலோசனையின் பெயரில் மூத...
10/10/2024

சமூக நல்லிணக்க நடைபயணம்

இலங்கை மத்திய அஹதியா சம்மேளனத்தின் "சகவாழ்வு திட்டத்தை நடைமுறைப்படுத்தல்" ஆலோசனையின் பெயரில் மூதூர் மத்திய அஹதியாவினால் கடந்த 6-10-2024 "சமூக நல்லிணக்கத்துக்கான நடைபயணம்"
என்ற தொனியில் அஹதியா ஞாயிறு பாடசாலை மாணவர்களதும், ஆசிரியர்களதும் ஒத்துழைப்போடு இந் நிகழ்வு நடைபெற்றது.

அந்த வகையில் மூதூரில் உள்ள பௌத்த, கிறிஸ்தவ, இந்து மதங்களது வழிபாட்டு தளங்களுக்கு சென்று அவர்களோடு சமூக நல்லிணக்கம் பற்றி கலந்துரையாடியதோடு அவர்களது ஞாயிறு அறநெறி வகுப்புகள் சார்ந்த விடயங்கள் பற்றியும் அறிந்து கொள்ளமுடிந்தது.

இந்நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் மூதூர் மத்திய அஹதியா சார்பாக மூன்று மதத்தினது அறநெறி பாடசாலையின் அதிபர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நூல் வெளியீட்டு விழா  பர்ஹான் முஸ்தபா அவர்கள் எழுதிய "மரக்கல மீகாமன்" ரொபர்ட் நொக்ஸின் வரலாற்று புனைகதை நூல் வெளியீட்டு ...
03/09/2024

நூல் வெளியீட்டு விழா

பர்ஹான் முஸ்தபா அவர்கள் எழுதிய "மரக்கல மீகாமன்" ரொபர்ட் நொக்ஸின் வரலாற்று புனைகதை நூல் வெளியீட்டு விழா 2024.09.01 ஞாயிற்றுக் கிழமை மூதூர் பேர்ள் கிரேன்ட் மண்டபத்தில் நடுத்தீவு வலுவூட்டல் மற்றும் நலன்புரி சங்கத்தினால் வெளியீடு செய்யப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலாநிதி றவூப் ஸெய்ன் (PhD), மற்றும் நூல் திறனாய்வாளராக எழுத்தாளரும், ஆய்வாளருமான சிறாஜ் மஸ்ஹூர், அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு பெருந்திரளான வாசகர்ளும் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வை அஷ்ஷேஹ் N.சியாத் (நழீமி) தலமை தாங்கியதோடு, வெளியீட்டு அமைப்பின் தலைவர் S. M. முஜீப் அவர்களும் பங்கேற்று நேர முகாமைத்துவத்தின் அடிப்படையில் சிறந்த முறையில் வடிவமைத்து நெறிப்படுத்தி சிறப்பித்திருந்தார்.

சகோதரர் VM.ஹசீன் அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு நூலின் முதல் பிரதியினை நூலாசிரியரின் தாயார் சபியா உம்மா மற்றும் பாரியார் ஹிதாயா பர்ஹான் வழங்கி வைக்க தொழிலதிபர் வைத்தியர் Y.ஜெஸ்மின் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

இந்நூல் மூதூர் JMI வெளியீட்டகத்தினால் பதிப்பு செய்யப்பட்டதோடு, JMI உரிமையாளர் ஆஷா பாலின் அவர்களினால் நூலாசிரியரின் சார்பில் எழுத்தாளரின் மகள் எப்.ஹரீனா செரீனுக்கு முதல் அரையாண்டுக்கான சிறந்த நாவலுக்கான விருதும் வழங்கி வைக்கப்பட்டது.

Address

Mutur
31200

Alerts

Be the first to know and let us send you an email when Muththithal முத்திதழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muththithal முத்திதழ்:

Share

Category