04/12/2025
சமூக ஊடகம் முழுவதும் மீண்டும் கேலிக்குள்ளாகியுள்ளார்.. ஆனால் ஏன் என்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஏன் என்பதற்கான விளக்கத்தை பார்ப்போம்..
இலங்கை IMFஉடன் நிபந்தனையில் பணி புரிகிறது. எமது பட்ஜட்டை கூட அவர்கள் அனுமதியளிக்கவேண்டியுள்ளது. 2026ம் ஆண்டு பட்ஜட் இதுவரை அனுமதியளிக்கப்படவில்லை.
இந்த சூழலில் நாம் எதிர்கொண்டுள்ள பேரிடர் என்பது மிக மிக துர்திஷ்டவசமானது.
IMF நிபந்தனைகள் படி மூலதன செலவுகள் 4-4.5% இருக்க வேண்டும். அதாவது 1,200 கோடிகள் மட்டுமே மூலதன செலவுகளாக செய்ய முடியும்..
மூலதன செலவுகள் என்பன, நீண்ட காலத்திற்கு பயன்படும் சொத்துகள் உருவாக்க, புதுப்பிக்க, விரிவாக்கம் செய்யச் செலவிடும் நிதியாகும். இந்த நிதியை கொண்டு தான் தற்போது அழிந்துபோயுள்ளவற்றை மீள் உருவாக்கம் செய்ய முடியும்
2026ம் ஆண்டுக்கு நாம் ஒதுக்கியுள்ள நிதி 1,800 பில்லியன்கள் அதாவது 180,000 கோடிகள்.
இதுவரை ஏற்பட்டுள்ள சேதங்களில் இருந்து மீண்டு வருவதற்கு அல்லது ஏற்பட்டுள்ள சேதங்களின் பெறுமானம் என்பது சுமார் 300,000 கோடிகள்.
அதாவது, IMF நிபந்தனையின் படி நாம் பட்ஜட்டை தயாரித்தால், இந்த பேரிடரின் சேதங்களை மீள் கட்டியமைக்க 3 வருடங்கள் ஆகும். அதுவும் மூலதன செலவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள அவ்வளவு நிதியையும் இதற்கு மட்டும் பயன்படுத்தினால் மட்டுமே அதுவும் சாத்தியம்.
2026ம் ஆண்டிற்கு வழங்கப்பட்டுள்ள பட்ஜட் படி செயற்பட்டால் இவ்வாறு தான் செயற்பட முடியும். இந்த நிலை மாறவேண்டும் எனில் எமக்கு இருப்பது இரண்டு வழிகள்..
1-இந்த பேரிடரை காரணமாக்கி IMF உடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து நிபந்தனைகளை மாற்றியமைத்தல்
2- கடன் வழங்குனர் | மானியம் வழங்குபவர்களுடன் இனைந்து கால அவகாசங்களை பெற்றுக்கொண்டு IMF இடம் செல்லுதல்..
இந்த ஒற்றை வரிகளுக்கு பின்னால் இருக்கும் விளக்கத்தை அறியாத சாமானிய மக்களும், அந்த சாமானிய மக்களின் லைக்குகளை காசாக்கும் மீடியா கும்பல்களும் இக் கூற்றை கேலியாக மாற்றி வைத்துள்ளது..
அரசியல் என்பது கேலிகூத்து விடையமல்ல, அதை வைத்து காலத்தை கடத்த.. மக்களை தெளிவூட்டதலை தாண்டிய சிறந்த அரசியலும் இருக்க முடியாது. இதை செய்ய வேண்டிய மீடியாக்களும் தங்களடைய பண வரவை மட்டும் தான் பார்கிறது.
குறிப்பு - 2020ம் ஆண்டும் இப்படித்தான், கோட்டா கையை தூக்கினாலும் trending தான். மற்றைய எல்லாரையும் மீடியா கலாய்த்த காலம், சஜித்துக்கு பால் போத்தல் என பெயர் வைத்த காலமும் அது தான். தறபோது இது அனுர - சஜித் என மாறியுள்ளது.. இது அரசிற்குத்தான் நல்லதல்ல.