
09/09/2025
கட்டார் தலைநகர் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தோஹாவில் உள்ள அவர்களின் பேச்சுவார்த்தை குழு தப்பித்துள்ளதாக ஹமாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்த தாக்குதல் "சந்தேகத்திற்கு இடமின்றி நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் அமைதிக்கான எந்த உடன்பாட்டையும் எட்ட விரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.இதேவேளை, மூத்த ஹமாஸ் தலைவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறியதை அடுத்து, தோஹாவில் நடந்த கூட்டத்தின் போது அவர்களின் பேச்சுவார்த்தை குழு குறிவைக்கப்பட்டதாக ஹமாஸ் முன்பு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.