Equal Media

Equal Media truth needs to be revealed to the world.
உண்மையை உலகுக்கு சொல்வோம்.
ලෝකයට සත්යය කියන්න.

24/05/2025

පුත්තලම මූලික රෝහලේ තත්ත්වය... අදාළ බලධාරීන්ගේ අවධානය පිණිසයි....

புத்தளம் தள வைத்தியசாலையின் நிலை... சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு....

SM Isham Marikar Anura Kumara Dissanayake Ali Sabri Raheem Puttalam NPP

20/05/2025

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ரஃபின் ஒலுவில் வீடு தென் கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு கையளிப்பு.!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுக்குச் சொந்தமாக இருந்த ஒரேயொரு அசையா சொத்தும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு 2025.05.19 ஆம் திகதி பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் தலைமையில் உபவேந்தரின் அலுவலகத்தில் இடம்பெற்ற எளிமையான நிகழ்வு ஒன்றின்போது மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களது மகன் அமான் அஷ்ரபால், பதில் உபவேந்தர் உள்ளிட்ட நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கை முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்தில் காத்திரமான பங்களிப்பைச் செய்தவர்களில் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் முதன்மையானவராகிறார்.

1995 இல் தென்கிழக்குப் பல்கலைகழகத்தை ஸ்தாபிதத்தினூடாக இந்த பிராந்தியத்தினதும் முஸ்லிம் சமூகத்தினதும் ஒரு தேசிய பல்கலைக்கழகமாக இது உருவாக்கப்பட்டுள்ளதால் முழு இலங்கை மக்களினதும் கல்வி முன்னேற்றத்துக்கு பங்களிப்பு செய்தவர்களில் முதன்மையானவர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.

அவருடைய அயராத முயச்சி மற்றும் அவருக்கிருந்த அரசியல் பலம் போன்றவற்றைப் பயன்படுத்தி, அப்போதைய ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா அம்மையாரைப் பயன்படுத்தி இலங்கைக்கான தேசிய பல்கலைக்கழகங்களில் ஒன்றை முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற ஒலுவில் பிரதேசத்திலே ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து வந்த கால கட்டத்தில் இரண்டு பீடங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இன்று ஆறு பீடங்களுடன் உள்வாரியாக மாத்திரம் 8000 அளவிலான மாணவர்களையும் அதற்குச் சமாந்திரமான அளவில் வெளிவாரி மாணவர்களையும் கொண்டு இயங்கி வருகின்றது.
அஷ்ரப் அவர்களினால்; அவர்களது அரசியல் பலத்தினால் உருவாக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி வியக்கத்தக்கதாக இருந்த போதிலும் கூட ஒலுவில் பிரதான வீதிக்கு அண்மித்ததாக தனது இறுதிக் காலத்தில் வாசிப்பதற்க்காக அவரால் அமைக்கப்பட்ட வீடு ஒன்று இருந்து வந்தது. அந்த வீட்டையும் அந்த சுற்றியுள்ள மிகப்பெறுமதி வாய்ந்த நிலத்தினையும் அஷ்ரப் அவர்களது மகன் அமான் அஷ்ரப் அவர்களால் அவரது தாயார் பேரியல் அஷ்ரப் அவர்களது முழு வழிகாட்டலின் கீழ் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு சட்டபூர்வமான ஆவணங்களுடன் நன்கொடையாக கையளிக்கப்பட்டது.

குறித்த காணியை பெற்றுக் கொள்வதில் ஆரம்பக் கட்டத்தில் அயராது உழைத்த முன்னாள் உபவேந்தர் அபூபக்கர் றமீஸ் அவர்களும் அவரோடு இணைந்திருந்த சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் அவர்களும் விஷேடமாக குறித்த நிகழ்வுக்கு பதில் உபவேந்தர் அவர்களினால் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

கவனிப்பாரற்றுக் கிடந்த குறித்த வீட்டையும் அதனைச் சூழவுள்ள காணியையும் கல்வி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் பொருட்டு பல்கலைக்கழகத்துக்கு பெற்றுக்கொள்வதற்காக மீண்டும் பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் பீடாதிபதி அஷ் செய்க் எம்.எச்.ஏ. முனாஸ் மற்றும் சிரேஷ்ட உதவிப்பதிவாளர் எம்.எச். நபார் உள்ளிட்ட குழுவினர் எடுத்துக் கொண்ட மீள் முயச்சிகள் காரணமாகவும் குறித்த காணி கைமாறல் ஏற்பட்டிருன்தது.

இந்த நிகழ்வுகளிலே பல்கலைக்கழகத்தின் சார்பில் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் பீடாதிபதி அஷ் செய்க் எம்.எச்.ஏ. முனாஸ், பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.எச். ஹாறுன், பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், நூலகர் எம்.எம். றிபாவுடீன், சிரேஷ்ட உதவிப்பதிவாளர் எம்.எச். நபார், மற்றும் சட்டம் மற்றும் ஆவணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட உதவிப்பதிவாளர் சட்டத்தரணி ஏ.ஆர்.எம். சுல்பி ஆகியோரும் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களது மகன் அமான் அஷ்ரபுடன் வருகை தந்திருந்த குழுவினரும் பங்குகொண்டிருந்தனர்.
இங்கு பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், அமான் அஷ்ரப், முன்னாள் உபவேந்தர் அபூபக்கர் றமீஸ், சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், பீடாதிபதிகளான பேராசிரியர் எம்.எம். பாஸில், அஷ் செய்க் எம்.எச்.ஏ. முனாஸ் மற்றும் கலாநிதி எம்.எச். ஹாறுன் ஆகியோரால் பல்வேறு கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் மறைத்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களுடைய கனவு இல்லம்; தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு கையளிக்கப்பட்டிருக்கிறது. இது வரலாற்றில் முக்கியமான ஒரு விடயமாகும். இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிய அஷ்ரப் அவர்களது புதல்வர் அமான் அஷ்ரப் அவர்களுக்கும் அஷ்ரப் அவர்களது துணைவியார் பேரியல் அஷ்ரப் அவர்களுக்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகத்தின் சார்பில் பதில் உபவேந்தர் நன்றி தெரிவித்தார்.

ரியாத்தில் கடல் கடந்தும் கலை கட்டிய கல்வி வழிகாட்டி முகாம்ஏக இறைவனின் திருப்பெயரால்...🔹 *இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்**ரி...
18/05/2025

ரியாத்தில் கடல் கடந்தும் கலை கட்டிய கல்வி வழிகாட்டி முகாம்

ஏக இறைவனின் திருப்பெயரால்...

🔹 *இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்*
*ரியாத் மத்திய மண்டல விழி அமைப்பு நடத்திய 2025 - ஆம் ஆண்டிற்கான நேரடியான மூன்றாவது கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி*

🔹 *உலகை மாற்றுவதற்கு உங்கள் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் கல்வியே , உலகை மட்டுமில்லாமல் ஒவ்வொருவரையும் மாற்ற கூடிய கல்வியை அனைவரும் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்...*

🔹 இறைவன் அருளால் ரியாத் மண்டல விழி சார்பாக கல்வி வழிகாட்டி சிறப்பு நிகழ்ச்சி *மே 16 அன்று சுலை இஸ்திராஹ்வில் சிறப்பாக நடைபெற்றது*.

🔹இந்நிகழ்ச்சிக்கு நியூ செனையா கிளை தலைவர் *மெளலவி அபுஹுரைரா* அவர்கள் கிராத் ஓத , மண்டல துணைச் செயலாளர் *காட்டுவா அஜ்மி* அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, மண்டல தலைவர் *மீமிசல் நூர் முஹம்மது* அவர்கள் *இதுபோன்ற கல்வி வழிகாட்டி நிகழ்வின் முக்கியத்துவம்* குறித்தும் *இது போன்ற நிகழ்வுகள் வைர வியாபாரத்திற்கு ஒப்பான மதிப்பு மிக்கவை , கலை நிகழ்ச்சிகளுக்கு காட்டும் ஆர்வம் கல்வி நிகழ்ச்சிகளுக்கு மக்கள் காட்டாது போனாலும் நாங்கள் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டிக் கொண்டே இருப்போம்* என்ற பொருளில் தலைமையுரையாற்றினார்.

🔹 இந்நிகழ்வில் முத்தாய்ப்பாக *ஆசிரியர் பக்ருதீன்* அவர்கள் *தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து வகையான பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து துறை சார்ந்த படிப்புகளை எடுத்து கூறி அதற்கான வேலைவாய்ப்புகள் குறித்தும் மற்றும் அதன் பலன்கள் குறித்தும்* எடுத்துரைக்க , மண்டல விழி துணைச் செயலாளர் *முனைவர் மீரான்* அவர்கள் *சவூதி அரேபியாவில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களை* வழங்கினார்.

🔹மேலும் 25 ஆண்டுகளுக்கு மேலாக லண்டனில் வசித்து வரும் சமூக ஆர்வலர் மற்றும் தனியார் கல்வி வழிகாட்டி நிறுவனத்தின் உரிமையாளருமான *சகோ.லண்டன் பைசல்* அவர்கள் *இந்தியாவிலிருந்து லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று மேற்படிப்புகளுக்கு செல்வோருக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி அதற்கு தமிழக அரசு வழங்கி வரும் சலுகைகள் குறித்தும்* எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.

🔹மேலும் கலந்து கொண்ட *மாணவ, மாணவிகள் மற்றும் பொற்றோர்களின் சந்தேகங்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் விளக்கமளித்தனர்.*

🔹இந்நிகழ்வை மண்டல விழி செயலாளர் *ஷேக் அப்துல்லா* அவர்கள் தொகுத்து வழங்க, நிறைவாக மண்டல துணை செயலாளர் *ஆர்.எஸ் மங்கலம் சைபுல்லாஹ்* அவர்கள் நன்றியுரையாற்றினார்.

🔹 இந்த கல்வி வழிகாட்டு முகாமில் பெருந்திரளான பெற்றோர்களும் , மாணவக் கண்மணிகளும் கலந்து கொண்டு, தங்களுக்கு எழுந்திருந்த சந்தேகங்களை கேட்டறிந்து, தெளிவுப் பெற்றார்கள்.

தகவல்

*இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்(IWF)*
*தகவல் தொழில்நூட்ப அணி*
*மத்திய மண்டலம்*
*ரியாத் - சவூதி அரேபியா*

ரியாத் இந்தியா சங்கம் (RIA) சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்வு.சமூக ஒற்றுமையும், சகோதரத்துவத்தையும்  ஊக்குவிக்கும் மரபை தொட...
18/03/2025

ரியாத் இந்தியா சங்கம் (RIA) சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்வு.

சமூக ஒற்றுமையும், சகோதரத்துவத்தையும் ஊக்குவிக்கும் மரபை தொடர்ந்து பல வருடங்களாய் கடைப்பிடித்து வரும் ரியாத் இந்தியா சங்கம் (RIA), இந்த வருடமும் முந்தைய வருடங்களைப்போல சமூக நல்லிணக்க இஃப்தார் கூட்டத்தை ஏற்பாடு செய்தது.

கடந்த மார்ச்15 அன்று சவூதி அரேபியா தலை நகரம் ரியாத் - மலாஸில் உள்ள அல்மாஸ் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இஃப்தார் கூட்டத்தில் முந்நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இஃப்தார் நிகழ்வு மாஸ்டர் அமான் மற்றும் அமால் அவர்களின் அழகிய குரலில், குர்ஆன் வசனங்களுடன் ஆரம்பிக்கப்பட்டது, புண்ணிய அனீஷ் தொகுத்து வழங்க, பி.வி. அப்துல் மஜீத் ரமலான் வாழ்த்தை பகிர்ந்தார். இஃப்தார் நோன்பு திறப்பை தொடர்ந்து மக்ரிப் தொழுகை நடைபெற்றது.

தொழுகையை தொடர்ந்து, ரியாத் இந்தியா சங்கம் (RIA), செயலாளர் அருண் குமார் ராஜசேகர் வரவேற்பு உரையாற்றினார்கள். RIA தலைவர் உமர் குட்டி தலைமை உரை நிகழ்த்தினார். ஆலோசனை குழு உறுப்பினர் ஜான் கிளீடஸ், இந்திய சமூகத்திற்கு RIA செய்து வரும் பங்களிப்புகளை விரிவாக விளக்கினார். சிறப்பு விருந்தினர், இந்திய தூதரகத்தின் துணைத் தூதர் அபு மத்தன்

ஜார்ஜ், தனது ரமலான் செய்தியை மக்களிடம் பகிர்ந்துகொண்டார் மற்றும் RIAவின் இஃப்தார் நிகழ்வில் பங்கேற்ற மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து, RIA 25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டங்களுக்கான லோகோவை வெளியிட்டார். மேலும் இந்நிகழ்வில் இந்திய தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் மொயின் அக்‌தர் மற்றும் ரியாத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் விருந்தினர்களாய் பங்கேற்று தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இறுதியில் RIA கலாச்சார ஒருங்கிணைப்பாளர் ஜுபின் பால் நன்றி கூற, இஃப்தார் நிகழ்வு இரவு உணவுடன் நிறைவுற்றது...

இலங்கை மற்றும் சவூதி அரேபியாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் விதமாக இலங்கை கலாசார மன...
27/12/2024

இலங்கை மற்றும் சவூதி அரேபியாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் விதமாக இலங்கை கலாசார மன்றம் (SLCF) மற்றும் சவுதி அரேபியாவுக்கான இலங்கை தூதரகம் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி பிரம்மாண்டமாக இன்று 27.12.2024 நிறைவு பெற்றது.

Riyädh Lankanš Ść Equal Media Sri Lankans living in Saudi Arabia��

ரியாத் தமிழ்ச் சங்கம் வழங்கும் வருடாந்திர மாணவர் கலை விழா More information +966 558545740          சவூதிவாழ் தமிழ் மன்றம...
06/11/2024

ரியாத் தமிழ்ச் சங்கம் வழங்கும் வருடாந்திர மாணவர் கலை விழா
More information +966 558545740 சவூதிவாழ் தமிழ் மன்றம் - Saudi Living Tamil Forum Thambis Indian Restaurant

*ரியாத்தில் மரணம் அடைந்த ஐயப்பன் உடலை தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்(IWF)*🔹 கள்ளக்குறிச்ச...
06/11/2024

*ரியாத்தில் மரணம் அடைந்த ஐயப்பன் உடலை தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்(IWF)*

🔹 கள்ளக்குறிச்சி மாவட்டம் , தியாகதுருகம் வட்டம் , புக்கலம் கிராமம் , பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த சேர்ந்த *ஐயப்பன்* என்பவர் சவுதி அரேபியா ரியாத்தில் கட்டுமான பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 27- 10- 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் தங்கி இருந்த அறையில் மரணம் அடைந்தார், இந்த தகவலை இறந்து போன ஐயப்பனின் உறவினர் கஜேந்திரன் அவர்கள் ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது அவர்களை தொடர்பு கொண்டு இறந்து போன ஐயப்பனின் உடலை தாயகத்திற்கு அனுப்பி வைக்க உதவி செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொண்டார்.

🔹இதனைத் தொடர்ந்து மண்டல தலைவர் அவர்கள் ரியாத் மண்டல சமூகநலத்துறைக்கு தகவல் கொடுக்க தகவலைப் பெற்றுக் கொண்ட ரியாத் மண்டல சமூக நலத்துறை செயலாளர் *கொடிப்பள்ளம் சாதிக் பாஷா* அவர்கள் விரைந்து செயல்பட்டு இந்திய தூதரகத்தின் உதவியுடன் அனைத்து பணிகளையும் முடித்து கடந்த 4/11/2024 , திங்கட்கிழமை இரவு ரியாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை வழியாக திருச்சி விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

🔹5/11/2024 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி அளவில் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றடைந்த ஐயப்பனின் உடலை *திருச்சி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள்* மற்றும் ஐயப்பனின் உறவினர்கள் ஐயப்பனின் உடலை பெற்று *தமுமுக ஆம்புலன்சின்* மூலம் ஐயப்பனின் சொந்த ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வட்டம் புக்கலம் கிராமத்தில் இருக்கக்கூடிய அவர்களுடைய இல்லத்தில் கொண்டு போய் சேர்த்தனர்.

🔹ஐயப்பனின் உடலை பெற்றுக் கொண்ட அவர்களுடைய உறவினர்கள் *ஐயப்பனின் உடலை சவுதி அரேபியா ரியாத்தில் இருந்து எங்கள் வீடு வரை கொண்டு வந்து சேர்த்த இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் & மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.*

🔹 இந்த ஒப்பற்ற பணிக்கு வளைகுடா பொறுப்பாளர் மாநில பொருளாளர் *பொறியாளர் சபியுல்லா கான்* அவர்களும், IWF மண்டல இணைச்செயலாளர் *திருக்கோவிலூர் ஷாக்கீர் பேக்*‌அவர்களும் , சமூகநலத்துறை துணைச் செயலாளர் *காட்டுவா அஜ்மீ* அவர்களும் , திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் *ராஜா முஹம்மது* , கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் *பசல் முஹம்மது*, கள்ளக்குறிச்சி மாவட்ட மமக செயலாளர் *முகமது அலி*, கள்ளக்குறிச்சி மாவட்ட தொண்டரணி செயலாளர் *நிஷாத் உசேன் புகாரி* , நகரத் தலைவர் *சையது சைஃப்* , தமுமுக நகர செயலாளர் *சையது ஹயும்* , தமுமுக துணை செயலாளர் *செளகத் அலி* , மமக துணை செயலாளர் *ஷேக் சுபி* , நகர பொருளாளர் *ஷாகுல் ஹமீது*, தொண்டரணி *சையது அனிஸ்*, தொண்டரணி *சப்தர் அலி* , தொண்டரணி *அஸ்லம்* உள்ளிட்டோர் உடன் இருந்து உதவினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

என்றென்றும் மனிதநேய பணியில்:::

*இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்(IWF)*
*சமூகநலத்துறை*
*மத்திய மண்டலம்*
*ரியாத் - சவுதி அரேபியா*

21/10/2024

முதல் 30 மாணவர்கள் மட்டுமே இந்த வகுப்புகளில் அனுமதிக்கப்படுவார்கள்.
பதிவுகளுக்கு இறுதி திகதி 25/10/2024.

மிக இலகுவான மட்டும் குறைந்த கட்டண முறையில் உங்கள் எதிர்கால அடைவுகளுக்கு நாம் உறுதி தருகிறோம்.

உங்கள் கனவுகள், தொழில் ஆசைகள்,
திறன்கள் மற்றும் எமது வாழ்வில் அத்தியவசியமான தேவைகளை...
எப்படி?
எங்கே?
பெற்றுக்கொள்ளலாம் என பல சுவாரஸ்யமான தகவல்களோடு மாணவர்களுக்காக
SJD ASIAN TUTOR (Online)வீர நடை போடுகிறது.

1-A level Political Science
2-O level & A level Islam
3-O level & A level Arabic with Arabic literature
4-University application guidance
5-Motivational session

ஒரு பாடத்திற்கு மாதம் 6 வகுப்புக்கள்.

மாதம் 2000 ரூபா மட்டும் தான் உங்கள் வைப்பு.

சிறந்த பலனை அடைவீர்கள் என்று நாம் உறுதிகொள்கிறோம்.

பதிவுகளுக்கு கீழ் காணும் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் எமது Whatsapp குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
0755801241(Whatsapp)

⭕Whatsapp Group Link

https://chat.whatsapp.com/GnVcZXpq7wGLjADpMPcmpT
(உங்கள் கல்லூரி நண்பர்கள் பயனடைய பகிர்ந்து கொள்ளுங்கள்

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகவுக்கு Anura Kumara Dissanayake சவுதி அரேபியா அரசின் வாழ்த்து...
24/09/2024

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகவுக்கு Anura Kumara Dissanayake சவுதி அரேபியா அரசின் வாழ்த்துச் செய்தி.

𝐁𝐎𝐎𝐊 𝐘𝐎𝐔𝐑 𝐓𝐈𝐂𝐊𝐄𝐓𝐒 𝐇𝐄𝐑𝐄!!!𝑰𝒔𝒂𝒊 𝑲𝒐𝒏𝒅𝒂𝒕𝒕𝒂𝒎 - 𝑨𝒏𝒅𝒓𝒆𝒂 𝑱𝒆𝒓𝒆𝒎𝒊𝒂𝒉 𝒍𝒊𝒗𝒆 𝒔𝒉𝒐𝒘 𝒂𝒕 𝟕𝑷𝑴, 𝑻𝒉𝒖𝒓𝒔𝒅𝒂𝒚, 𝟑𝒓𝒅 𝑶𝒄𝒕𝒐𝒃𝒆𝒓 𝟐𝟎𝟐𝟒, 𝑹𝒊𝒚𝒂𝒅𝒉𝐊𝐇𝐎𝐁𝐀𝐑:𝑺𝒖𝒃...
10/09/2024

𝐁𝐎𝐎𝐊 𝐘𝐎𝐔𝐑 𝐓𝐈𝐂𝐊𝐄𝐓𝐒 𝐇𝐄𝐑𝐄!!!
𝑰𝒔𝒂𝒊 𝑲𝒐𝒏𝒅𝒂𝒕𝒕𝒂𝒎 - 𝑨𝒏𝒅𝒓𝒆𝒂 𝑱𝒆𝒓𝒆𝒎𝒊𝒂𝒉 𝒍𝒊𝒗𝒆 𝒔𝒉𝒐𝒘 𝒂𝒕 𝟕𝑷𝑴, 𝑻𝒉𝒖𝒓𝒔𝒅𝒂𝒚, 𝟑𝒓𝒅 𝑶𝒄𝒕𝒐𝒃𝒆𝒓 𝟐𝟎𝟐𝟒, 𝑹𝒊𝒚𝒂𝒅𝒉

𝐊𝐇𝐎𝐁𝐀𝐑:
𝑺𝒖𝒃𝒂𝒊𝒌𝒂: Landmark Supermarket

𝐑𝐈𝐘𝐀𝐃𝐇:
𝑴𝒂𝒍𝒂𝒛: Thambis Restaurant, Anjappar Restaurant, Grand Lucky, Spice Club
𝑯𝒂𝒓𝒂: Moonlight Restaurant
𝑺𝒖𝒍𝒂𝒚: New Alankar Restaurant, Curry Pot
𝑬𝒙𝒊𝒕-𝟏𝟕: Koohetoor Restaurant
𝑬𝒙𝒊𝒕-𝟏𝟖: Asian Market
𝑬𝒙𝒊𝒕-𝟔: Welcome Restaurant
𝑩𝒂𝒕𝒉𝒂: Madura Metro Cafe, Best Choice, Nellai Tea Stall
𝑨𝒛𝒊𝒛𝒊𝒚𝒂𝒉: Chilli’s Restaurant, Star Plaza Fast Food – Nesto
𝑴𝒖𝒓𝒂𝒃𝒃𝒂: Al Hussain Watches, Riyadh Avenue Mall
𝑹𝒂𝒘𝒅𝒂𝒉: New Chennai Darbar

𝑪𝒐𝒏𝒕𝒂𝒄𝒕 𝒖𝒔:
𝟎𝟓𝟑 𝟑𝟐𝟑 𝟖𝟕𝟕𝟏
𝟎𝟓𝟑 𝟗𝟎𝟒 𝟒𝟎𝟗𝟒

🌐 For online booking:
https://greatindiafest.com/

ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் - மருத்துவ சேவை அணி நடத்திய22வது மாபெரும் இரத்ததான முகாம்!!!  ஏக இறைவனின் திருப...
25/08/2024

ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் - மருத்துவ சேவை அணி நடத்திய
22வது மாபெரும் இரத்ததான முகாம்!!!

ஏக இறைவனின் திருப்பெயரால்...

🩸 78வது இந்திய சுதந்திர தினத்தை*
முன்னிட்டு
ரியாத் மத்திய மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) - மருத்துவ சேவை அணி மற்றும் கிங் சவூத் இரத்த வங்கி இணைந்து நடத்திய 22வது மாபெரும் இரத்ததான முகாம் 23/08/2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை சுமைசி இரத்த வங்கியில் சிறப்பாக நடைபெற்றது.

🩸இரத்ததான முகாமிற்கான அறிவிப்பு செய்தவுடன் அயராத உழைப்பாலும் , தொடர் அழைப்பு பணியாலும் இறைவனின் கிருபையாலும் ரியாத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட குருதிக் கொடையாளர்கள்* கலந்து கொண்டு தங்களுடைய இரத்தத்தை தானமாக வழங்கினர் . மேலும் நேரமின்மை காரணமாக , இன்னும் பல சகோதரர்கள் இரத்ததானம் செய்ய முடியாமல் வருத்தத்துடன் திரும்பி சென்றனர்.

🩸குறுதி வழங்கிய அனைவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் பழங்களுடன் பரிசு பை வழங்கப்பட்டது.

🩸முகாம் வெற்றிகரமாக நடைபெற்றதற்காக களப்பணியாற்றிய சகோதரர்களுக்கும் , காலை & மதிய உணவு ஏற்பாடு செய்து தந்த சகோதரர்களுக்கும், வாகன ரீதியாக உதவி செய்த சகோதரர்களுக்கும் , ஊடக ரீதியாக உதவிய சகோதரர்களுக்கும் , மருத்துவ ஊழியர்களுக்கும் , இரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் , சுமைசி மருத்துவமனை நிர்வாகிகளுக்கும் , தண்ணீர் , தேநீர் , குளிர்பானம் மற்றும் பழங்கள் போன்றவைகளை ஏற்பாடு செய்து தந்த சகோதரர்களுக்கும், இந்த முகாம் சிறக்க எல்லா வகையிலும் உதவிய அனைத்து சகோதரர்களுக்கும் , காலை உணவு வழங்கிய முரூஜ் கேரளா ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்திற்கும் , மதிய உணவு வழங்கிய தம்பிஸ் உணவகத்திற்கும், மண்டல & கிளை நிர்வாகிகளுக்கும் , செயற்குழு & பொதுகுழு உறுப்பினர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

இந்த நிகழ்வில் NRTIA சவுதி அரேபியா ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சந்தோஷ் அவர்களும் ரியாத் இந்திய தூதரக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவில் அங்கம் வகிக்கும் நெல்லை ஏர்வாடி முகைதீன் சலீம் அவர்களும், வெளிநாட்டு தமிழர்கள் நலச்சங்கம் நிர்வாகிகளும் யுனிவர்சல் தமிழர்கள் நலச்சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கி சிறப்பித்தனர்..

🩸 ரியாத் மத்திய மண்டல மருத்துவ சேவை அணி சார்பாக நடைபெற்ற இந்த முகாமிற்கு அனுமதி உள்ளிட்ட உழைப்புகளை மேற்கொண்ட சமூக நலத்துறை நிர்வாகிகளுக்கும் பம்பரம் போல் செயலாற்றிய மருத்துவ சேவை அணி பொறுப்பாளர்கள் மற்றும் மண்டல நிர்வாகிகள் , உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்..

🩸உங்கள் அனைவரது உழைப்பையும் பங்களிப்பையும் எல்லாம் வல்ல அந்த ஏக இறைவன் அங்கீகரித்து நன்மைகளை வழங்கி அருள் புரிவானாக!!!

என்றும் சமுதாய பணியில் கடல் கடந்து;;;

இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் ( IWF )
மத்திய மண்டலம்
ரியாத் - சவூதி அரேபியா

_தொகுப்பு:_திருச்சி மீடியா ரஹ்மத்துல்லாஹ்

இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை  முன்னிட்டு ரியாத் மத்திய மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மருத்துவ சேவை அணி மற்றும்...
14/08/2024

இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு

ரியாத் மத்திய மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மருத்துவ சேவை அணி

மற்றும் கிங் சவுத் இரத்த வங்கி

இணைந்து நடத்தும்

மாபெரும் இரத்ததான முகாம்

🗓 நாள் 23/8/2024 வெள்ளிக்கிழமை

🏥 இடம்:சுமைசி மருத்துவமனை ரியாத்

⏰ நேரம்: காலை 09.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை
✴ குறிப்பு:

இரத்ததானம் செய்ய விரும்புவோருக்கு
வாகன வசதி🚌,

காலை மற்றும் மதிய உணவு 🍽 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

🩸🩸🩸உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் என்ற உன்னத நோக்கோடு அழைக்கின்றது

இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF)
மருத்துவ சேவை அணி மத்திய மண்டலம் ரியாத்
சவுதி அரேபியா*
📞0549874362, 0554986304, 0509727009, 0510427901

Address

Al Hira Road, , Ihala Kottaramulla
Nattandiya
61154

Alerts

Be the first to know and let us send you an email when Equal Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Equal Media:

Share