29/09/2025
வளர்ந்து வரும் இளம் ஊடகவியலாளர்களை ஊக்குவித்து, களம் அமைத்துக் கொடுப்பதற்காய் பிறைநிலா ஊடகம் நாடுபூராகவும் ஊடகத்துறைசார் வழிகாட்டல்களையும், பயிற்சிப் பட்டறைகளையும் வழங்கிக் கொண்டிருக்கின்றது.
அண்மையில் எமது பிரதேசத்தை அண்டிய ஊடக ஆர்வலர்களுக்கான ஊடகத்துறைசார் பயிற்சிப் பட்டறையொன்று எமது பிரதேசத்தில் இடம் பெற்றது. இதில் பல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கு பற்றியிருந்தனர். பங்குபற்றிய மாணவர்களில் ஊடகத்துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் சிலர் பிறைநிலா ஊடக வலையமைப்பின் பாடசாலைக்கான ஊடக ஒருங்கிணைப்பாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
தொடர்ச்சியாக பங்கு பற்றிய மாணவர்களில் ஒருங்கிணைப்பாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களை அறிமுகம் செய்து வைக்கின்றோம்.
பொல்கஹயாய, அஸ்ஸிராஜ் மு.ம. வித்தியாலயத்திலிருந்து எமது ஊடக ஒருங்கிணைப்பாளர்களாக இந்த மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
பாடசாலையுடன் தொடர்புடைய முக்கிய செய்திகளை ஊடகங்களுக்கு வழங்கும் செய்தியாளர்களாக இவர் இனி செயற்படுவார் இன்ஷாஅல்லாஹ்.
வாழ்த்துகள்...