22/05/2025
கல்வியால் சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளை நோக்காகக் கொண்டு சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி மற்றும் ஐ.என்.எஸ். ஒன்லைன் கல்லூரி இணைந்து நாடளாவிய ரீதியில் நடைபெற்ற மாணவர்களின் திரமைக்காண தேடல் கழம் போட்டியில் சுமார் 1000 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற 1க்ஷ300 மாணவர்கள் கௌரவிக்கும் வகையில் பரிசளிப்பு மற்றும் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு மே மாதம் 18 ஆம் திகதி காலை 9 மணி அளவில் குருணாகல் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் I N S ஒன்லைன் கல்லூரியின் நிர்வாக தலைவி Naja தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக FN Media Network நிறுவனத்தின் உரிமையாளரும், சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சியின் குருணாகல் மாவட்ட செய்தியாளரும் சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் குளும்ப பனிப்பாளர் மற்றும் ஊடகப் பணிப்பாளரும்,
முழு இலங்கைக்குமான சமாதான நீதிவானும் LB Gurup Lanka boys நிறுவனத் ஊடக ஒருங்கிணைப்பாளரும்
மக்களின் மகிழ்ந்தன் தேசமானிய தேச கீர்த்தி, Man of the nation 2024 அமெரிக்க பல்கலைக்கழகத்தின் மூலமாக மனித சிறப்பு தங்க விருதினை பெற்ற ஊடகவியலாளர் A W M FASLAN
இஸ்லாமிய கலாசார ஒருங்கிணைப்பாளர் ரிஸ்வான்,
ரெயின்போ கண்ஸ்ட்ரக்ஷன் முகாமைத்துவ பணிப்பாளர் மொஹமட் அசீம்
உள்ளிட்டோர்
கலந்து சிறப்பித்தார்.
இதன் போது மாணவர்களின் திறமைக்கு முதலிடம் வழங்கப்பட்டு அவர்களின் திறமை வெளிக்கொணரப்பட்டது. இந்நிகழ்வில் மாணவர்களது திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் கழை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இறுதியாக பிரதம அதிதிகளுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.